உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.6800க்கு மேல் வீழ்ச்சி.. இது வாங்க சரியான நேரமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த 2020 ஒரு வழியாக முடிந்து புத்தாண்டும் முடிந்து, பொங்கலும் வந்து விட்டது. ஆனால் இதனால் தானோ என்னவோ தங்கம் விலையானது குறைந்து, தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்து விட்டது.

தற்போதும் கூட கொரோனாவுக்கு ஒரு முடிவு வந்த பாடாக இல்லை. எனினும் கொரோனா தடுப்பு மருந்து குறித்தான அறிவிப்புகள் விரைவில் சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் குறைந்த விலையானது, முதலீட்டாளர்களுக்கு தங்கத்தினை வாங்க ஆர்வத்தினை தூண்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு வகையில் நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், சர்வதேச சந்தையில் தங்கம் விலை என்னவாகுமோ என்ற உணர்வும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

புதிய வகை கொரோனா பரவல்
 

புதிய வகை கொரோனா பரவல்

ஏனெனில் பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் கடுமையான லாக்டவுன் பல இடங்களில் அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு கண்டு பிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளும், இந்த புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆக இது தங்கம் விலைக்கு சாதகமாக அமைந்துள்ளது.

டாலரின் வலிமை

டாலரின் வலிமை

ஏற்கனவே இரண்டாம் கட்ட ஊக்கத்தொகை குறித்து சாதகமான அறிவிப்புகள் வந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டமாக அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாலரின் வலிமை காரணமாக தங்கம் விலையானது சரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திர லாபம்

பத்திர லாபம்

அமெரிக்க டாலரின் வலிமை அதிகரித்துள்ள இந்த நேரத்தில், அமெரிக்க பத்திரங்களின் லாபமானது மீண்டு வர ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய ஆரம்பித்துள்ளன. இதன்

காரணமாக பாதுகாப்பு புகலிடமாக விளங்கும், தங்கம் விலையானது மீண்டும் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சத்தில் ரூ.6,800க்கு மேல் வீழ்ச்சி
 

உச்சத்தில் ரூ.6,800க்கு மேல் வீழ்ச்சி

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து, தங்கம் விலையானது, கடந்த ஆண்டிலிருந்து பார்க்கும்போது 6,800 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆக முதலீட்டாளர்களுக்கு இது வாங்க சரியான இடமாகவும் பார்க்கப்படுகிறது. அதோடு தினசரி கேண்டில் பேட்டர்னின் தங்கம் விலையானது அதிகரிக்கும் விதமாக பையிங் டிரெண்ட் பார்ம் ஆகிக் கொண்டுள்ளது. உண்மையில் இது குறைந்த விலையில் வாங்க முதலீட்டாளர்களுக்கு சரியான நேரம் தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை சர்வதேச சந்தையில் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம். ஏனெனில் பணவீக்கத்திற்கு எதிராக சிறந்த ஆபரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையின் சரிவினைத் தடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய விலை நிலவரம்

இன்றைய விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த சில தினங்களாக சரிவினைக் கண்ட நிலையில், இன்றும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 13.50 டாலர்களாக அதிகரித்து, 1857.80 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் 1,844.20 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 1858.90 டாலர்களாக தொடங்கியுள்ளது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையும் கடந்த சில தினங்களாக சரிவினைக் கண்ட நிலையில், இன்றும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 0.66% ஏற்றம் கண்டு, 25.600 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய நாள் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 49,325 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 49,045 ரூபாயாகவும், இன்று காலை தொடக்கத்தில் 49,130 ரூபாயாகவும் காணப்படுகிறது. இது சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, இன்றும் மூன்றாவது நாளாக ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 141 ரூபாய் அதிகரித்து, 66,031 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 65,906 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 66,500 ரூபாயாகவும் காணப்படுகிறது. இது சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், தினசரி கேண்டில் பேட்டர்னிலும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. அதிலும் உச்சத்தில் இருந்து 6,800 ரூபாய்க்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆக இது வாங்க சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices down over Rs.6,800 above from last year high

Gold price updates.. Gold prices down over Rs.6,800 above from last year high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?