இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. புதிய வரலாற்று உச்சத்திற்கு பின்பு கண்ட முதல் வீழ்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தங்கம் என்ற வார்த்தையை உச்சரிக்காத பெண்களே இல்லை என்று கூறலாம். அந்தளவுக்கு தங்கத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் நம் பெண்கள்.

அதனால் தானோ என்னவோ குழந்தைகளை கூட தங்கம் என்று செல்லமாக அழைக்கிறோம். ஆக அந்தளவுக்கு நம் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது தங்கம்.

ஆனால் தற்போது செல்லும் நிலையினைப் பார்த்தால் கனவில் மட்டும், தங்கத்தினை நினைத்து பார்க்கலாம் போல. ஏனெனில் நிஜத்தில் அதை பலரும் நினைத்து கூட பார்க்க முடியாத விலையினை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

புதிய வரலாற்று உச்சம்
 

புதிய வரலாற்று உச்சம்

அதிலும் தங்கம் விலையானது தொடர்ந்து புதிய உச்சத்தினை கண்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமையன்று இந்திய எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் மீண்டும் 10 கிராம் தங்கத்தின் விலையானது 48,871 ரூபாய் என்ற புதிய வரலாற்று உச்சத்தினை தொட்டது. எனினும் இன்று அதில் சற்று தளர்வுகள் அளிக்கப்படும் விதமாக தங்கம் விலையானது சற்று குறைய ஆரம்பித்துள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

எட்டு வருட உச்சத்தினை தொட்ட தங்கத்தின் விலையானது தற்போது சற்று சரிய ஆரம்பித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் உற்பத்தி குறித்தான தரவு மற்றும் கொரோனா வைரஸூக்கான தடுப்பு மருந்தின் சோதனையானது, சாதகமான முறையில் நம்பிக்கைக்குரிய விதத்தில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக அதன் மூலம் இந்த கொடிய கொரோனா என்னும் அரக்கனை தடுக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.

தங்கம் தேவை அதிகரிக்கும்

தங்கம் தேவை அதிகரிக்கும்

ஆக இதன் மூலம் சரிந்து போன பொருளாதாரத்தினை மீட்டெடுக்க உதவும் என்றும் நம்பப்படுகிறது. ஆக இவ்வாறு பொருளாதாரம் வளர்ச்சி கண்டால் அது தங்கத்தின் தேவையை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையையும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலையானது கடந்த புதன் கிழமையன்று வரலாற்று உச்சத்தினை தொட்டது.

உற்பத்தி அதிகரிப்பு
 

உற்பத்தி அதிகரிப்பு

அமெரிக்காவில் ஜூன் மாதத்தில் உற்பத்தி குறித்தான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவின் உற்பத்தி குறித்தான தரவானது நேர்மறையாக வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் சீனா, ஜெர்மனி மற்றும் பிரான்சில் இருந்தும் இதே போன்ற ஆய்வுகள் அனைத்தும் தொழில் சாலை செயல்பாட்டில் மீண்டு வருவதை காட்டுகிறது.

தங்கம் விலையை தக்க வைத்துக் கொள்ளும்

தங்கம் விலையை தக்க வைத்துக் கொள்ளும்

ஆக எதிர்பார்த்ததை விட பொருளாதாரம் குறித்தான நடவடிக்கைகள் மற்றும் கொரோனா வைரஸூக்கான மருந்துகள் சாதகமான உள்ள நிலையில், அது பங்கு சந்தையில் எதிரொலித்தது. இதனால் தான் இன்று தங்கம் விலையானது சற்று சரிய ஆரம்பித்தாலும், உச்ச விலையை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் பிலிப் ஃபியூச்சர்ஸ் ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது.

எதிர்பார்ப்பில் குறையும் தங்கம் விலை

எதிர்பார்ப்பில் குறையும் தங்கம் விலை

அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவு மற்றும் வாராந்திர வேலையின்மை நலன் குறித்தான கோரிக்கைகள் குறித்த தரவுகள் இன்று வரவுள்ள நிலையில், தங்கத்திற்கு சிறிது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது சற்று சாதகமாக வரும் என்ற எதிர்பார்ப்பில், தற்போது தங்கம் விலையானது சற்று குறைந்து வருகிறது.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலையானது இராண்டாவது நாளாக சரிந்து வருகிறது. தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3.15 டாலர்கள் குறைந்து, 1,776.75 டாலர்களாக குறைந்து வர்த்தகமாகி வருகிறது, இது தற்போது 0.17 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. காமெக்ஸ் தங்கம் விலையும் புதன் கிழமையன்று அதிகபட்சமாக 1807.65 டாலர்களாக அதிகரித்து காணப்பட்டது. இது கடந்த மாதத்தில் 1804 டாலர்களாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது இரண்டாவது நாளாக தொடர்ந்து சரிந்து வருகிறது. இது 0.11% வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது 0.020 டாலர்கள் குறைந்து, 18.198 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெள்ளியின் விலையானது அதிகபட்சமாக 19.870 டாலர்கள்; வரையில் சென்ற நிலையில், தற்போது மீண்டும் அதனை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலையானது, புதன் கிழமையன்று புதிய வரலாற்று உச்சத்தினை தொட்ட நிலையில், இன்று சரிவில் ஆரம்பித்துள்ளது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 79 ரூபாய் குறைந்து, 48,188 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது 0.16% வீழ்ச்சியாகும்.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளியின் விலையானது சற்று சரிவுடன் தொடங்கியுள்ளது. தற்போது 62 ரூபாய் குறைந்து, 48,708 ரூபாயாக காணப்படுகிறது. வெள்ளியின் விலையினை பொறுத்தவரையில், தொழில்துறை வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில் வெள்ளியின் தேவை அதிகரிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கத்தின் விலை

ஆபரண தங்கத்தின் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது மாதத்தின் முதல் நாளான புதன் கிழமையன்று சவரனுக்கு 376 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று இதுவரையில் இன்னும் தங்கம் விலையில் மாற்றம் காணாத நிலையில் புதன் கிழமையன்று கிராமுக்கு 47 ரூபாய் அதிகரித்து, (22 கிராம் தங்கம்) கிராமுக்கு 4674 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 37,392 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது இன்று இன்னும் மாற்றம் காணாத நிலையில், கிராமுக்கு 50.05 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலையானது 1500 ரூபாய் அதிகரித்து 50,050 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையானது கடந்த ஆறு தினங்களாகவே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall after new record high in Wednesday

Gold and silver prices are both MCX and comex were down in morning session.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more