பலத்த சரிவில் தங்கம் விலை.. நான்காவது நாளாக மீண்டும் சர்பிரைஸ்..இன்னும் குறையுமா.. இன்று வாங்கலாமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த மூன்று தினங்களாகவே குறைந்து வரும் தங்கம் விலையானது., நான்காவது நாளாக இன்றும் சரிவில் காணப்படுகிறது. இது உண்மையில் முதலீட்டாளர்களுக்கு கிடைத்துள்ள சர்பிரைஸ் என்று தான் கூற வேண்டும்.

ஏனெனில் கடந்த மாதம் தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தினை தொட்டு வந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சற்று சரிவினைக் கண்டு வருகிறது.

இது இன்னும் குறையுமா? இப்போது வாங்கலாமா? அடுத்து என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.

SBI ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தொடங்கி வீட்டுக் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்கள் வரை!

தங்கம் சரிவதற்கான அறிகுறி
 

தங்கம் சரிவதற்கான அறிகுறி

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது இன்று தொடர்ந்து நான்காவது நாளாக பலத்த சரிவில் காணப்படுகின்றது. அதோடு தங்கத்தின் தொடக்க விலையானது நேற்றைய முடிவு விலையினை விட சற்று கீழாக தொடங்கியுள்ளது. இது அவுன்ஸூக்கு 1857.20 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 1857.15 டாலர்களாக தொடங்கியுள்ளது. இது சந்தை கீழ் நோக்கி செல்லலாம் என்பதற்கான அறிகுறியாகும்.

இன்றைய சர்வதேச தங்கம் விலை நிலவரம்

இன்றைய சர்வதேச தங்கம் விலை நிலவரம்

எனினும் நேற்றைய குறைந்த பட்ச விலையானது 1856 டாலரினை உடைத்து சென்றால், இன்றும் தங்கம் விலையானது சற்று குறைய வாய்ப்புள்ளது என்கின்றனர் கமாடிட்டி நிபுணர்கள். அதெல்லாம் சரி தற்போதைய விலை நிலவரம் என்ன? தற்போது சர்வதேச தங்கத்தின் விலை அவுன்ஸூக்கு 8.40 டாலர்கள் குறைந்து 1860 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலையானது அதிகபட்சமாக 2089.20 டாலர்களை தொட்டிருந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது 1860 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது 229 டாலர்கள் சரிவாகும். இது உண்மையிலேயே பலத்த சரிவு என்று தான் சொல்ல வேண்டும்.

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் வெள்ளியின் விலையானது தங்கத்தினை போலவே நான்காவது நாளாக சரிந்து வருகின்றது. தற்போது வெள்ளியின் விலை அவுன்ஸூக்கு 3.74% வீழ்ச்சி கண்டு, 22.215 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையும் நேற்றைய முடிவு விலையை விட கீழாகத் தான் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பலத்த சரிவுக்கு என்ன காரணம்?
 

இந்த பலத்த சரிவுக்கு என்ன காரணம்?

தங்கம் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான, டாலரின் மதிப்பானது சற்றே வலுவாக காணப்படுகிறது. இது தங்கத்தின் விலை குறைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதோடு இன்று வெளியாக இருக்கும் வேலையின்மை நலன் குறித்தான அமெரிக்க தரவு, முதலீட்டாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது. இதுவும் தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது. ஏனெனில் சந்தைக்கு சாதகமாக தரவுகள் வந்தால், டாலரின் மதிப்பு இன்னும் வலுவடையலாம், இதனால் தங்கம் விலை சரியலாம் என்ற எண்ணமும் நிலவி வருகின்றது.

புராபிட் புக்கிங் செய்யும் முதலீட்டாளர்கள்

புராபிட் புக்கிங் செய்யும் முதலீட்டாளர்கள்

தங்கத்தினை நீண்டகால நோக்கில் வாங்கி வைத்துள்ள முதலீட்டாளர்கள் தங்கம் பலத்த சரிவினைக் கண்டு வரும் நிலையில், இருக்கும் லாபத்தினையாவது தக்க வைத்து கொள்ள புராபிட் செய்யலாம். ஏனெனில் மலிவு கிடைக்கும் போது பின்னர் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணமும் எழுந்துள்ளது. ஏனெனில் நிபுணர்களும் தங்கத்தினை வாங்க ஒரு வாய்ப்பினை கொடுத்து தான் செல்லும் என்றும் கூறி வருகின்றனர்.

மோதிலால் ஆஸ்வால் என்ன சொல்கிறது?

மோதிலால் ஆஸ்வால் என்ன சொல்கிறது?

மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று கூறியிருந்தது. எனினும் இது நடுத்தர காலத்தில் காமெக்ஸ் சந்தையில் அவுன்ஸூக்கு 1840 - 1850 டாலர்கள் வரை செல்லலாம். இதே இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 49,000 ரூபாய் வரையில் செல்லலாம் என்றும் கூறியிருந்தது. அதோடு அடுத்த ஆண்டில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 2,450 டாலர்கள் வரையில் செல்லலாம். இதே இந்திய சந்தையில் 65,000 - 68,000 ரூபாய் வரை செல்லலாம் என்றும் கணித்திருந்தது.

இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் பரவல்

இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் பரவல்

ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் உள்ளதோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் சில ஐரோப்பிய பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் இது தூண்டுவதாகவும் உள்ளது. இதனால் மீண்டும் தொழில் துறையானது பாதிக்கும் என்றும் ஒரு அறிக்கை காட்டுகின்றது. ஆக இது நீண்ட கால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க ஒரு காரணமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்த வரையில், சர்வதேச சந்தையின் எதிரொலியாக 4வது நாளாக இன்றும் சரிந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது, 232 ரூபாய் குறைந்து, 49,271 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலையானது முந்தைய அமர்வில் 49,508 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 49,400 ரூபாயாக தொடங்கியுள்ளது கவனிக்க தக்க விஷயம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளியின் விலையும் தொடர்ந்து 4வது நாளாக சரிந்து வருகின்றது. தற்போது கிலோவுக்கு 2013 ரூபாய் குறைந்து, 56475 ரூபாயாக வர்த்தககமாகி வருகிறது, வெள்ளியின் விலையும் புதன் கிழமையன்று 58,488 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 57,900 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது, இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று இன்னும் பெரியளவில் மாற்றம் காணப்படாத நிலையில், புதன் கிழமையன்று கிராமுக்கு, 4,810 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, 38,480 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலை இன்னும் மாற்றம் காணாத நிலையில் காணப்படுகிறது. இது நேற்று கிராமுக்கு 59 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1,600 ரூபாய் குறைந்து, 59,000 ரூபாயாக காணப்படுகிறது. உண்மையில் முதலீட்டாளர்களுக்கு இது மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

அதெல்லாம் சரி இன்று தங்கத்தினை வாங்கலாமா?

அதெல்லாம் சரி இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தினை நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். நிபுணர்களின் கருத்துப் படி, தங்கத்தினை இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில், நீண்டகால நோக்கில் எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம். ஏனெனில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்றே கூறுகின்றனர். எனினும் குறைந்த முதலீடு மற்றும் intraday வணிகம் செய்பவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices again fall today amid dollar stronger

Gold and silver prices again fall today amid dollar stronger
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?