உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.5,700க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா? வாங்கலாமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த மூன்று தினங்களாக தங்கம் விலை சரிந்து வந்த நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் உள்ளது. நிபுணர்கள் கூறுவதை போல விரைவில் தங்கம் வரலாற்று உச்சத்தினை தாண்டி விடும் போல.

 

ஏனெனில் தங்கம் விலையானது இன்று அமெரிக்கா டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்து காணப்படும் நிலையில், பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலையானது இன்று ஏற்றம் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரி இன்றைய விலை நிலவரம் என்ன? எம்சிஎக்ஸ், சர்வதேச சந்தை நிலவரம் என்ன? தங்கம் மற்றும் வெள்ளியின் ஆபரண விலை எவ்வளவு? என்னென்ன காரணங்கள்? இன்று எப்படி இருக்கும்? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

வாரத்தின் இறுதியில் சர்பிரைஸ் கொடுத்த சந்தை.. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த சில வர்த்தக தினங்களாக தங்கம் விலையானது சரிவில் இருந்த நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் உள்ளது. இன்று தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 5.85 டாலர்கள் அதிகரித்து 1,873.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக இன்று சற்று ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய முடிவு விலையானது 1868.65 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 1868.70 டாலர்களாக தொடங்கியுள்லது. இது கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் 2089.20 டாலர்களை உச்சத்தல் இருந்து 215 டாலர்களுக்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது.

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நேற்றோடு கடந்த இரண்டு தினங்களாகவே சரிந்த வெள்ளியின் விலையானது, இன்று ஏற்றத்தினைக் காண ஆரம்பித்துள்ளது. தற்போது கிலோ வெள்ளியின் விலை 0.76% அதிகரித்து, 23.538 டாலர்களாக காணப்படுகிறது. எனினும் வெள்ளியின் விலையானது நேற்றைய முடிவு விலையினை விட சற்று கீழாகவே குறைந்து தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்
 

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

கடந்த மூன்று தினங்களாக சற்று சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 186 ரூபாய் அதிகரித்து, 50,461 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் 7 அன்று 56,200 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 5,778 ரூபாய் சரிவிலேயே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையானது கடந்த மூன்று தினங்களாக சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று கிலோவுக்கு 379 ரூபாய் அதிகரித்து, 60,520 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சமான வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 77,700 ரூபாயாக அதிகரித்தது. ஆக அதனுடன் ஒப்பிடும்போது 17186 ரூபாய் குறைவாகத் தான் உள்ளது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு வெள்ளியினை வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

அதிகரித்து வரும் கொரோனா தாக்கம்

அதிகரித்து வரும் கொரோனா தாக்கம்

சர்வதேச் அளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் கட்ட பரவலின் காரணமாக, லாக்டவுனில் மீண்டும் தளர்வுகள் கடுமையாக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறித்தான நடவடிக்கைகள் பாதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாலரின் மதிப்பு அழுத்தம்

டாலரின் மதிப்பு அழுத்தம்

நவம்பர் முதல் வாரத்தில் வரவிருக்கும் அமெரிக்கா தேர்தல், தேர்தலில் யார் ஜெயிப்பார்கள், அமெரிக்காவின் ஊக்கத்தொகை குறித்தான அறிவிப்பு இவையாவும் நிலையற்றதாகவே உள்ளது. ஒரு வேளை புதிய அரசாங்கம் அமைந்தால், இது மற்ற பொருளாதாரம் குறித்த கொள்கைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டாலரின் மதிப்பு அழுத்தம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இவையனைத்தும் தங்கத்திற்கு ஆதரவாக இருக்கலாம்.

முதலீட்டாளர்களுக்கு சாதகமான விஷயம்

முதலீட்டாளர்களுக்கு சாதகமான விஷயம்

சரிவில் உள்ள பொருளாதாரத்தினை மீட்டெடுக்க வட்டி குறைவு விகிதம் அப்படியே இருக்கலாம் என்று ஏற்கனவே, ஃபெடரல் வங்கி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என்பதால், குறைந்தபட்ச விலையில் இருப்பதால் முதலீட்டாளர்களுக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

தங்கம் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

Intraday levels

பைவோட் பாயிண்ட் - 50,323

சப்போர்ட் லெவல்கள் - 50,029, 49,776, 49,229

ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 50,576, 50,870, 51,417

Weekly levels

பைவோட் பாயிண்ட் - 50,910

சப்போர்ட் லெவல்கள் - 50,366, 49,893, 48,876

ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 51,383, 51,927, 52,944

வெள்ளி சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

வெள்ளி சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

Intraday levels

பைவோட் பாயிண்ட் - 59,762

சப்போர்ட் லெவல்கள் - 58,790, 57,408, 55,054

ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 61,144, 62,116, 64,470

Weekly levels

பைவோட் பாயிண்ட் - 62,565

சப்போர்ட் லெவல்கள் - 61,060, 59,672, 56,779

ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 63,953, 64,458, 68,351

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்

தங்கம் விலையானது அமெரிக்காவின் ஜிம் ராஜெர்ஸ், தாமஸ் கப்லன் என்ற தனி நபர்கள் முதல் கொண்டு, கிரெடி சூசி, பேங்க் ஆஃப் அமெரிக்கா, கோடக் செக்யூரிட்டீஸ், இப்படி சர்வதேச நிறுவனம் முதல், இந்திய மதிப்பீட்டு நிறுவனங்கள் தங்கம் விலை அதிகரிக்கு என்றே கணித்து வருகின்றனர். டாலரில் தங்கம் விலையானது 5,000 டாலர்கள் வரை செல்லலாம் என்றும் கணித்து வருகின்றனர். தங்கம் விலையானது எப்போது குறைந்தாலும் வாங்கி வைக்கலாம். அது நிச்சயம் நடப்பு ஆண்ட இறுதிக்குள்ளோ அல்லது அடுத்த ஆண்டிலோ ஏற்றம் காணலாம் என்றும் நிபுணர்கள் கூறிவருகின்றனர். ஆக நீண்டகால நோக்கில் தங்கம் வாங்க இது சரியான இடம் தான்.

ஆபரணத் தங்கம்

ஆபரணத் தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று குறைந்து காணப்பட்டது, இந்த நிலையில் இன்றும் கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து, 4,734 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து, 37,872 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது, இரண்டாவது நாளாக தங்கம், இன்றும் குறைந்துள்ளது கவனிக்கதக்கது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்பகிறது. கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து, 5,164 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 41,312 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தினை போலவே, தூய தங்கம் விலையானது கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்று குறைந்துள்ளது கவனிக்கதக்கது.

ஆபரண வெள்ளி

ஆபரண வெள்ளி

ஆபரண தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளியிபன் விலையானது இரண்டாவது நாளாக இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக கிராமுக்கு 0.90 பைசா ஏற்றம் கண்டு, 65.20 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 900 ரூபாய் ஏற்றம் கண்டு, 65,200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices down over Rs.5,700 from august month high

Gold prices down over Rs.5,700 from august month high, silver also down in over Rs.17,180 from august month high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X