சாமனியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. 3-வது நாளாக தங்கம் விலை சரிவு.. இன்னும் குறையுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது இன்றோடு மூன்றாவது நாளாக மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது. சர்வதேச பங்கு சந்தைகள் மீண்டும் ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், அதன் எதிரொலியாக தங்கம் விலையானது மீண்டும் சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது.

ஏனெனில் பங்கு சந்தைகள் அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மீண்டும் பங்கு சந்தையில் தங்களது முதலீடுகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் பாதுகாப்பு புகலிடமாக இருக்கும் தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளனர். இதனால் தங்கம் விலையானது மீண்டும் சரிவு பாதையை நோக்கி சென்று கொண்டுள்ளது.

அதோடு கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள், ஆசிய பங்கு சந்தைகள் ஏற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. இதனால் தங்கம் விலையானது இந்திய சந்தையிலும் சற்று சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது.

இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?
 

இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?

இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? எவ்வளவு குறைந்திருக்கு அல்லது விலை கூடிருக்கா? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? இனி நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் தற்போது பார்க்கவிருக்கிறோம்.

தங்கத்திற்கு ஆதரவாக பணவீக்கம்

தங்கத்திற்கு ஆதரவாக பணவீக்கம்

தற்போது உலகளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டு வரும் நிலையில், பொருளாதாரத்தினை ஊக்குவிக்க இன்னும் ஊக்கத்தொகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போதைக்கு பங்கு சந்தைகள் ஏற்றத்திற்கு மத்தியில் தங்கம் விலையானது குறைந்தாலும், பணவீக்கம் என்பது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்று கூறப்படுகிறது.

முதலீட்டாளர்கள் கவனம்

முதலீட்டாளர்கள் கவனம்

அமெரிக்காவில் வெள்ளிக்கிழமையன்று நடக்கவிருக்கும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கியாளர்கள் என பலரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். ஆக இதனால் இந்த கூட்டத்தில் எந்த மாதிரியான முக்கிய முடிவுகள் எடுக்கப்படபோகிறதோ என்று முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

ஊக்கத்தொகை எதிர்பார்ப்பு
 

ஊக்கத்தொகை எதிர்பார்ப்பு

அமெரிக்காவின் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு, 1.9 டிரில்லியன் டாலர் ஊக்கத்தொகை பற்றிய முக்கிய முடிவுகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை தங்கம் விலையானது 5% வரை வீழ்ச்சி கண்டுள்ளது. ஏனெனில் அமெரிக்க பத்திர லாபம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வட்டியில்லா முதலீடான தங்கம் தவிர்க்கப்படுகிறது.

முக்கிய சப்போர்ட் லெவல்

முக்கிய சப்போர்ட் லெவல்

தங்கத்தின் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 1820 டாலர்களாகவும், ஒதே முக்கிய சப்போர்ட் ஆக 1755 டாலர்களாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விலையை உடைத்து சென்றால் தங்கம் விலையானது செல்லிங் டிரெண்டுக்கு மாறலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே எம்சிஎக்ஸ் தங்கம் விலையானது மீண்டும் செல்லிங் அழுத்தத்தில் இருக்கும். இதே எம்சிஎக்ஸ் சந்தையில் ரெசிஸ்டன்ஸ் லெவல் 47,450 ரூபாயாகும். இதே சப்போர்ட் லெவல் 45,300 ரூபாய் என்றும் கணித்துள்ளனர்.

மற்ற உலோகங்கள் நிலவரம்

மற்ற உலோகங்கள் நிலவரம்

தங்கம் விலையானது குறைந்திருந்தாலும், மற்ற விலையுயர்ந்த உலோகங்களின் விலையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளி விலை 27.97 டாலர்களாகவும், இதே பிளாட்டினம் விலை 1.1% குறைந்து 1254.63 டாலர்களாகவும், பல்லேடியம் விலை 0.2% குறைந்து 2430 டாலர்களாகவும் காணப்படுகிறது.

பைசரின் கொரோனா தடுப்பூசி

பைசரின் கொரோனா தடுப்பூசி

Pfizer கொரோனா தடுப்பூசியானது 94% பயனுள்ளதாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கொரோனா வைரஸினை முடிவுக்கு கொண்டு வர முக்கிய பங்கு வகிக்கும் என்றும் தெரிகிறது. இதனால் சரிவில் உள்ள பொருளாதாரத்தினை விரைவில் மீட்டெடுக்க இது வழிவகுக்கும் என்றும், இதனால் தங்கம் விலைக்கு எதிராக இது அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் இரண்டாவது நாளாக இன்று சற்று சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது சற்று குறைந்து 1797.30 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, சற்று மேலாக தொடங்கியுள்ளது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்திந் விலையானது சற்று குறைந்து காணப்பட்டாலும், வெள்ளியின் விலையானது குறையவில்லை. மாறாக 1.33% அதிகரித்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 1.33% அதிகரித்து, 28.233 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு விலையை விட சற்று மேலே தான் தொடங்கியுள்லது. எனினும் பெரிய அளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை இன்று காலை தொடக்கத்தில் சரிவில் தான் காணப்பட்டது. எனினும் தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 95 ரூபாய் அதிகரித்து, 46,614 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் தங்கத்தின் விலையானது நேற்றைய முடிவு விலையை விட, சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையின் எதிரொலியாக ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 954 ரூபாய் அதிகரித்து, 70,482 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம். இதே போல வெள்ளியினையும் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall third day in a row: down 18% from peak

Gold price update.. Gold prices fall third day in a row: down 18% from peak
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X