இது சூப்பர் சான்ஸ்.. பலத்த ஏற்றத்திற்கு பிறகு சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக தங்கம் விலையானது, வார இறுதி நாளான இன்று சற்று சரிவில் காணப்படுகிறது.

 

எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1760 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

இது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. எனினும் இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

இன்று இதெல்லாம் பார்க்கலாம்?

இன்று இதெல்லாம் பார்க்கலாம்?

இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை எப்படி உள்ளது? இந்திய சந்தையில் எப்படி உள்ளது? இந்த இரு சந்தைகளிலும் வெள்ளி விலை நிலவரம் என்ன? முக்கியமான சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? இன்று வாங்கலாமா? இன்னும் குறையுமா? அடுத்து என்ன செய்யலாம்? வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில், கடந்த அமர்வில் தங்கம் விலையானது பலத்த ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று சற்று சரிவில் காணப்படுகிறது. இது தற்போது 1.85 டாலர்கள் குறைந்து, 1765.10 டாலர்களாக காணப்படுகிறது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்கள் லாபத்தினை புக் செய்த நிலையில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருப்பினும் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஏனெனில் தங்கத்தின் முக்கிய லெவலான 1760 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது.

சர்வதேச வெள்ளி நிலவரம்
 

சர்வதேச வெள்ளி நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையினைப் போலவே, வெள்ளியின் விலையும் இன்று சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தங்கத்தினை போலவே, வெள்ளியின் விலையிலும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 0.28% சரிந்து, 25.892 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்த வரையில் கடந்த அமர்வில் பலமான ஏற்றத்தினைக் கண்ட நிலையில், இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது. தற்போது 10 கிராமுக்கு 108 ரூபாய் குறைந்து, 47,067 ரூபாயாக காணப்படுகிறது. தங்கம் விலையானது கடந்த அமர்வில் 47,175 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 47,099 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதுவும் தங்கம் விலை சற்று குறைவதற்கான சிக்னலையே கொடுத்துள்ளது. எனினும் இது மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது கிலோ வெள்ளியின் விலையானது 178 ரூபாய் குறைந்து, 68,362 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வில் 68,540 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று 68,400 ரூபாயாக தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியில் விலையானது தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்றும் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 71.90 ரூபாயாகவும்,. இதே கிலோவுக்கு 71,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆக இது ஆபரண வெள்ளியை வாங்க சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது.

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

தூய தங்கம் (24 கேரட் தங்கம் விலை ) விலையும் இன்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 4,759 ரூபாயாகவும், இதே 8 கிராமுக்கு 38,072 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 47,590 ரூபாயாகவும் காணப்படுகிறது. இதுவும் தொடர்ச்சியாக 4 நாள் சரிவினைக் கண்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியில் விலையானது தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்றும் மாற்றமில்லமல் காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 71.90 ரூபாயாகவும்,. இதே கிலோவுக்கு 71,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆக இது ஆபரண வெள்ளியை வாங்க சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது.

ஏற்றத்தில் தங்கம் விலை

ஏற்றத்தில் தங்கம் விலை

தொடர்ச்சியாக தங்கம் விலையானது இரண்டாவது வாரமாக ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. அவ்வப்போது விலையானது குறைந்திருந்தாலும் மொத்தத்தில் விலை ஏற்றத்திலேயே காணப்படுகிறது. நிபுணர்கள் பல நாட்களாக 1760 டாலர்களை உடைத்தால் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்ற கூறி வந்த நிலையில், நேற்று அதனை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக நீண்டகால நோக்கில் தங்கம் விலை சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கம் விலையானது இன்று சற்று சரிவினைக் கண்டுள்ள நிலையில், இந்திய சந்தையில் அதன் சப்போர்ட் லெவல் 45,880 ரூபாயாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 47,740 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1760 டாலர்களுக்கு மேலேயே இருக்கும்பட்சத்தில், 1820 டாலர்களை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே சரிவினைக் கண்டால் 1725 டாலர்கள் சப்போர்ட் லெவலாகவும் உள்ளது.

டாலரின் மதிப்பு அதிகரிப்பு

டாலரின் மதிப்பு அதிகரிப்பு

கடந்த வியாழக்கிழமையன்று அமெரிக்க பத்திர சந்தைகள் ஒரு மாத குறைந்த விலையினை தொட்ட நிலையில், டாலரின் மதிப்பும் அழுத்தத்தில் காணப்பட்டது. அதோடு வட்டி விகிதமும் குறைவாக உள்ள நிலையில் பணவீக்கம் பற்றிய கவலைகளும் காணப்படும் நிலையில் தங்கம் விலையானது பலத்த ஏற்றத்தினை கண்டது.

பணவியல் கொள்கை நிலைப்பாடு

பணவியல் கொள்கை நிலைப்பாடு

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் மீண்டும் தனது பணவியல் கொள்கையின் நிலைபாட்டினை கருதிய நிலையில், இந்த வாரத்திலும் தங்கம் விலையானது ஏற்றம் கண்டது. ஏனெனில் வட்டி விகிதம் குறைவாக உள்ள நிலையில், அது பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

எப்படியிருப்பினும் அமெரிக்க சில்லறை விற்பனையில் ஏற்ப்பட்ட மீட்பு, வேலையின்மை நலன் குறித்தான அறிவிப்புகள், தங்கத்தின் விலை சரிவுக்கு வழிவகுத்தது. எனினும் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் என்பது தங்கம் விலை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது பொருளாதார சரிவுக்கு மீண்டும் வழிவகுக்குமோ, என்ற அச்சத்தினையும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இன்று விலை நிலவரம் எப்படி இருக்கும்?

இன்று விலை நிலவரம் எப்படி இருக்கும்?

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டாலும், தற்போது வெளியாகி வரும் சில காரணிகளும் தங்கத்திற்கு ஆதரவாக உள்ளது. எனினும் குறுகிய கால நோக்கில் விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் புராபிட் காரணைத்தினால் தான் என்பதால், தங்கம் விலை குறையும் போது வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக இது நீண்டகால நோக்கில் தங்கத்தினை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக அதற்கேற்றாற்போல் முதலீட்டாளர்கள் காத்திருந்து முதலீடு செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall today, a day after big gains, silver also drop, is it right to buy?

Gold price update.. Gold prices fall today, a day after big gains, silver also drop, is it right to buy?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X