மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம்.. 2-வது நாளாக எகிறி வரும் தங்கம் விலை.. நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிட்டோமோ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இரண்டாவது நாளாக மீண்டும் இன்றும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

நிபுணர்கள் சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் தங்கத்தினை வாங்கி வைக்கலாம். ஏனெனில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றே கூறியிருந்தனர். இதனை பலமுறை நமது கட்டுரையில் நாம் தெரிவித்து இருந்தோம்.

சொல்லப்போனால் கமாடிட்டி நிபுணர் ஒருவர் தங்கத்தினை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம். அது நிச்சயம் லாபகரமானதாக இருக்கும். என்ன குறைந்த விலையில் வாங்கும் போது அது மிக நல்ல லாபமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

 இது மிக நல்ல வாய்ப்பு
 

இது மிக நல்ல வாய்ப்பு

உண்மையில் கடந்த வாரம் முழுக்க தடுமாறிக் கொண்டிருந்த தங்கம் விலையானது டாலரில் அவுன்ஸுக்கு 1911.70 டாலர் வரை கூட சென்றது. ஆனால் தற்போது 1975.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக உண்மையில் இது மிக நல்ல வாய்ப்பு தானே. சரி தங்கம் விலை அதிகரிக்க என்ன காரணம்? இனி எப்போது குறையும்? மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா? வாருங்கள் பார்க்கலாம்.

டாலரின் மதிப்பும் ஒரு காரணம்

டாலரின் மதிப்பும் ஒரு காரணம்

அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலையானது, மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதோடு இன்று நடக்க விருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில், ஊக்குவிப்பு சலுகைகள் ஏதேனும் இருக்குமா? பொருளாதாரத்தினை மேம்படுத்த எந்த மாதிரியான அறிவிப்புகள் இருக்கும் என்று வர்த்தகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கோடக் செக்யூரிட்டீஸ் என்ன சொல்கிறது?

கோடக் செக்யூரிட்டீஸ் என்ன சொல்கிறது?

தங்கம் விலையானது அமெரிக்கா டாலர் மற்றும் பங்கு சந்தைகளின் குறியீடுகளை எதிரொலிக்கிறது. தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1900 - 2000 டாலர்கள் என்ற வரம்பிலேயே உள்ளன. இது இந்த வரம்பினை உடைக்காவிட்டால் தங்கம் விலை இப்படியே தொடரலாம் என்றும் கோடக் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

எதிர்பார்ப்பு
 

எதிர்பார்ப்பு

இன்று நடக்கவிருக்கும் அமெரிக்க ஃபெடரல் வங்கிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், அமெரிக்கா டாலரின் மதிப்பில் எதிரொலிக்கலாம் என்றும் ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் கூறியுள்ளார். முன்னதாக ஒரு அறிக்கையில் ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், மத்திய வங்கி சராசரி பணவீக்க இலக்கினை ஏற்றுக் கொள்ளும். அதாவது அவை நீண்ட காலத்திற்கு வட்டி விகிதம் அப்படியே வைத்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. பவலின் இந்த அறிக்கைக்கு பின்னர் டாலரின் மதிப்பு பெரியளவில் சரிவினைக் காணவில்லை என்பது கவனிக்கதக்க விஷயம்.

 பத்திர லாபம் வீழ்ச்சி காணும்

பத்திர லாபம் வீழ்ச்சி காணும்

இது குறைவான வட்டி விகிதங்கள் லாபம் தராத பத்திரங்களை வைத்திருக்கும் வாய்ப்பினை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் நல்ல லாபம் தரக்கூடிய தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலை அதிகரிப்புக்கு ஒரு காரணமாக அமையலாம்.

பிரெக்ஸிட் ஒப்பந்தம்

பிரெக்ஸிட் ஒப்பந்தம்

பிரெக்ஸிட்டுக்கு பிந்தைய பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கும் அக்டோபர் 15ஐ இறுதிக் கெடுவாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தேர்தெடுத்துள்ளது எந்த ஒப்பந்தமும் ஏற்படாமல் போய்விடுமோ என்ற பயத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின் சில பகுதிகளை விரிவாக்கி எழுதும் வகையில் ஒரு சட்டத்தினை கொண்டு வரும் வகையிலும் பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. ஆக இப்படி நிச்சயமற்ற நிலையில் தங்கம் விலையானது பெரும்பாலும் பாதுகாப்பு புகலிடமான விளங்குவதால் தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம்.

 சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் வாரத்தின் இரண்டாசர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, 0.60% ஏற்றத்துடன் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 12.05 டாலர்கள் அதிகரித்து, 1975.75 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரம் முழுக்க சற்று சரிவில் இருந்த தங்கம் விலையானது இன்றும் சற்று ஏற்றம் கண்டு வருகிறது. அதோடு இன்று நடக்கவிருக்கும் ஃபெடரல் கூட்டத்தின் எதிரொலியானது தங்கம் விலையில் மாற்றத்தினைக் கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வது நாளான இன்று, 0.60% ஏற்றத்துடன் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 12.05 டாலர்கள் அதிகரித்து, 1975.75 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரம் முழுக்க சற்று சரிவில் இருந்த தங்கம் விலையானது இன்றும் சற்று ஏற்றம் கண்டு வருகிறது. அதோடு இன்று நடக்கவிருக்கும் ஃபெடரல் கூட்டத்தின் எதிரொலியானது தங்கம் விலையில் மாற்றத்தினைக் கொடுக்கலாம்.

 சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது சர்வதேச சந்தையில் 1.22% ஏற்றம் கண்டுள்ளது. இது தற்போது அவுன்ஸூக்கு 0.317 டாலர்கள் அதிகரித்து, 27.683 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையானது இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டு வருகிறது. இது இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக 10 கிராம் தங்கம் விலையானது 238 ரூபாய் அதிகரித்து, 51,925 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது தற்போது 0.43% ஏற்றத்தில் காணப்படுகிறது. நடப்பு மாத தொடக்கத்தில் இருந்தே சரிந்து வரும் தங்கம் விலையானது, நடப்பு வாரத் தொடக்கத்தில் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

டிசம்பர் கான்டிராக்டில் வெள்ளியின் விலையானது இரண்டாவது நாளாக இன்றும் ஏற்றம் கண்டு வருகிறது. இது தற்போது கிலோவுக்கு 487 ரூபாய் அதிகரித்து, 69,452 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தற்போது 0.73% ஏற்றம் கண்டுள்ளது. சமீப காலமாக தங்கம் விலையினைப் போலவே வெள்ளியின் விலையானது வர்த்தகமாகி வரும் நிலையில், இனியும் தங்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வெள்ளியின் விலையும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices again start to rise in second day

Gold and silver prices are starts to increase today
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X