இந்தியா சீனா பிரச்சனை! வரலாறு காணா உச்சத்தில் தங்கம் விலை! சாமானியன் தங்கத்த வாங்குன மாதிரி தான்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம், வெறுமனே நகை நட்டுகளாக மட்டும் போட்டுக் கொள்வதற்கு பயன்படும் சமாச்சாரம் அல்ல. அவசர தேவைக்கு நிதி உதவி செய்யும் நண்பனும் கூட.

 

ஆகையால் தான், இந்தியாவின் கடைக் கோடி மனிதர்கள் கூட தங்கத்தின் மீது காதல் கொண்டு திரிகிறார்கள்.

இந்த கொரோனா காலத்தில் கூட, தனி நபர் கடனைக் கேட்டால் முகத்தைச் சுளிக்கும் வங்கிகள், வீட்டில் இருக்கும் தங்கத்தைக் கொண்டு போய் வைத்தால் Gold Loan தருகிறார்கள். அப்படிப்பட்ட தங்கத்தின் விலை, இன்று கிட்டத்தட்ட சாமானியர்கள் வாங்க முடியாத விலையை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறது.

தங்கம் விலை ஏற்றம்

தங்கம் விலை ஏற்றம்

நம் சிங்காரச் சென்னையில், கொரோனா எண்ணிக்கை எப்படி எக்ஸ்பிரஸ் வேகத்தில் அதிகரிக்கிறதோ, அதோடு பல மடங்கு வேகத்தில் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலையும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. மார்ச் 19, 2020 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 41,920 ரூபாயாக இருந்தது. ஆனால் நேற்று அதே 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 49,670 ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது. ஆக 3 மாத காலத்தில் சுமாராக 8,000 ரூபாய் விலை அதிகரித்து இருக்கிறது.

24 கேரட் தங்கம் பவுன் விலை

24 கேரட் தங்கம் பவுன் விலை

நேற்று சென்னையில், 24 கேரட் 10 கிராம் தங்கம் 49,670 ரூபாய்க்கு வரலாறு காணாத விதத்தில் விலை அதிகரித்து விற்பனை ஆகி இருக்கிறது. 24 கேரட் 1 பவுன் தங்கம் விலை 39,736 ரூபாய்க்கு விற்பனை ஆகி சாமானிய மக்களை கதி கலங்க வைத்து இருக்கிறது.

22 கேரட் தங்கம் பவுனுக்கு எவ்வளவு?
 

22 கேரட் தங்கம் பவுனுக்கு எவ்வளவு?

அதே போல சென்னையில், 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 45,530 என்கிற வரலாற்று உச்ச விலையில் விற்பனை ஆகி இருக்கிறது. ஒரு பவுன் 22 கேரட் தங்கம் விலை 36,424 ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது. இப்படியே விலை ஏறினால் மாத சம்பளம் வாங்குபவர்கள், கூலித் தொழிலாளிகள், ஏழை எளிய மக்கள் எல்லாம் எப்படி தங்கத்தை வாங்க முடியும்..?

அமெரிக்க டாலர்

அமெரிக்க டாலர்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 76.21 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இது தங்கத்தின் விலையை, இந்திய ரூபாயில் அதிகரிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. இந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவதும், மார்ச்சில் இருந்து தான் தொடங்கி இருக்கிறது.

இந்தியா சீனா பிரச்சனை

இந்தியா சீனா பிரச்சனை

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, மார்ச்சுக்கு முன்பு வரை 72 - 73 ரூபாய்க்குள்ளேயே பெரிதும் வர்த்தகமாகி வந்தது கவனிக்கத்தகக்து. இந்தியா சீனா பிரச்சனையால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, மேலும் சரிய வாய்ப்பு இருக்கிறது. இது தங்கத்தின் விலையில் நேரடியாக எதிரொலித்து, மேலும் தங்கம் விலை அதிகரிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.

சர்வதேச தங்கம்

சர்வதேச தங்கம்

இந்திய ரூபாய் மதிப்பிலான தங்கம், அமெரிக்க டாலரால் தான் விலை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது எனச் சொன்னோம் இல்லையா? அதை நிரூபிக்கும் விதத்தில், ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை இன்று 1,729 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. தன் பழைய உச்சமான 1,748 டாலரையோ அல்லது கடந்த வார உச்சமான 1,738 டாலரையோ தொடவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலாக விஷயம்.

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம்

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம்

இந்தியாவின் கமாடிட்டி சந்தையான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், ஆகஸ்ட் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை நேற்று 47,026 ரூபாய்க்கு நிறைவடைந்தது. ஆனால் இன்று, தன் உச்ச விலையாக 47,650 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக, சர்வதேச அளவில் தங்கம் விலை ஏற்றம் நின்றாலும், இந்தியாவில் மெல்ல தங்கம் விலை ஏற்றம் கண்டு கொண்டு தான் இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price touched historical high amidst india china issue

Gold price touched its historical high amidst India china issue. The dollar vs rupee exchange rate may affect the gold price further
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X