தங்கம் விலை தொடர் சரிவு.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு.. வாங்கலாமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏழாவது நாளாக இன்றும் சற்று சரிவில் காணப்படுகிறது.

 

இது பெரியளவில் சரிவினைக் காணவிட்டாலும், சற்று சரிவில் காணப்படுகிறது. இது தங்க வர்த்தகர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் கிடைத்த மிக நல்ல வாய்ப்பு என்றே கூறலாம்.

ஏனெனில் முந்தைய அமர்வில் தங்கம் விலையானது 1791.90 டாலர்கள் வரையில் குறைந்தபட்சம் சென்று இருந்தாலும், முடிவில் 1805.40 டாலர்களாக முடிவடைந்துள்ளது. இன்று தொடக்கத்திலும் 1807.55 டாலர்களாகவே தொடங்கியுள்ளது. ஆக இது தற்போது சற்று குறைந்திருந்தாலும். அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

தங்கம் விலை ஆறாவது நாளாக சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன.. எவ்வளவு குறைந்திருக்கு..!

மீடியம் டெர்ம் நிலவரம்

மீடியம் டெர்ம் நிலவரம்

அதோடு சர்வதேச சந்தையில் நேற்றைய உச்சத்தினையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் இந்த சரிவு இப்படியே தொடருமா? இனியும் குறையுமா? இனி விலை எப்படி இருக்கும்? டெக்னிக்கலாக தங்கம் விலை எப்படியுள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? சாதக பாதகமான காரணிகள் என்ன என பல கேள்விகள் எழுந்துள்ளன.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 1.70 டாலர்கள் குறைந்து, 1803.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் தற்போது சற்று குறைந்திருந்தாலும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் இறுதி வர்த்தக நாள் என்ற நிலையில் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் புராபிட் புக்கிங் செய்யவும் வாய்ப்புள்ளது.

காமெக்ஸ் வெள்ளி விலை
 

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போல அல்லாமல், வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து தான் காணப்படுகிறது. எனினும் இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது விலை அவுன்ஸூக்கு 0.19% அதிகரித்து, 25.433 டாலர்களாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது, தற்போது 10 கிராமுக்கு 29 ரூபாய் குறைந்து, 47,605 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் குறைந்த விலை, உச்ச விலை எதையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையிலும் இன்று வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 130 ரூபாய் அதிகரித்து, 67,500 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வாங்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 6 ரூபாய் அதிகரித்து, 4,506 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து, 36,048 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 15 ரூபாய் அதிகரித்து, 4,916 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 39,328 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, 72.30 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 72,300 ரூபாயாகவும் காணப்படுகிறது. இரண்டாவது நாளாக வெள்ளி விலையானது தொடர்ந்து சற்று அதிகரித்துள்ளது.

ஏன் உச்சம்

ஏன் உச்சம்

அமெரிக்க பத்திர சந்தையானது சற்று சரிந்துள்ள நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று அழுத்தத்தில் காணப்படுகிறது. இதனை இன்னும் அழுத்தம் காணும் விதமாக அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்தானது தரவுகள் சற்று சரிவில் வந்துள்ளன. ஆக இது இன்னும் சிறிது காலத்துக்கு வட்டி குறைப்பை அப்படியே வைத்திருக்க மத்திய வங்கியை தூண்டலாம். ஆக இது தங்கம் விலை ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய லெவலுக்கு மேல் வர்த்தகம்

முக்கிய லெவலுக்கு மேல் வர்த்தகம்

தங்கத்தின் முக்கிய லெவலான 1800 டாலர்களுக்கு மேலேயே, தொடர்ந்து தங்கத்தின் விலையானது வர்த்தகமாகி வருகின்றது. முந்தைய அமர்வில் தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டிருந்தாலும், முடிவில் 1800 டாலர்களுக்கு மேலாகவே முடிந்துள்ளது. ஆக நிபுணர்கள் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் காணவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறியுள்ளனர்.

தங்கத்திற்கு சாதகம்

தங்கத்திற்கு சாதகம்

கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள இந்த நிலையில், அமெரிக்காவில் வேலையின்மை நலன் குறித்தான தரவானது கடந்த வாரத்தில் உச்சம் தொட்டது. இது வேலை சந்தையில் இன்னும் முழுமையான இயல்பு நிலை வரவில்லை என்பதையே காட்டுகின்றது. இதற்கிடையில் பொருளாதாரம் குறித்தான தரவும் தங்கத்திற்கு சாதகமாகவே வந்துள்ளது.

ஐரோப்பிய மத்திய வங்கிகள்

ஐரோப்பிய மத்திய வங்கிகள்

கொரோனாவினால் சரிவினைக் கண்டுள்ள பொருளாதாரத்தினை மேம்படுத்த, ஐரோப்பிய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை இன்னும் குறைவாகவே வைத்துள்ளன. ஆக இது பொருளாதாரம் மேம்பட வழிவகுக்கும் என்றாலும், தற்போதைக்கு தங்கத்திற்கு ஆதரவாகவே இதுவும் அமைந்துள்ளன.

பெரியளவில் மாற்றமில்லை

பெரியளவில் மாற்றமில்லை

தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்து காணப்பட்டாலும், பெரியளவில் சரிவில் காணப்படவில்லை. எப்படியிருப்பினும் தங்கத்தின் முக்கிய லெவலான 1800 டாலர்களுக்கு மேலேயே காணப்படுகிறது.

இதே இந்திய சந்தையில் கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தில் இருந்து, தங்கம் விலையானது 10 கிராமுக்கு 8,500 ரூபாய்க்கும் மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. எனினும் இந்திய சந்தையினை பொறுத்தவரையில் நடப்பு ஆக்ஸ்ட் கான்ட்ராக்ட், ஆக்ஸ்ட் 5 அன்று எக்ஸ்பெய்ரி என்பதால் அடுத்த கான்ட்ராக்டில் வாங்கலாம்.

கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்

கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்

சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், நிதி நெருக்கடிகள், பணவீக்கம், பொருளாதாரம், அமெரிக்க பத்திர லாபம், உருமாறிய கொரோனா பரவல், லாக்டவுன் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல முக்கிய காரணிகளும் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய காரணிகளாக உள்ளன. ஆக முதலீட்டு ரீதியில் தங்கத்தின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகமாகவே உள்ளது.

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

இந்திய சந்தையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல் - 47,394, 47,152, 47,763 ரூபாயாகும்

ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் -. 47,782, 47,930, 48,319 ரூபாயாகும்.

வெள்ளியின் முக்கிய சப்போர்ட் லெவல் - 66,820, 66,266, 65,368 ரூபாயாகும்

ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் -. 67,718, 68,062, 68,960 ரூபாயாகும்.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது தற்போது சற்று குறைந்திருந்தாலும் தொடர்ந்து அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. ஏனெனில் இன்று வார இறுதி என்பதால் புராபிட் புக்கிங் செய்தால் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. இதே ஆபரண தங்கம் என்பது நீண்டகால நோக்கில் தேவையானது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today on july 23rd, 2021; gold price trade nearly 1803/oz, its right time to buy gold?

Gold prices down today in MCX and COMEX, but lower prices may support to buy
Story first published: Friday, July 23, 2021, 11:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X