சாமனியர்களுக்கு இது செம சான்ஸ்.. தடுமாற்றத்தில் தங்கம் விலை.. வாங்க சரியான நேரமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து பலத்த ஏற்றத்தினைக் கண்டு வந்த நிலையில், தற்போது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. இது குறைந்த விலையில் தங்கத்தினை வாங்க சாமனியர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

 

தங்கம் விலையானது நடப்பு மாதத்தில் இதுவரையில் சுமார் 3,000 ரூபாயாக்கு மேலாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று சர்வதேச சந்தையில் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. எனினும் இந்திய சந்தையில் அதிகரித்து தான் காணப்படுகிறது.

தங்கம் விலையானது நடப்பு மாத தொடக்கத்தில் 44,000 ரூபாய் வரை சென்ற நிலையில், அதனையே சப்போர்ட் லெவலாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதே சர்வதேச சந்தையிலும் நிபுணர்கள் கூறியது போல முக்கிய லெவலான 1760 டாலர்களையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது குறைந்தாலும், அது எந்தளவுக்கு குறைகிறதோ, அந்தளவுக்கு குறைந்த விலையில் வாங்க முடியும். ஆக இது முதலீட்டாளர்களுக்கு இன்னும் லாபகரமானதாக அமையும்.

குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பு

குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பு

கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், தங்கம் (gold) விலையானது தற்போது சற்று குறைந்திருந்தாலும், அவுன்ஸூக்கு 1760 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. இன்று தொடக்கத்திலும் 1760 டாலர்களுக்கு மேலாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக இது தங்கம் விலையானது ஏற்றம் காணலாம் என்பதற்காக அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. ஆக இது மேற்கொண்டு அதிகரிக்கும் என்றே கூறலாம். அதோடு கேண்டில் பேட்டர்னும் வார அளவில் பார்க்கும்போது, தற்போது சற்று குறைந்தாலும், மீண்டும் ஏற்றத்திற்கே வழிவகுக்கும் என்பது போல உள்ளது.

இன்று இதெல்லாம் பார்க்கலாம்?

இன்று இதெல்லாம் பார்க்கலாம்?

இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை எப்படி உள்ளது? இந்திய சந்தையில் எப்படி உள்ளது? இந்த இரு சந்தைகளிலும் வெள்ளி விலை நிலவரம் என்ன? முக்கியமான சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? இன்று வாங்கலாமா? இன்னும் குறையுமா? அடுத்து என்ன செய்யலாம்? வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச தங்கம் நிலவரம்
 

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில், கடந்த அமர்வில் தங்கம் விலையானது பலத்த ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. இது தற்போது 1.25 டாலர்கள் குறைந்து, 1778.95 டாலர்களாக காணப்படுகிறது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் உச்ச விலையினை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

சர்வதேச வெள்ளி நிலவரம்

சர்வதேச வெள்ளி நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையினைப் போலவே, வெள்ளியின் விலையும் இன்று சற்று சரிவிலேயே காணப்படுகிறது. வெள்ளியின் விலையிலும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 0.92% சரிந்து, 25.867 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. மீடியம் டெர்மில் வெள்ளி விலையானது குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக குறைந்த விலைக்கு வரும்போது, நீண்டகால நோக்கில் வாங்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 219 ரூபாய் அதிகரித்து, 47,572 ரூபாயாக காணப்படுகிறது. தங்கம் விலையானது கடந்த அமர்வில் 47,353 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் அதே 47,353 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதுவும் தங்கம் விலை சற்று அதிகரிப்பதற்கான சிக்னலையே கொடுத்துள்ளது. அதோடு முந்தைய அமர்வின் உச்சத்தினையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது கிலோ வெள்ளியின் விலையானது 240 ரூபாய் குறைந்து, 68,444 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலை முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

டாலரின் மதிப்பு

டாலரின் மதிப்பு

கடந்த வாரத்தில் டாலரின் மதிப்பு அழுத்தம் காரணமாக தங்கம் விலையானது சற்று பலமான ஏற்றத்தினை கண்டது. எனினும் இன்று மீண்டு வலுவடைந்துள்ள நிலையில் தங்கம் விலையானது உச்சத்திலேயே தடுமாற்றத்தில் காணப்படுகிறது. எனினும் டெக்னிக்கலாக பார்க்கும்போது தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

அடுத்த முக்கிய லெவல்

அடுத்த முக்கிய லெவல்

தங்கம் விலையானது அதன் முக்கிய லெவலை உடைத்துக் காட்டியுள்ள நிலையில், அடுத்து அதிகரிக்கும் பட்சத்தில் 1820 டாலர்கள் முக்கிய லெவலாக கொண்டிருக்கும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். எனினும் சரிவினைக் கண்டால் 1725 டாலர் சப்போர்ட் லெவலாக இருக்கும் என கணித்துள்ளனர்.

முக்கிய டேட்டாக்கள்

முக்கிய டேட்டாக்கள்

அதோடு அமெரிக்க பத்திர லாபமானது சற்று குறைந்துள்ள நிலையில், ஒரு வார சரிவில் காணப்படுகிறது. இதுவும் குறைந்த விலையில் வாங்க நல்ல இடமாக இருப்பதால், அதிகரித்துள்ள தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கிறது. அதோடு ஐரோப்பிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் உள்ளிட்ட முக்கிய டேட்டாக்கள் இந்த வாரத்தில் உள்ளன. ஆக இதெல்லாம் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர அமெரிக்காவின் பிஎம்ஐ விகிதம், வேலையின்மை நலன் குறித்த டேட்டா, உள்ளிட்ட முக்கிய டேட்டாகளும் உள்ளன.

பணவியல் கொள்கை நிலைப்பாடு

பணவியல் கொள்கை நிலைப்பாடு

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் மீண்டும் தனது பணவியல் கொள்கையின் நிலைபாட்டினை கருதிய நிலையில், கடந்த வாரத்திலும் தங்கம் விலையானது ஏற்றம் கண்டது. ஏனெனில் வட்டி விகிதம் குறைவாக உள்ள நிலையில், அது பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கத்திற்கு நீண்டகால நோக்கில் அதிகரிக்க முக்கிய காரணமாக அமையலாம்.

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் என்பது மிக வேகமாக பரவி வருகின்றது. இது தங்கம் விலை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது பொருளாதார சரிவுக்கு மீண்டும் வழிவகுக்குமோ, என்ற அச்சத்தினையும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஆக இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று விலை நிலவரம் எப்படி இருக்கும்?

இன்று விலை நிலவரம் எப்படி இருக்கும்?

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டாலும், தற்போது வெளியாகி வரும் சில காரணிகளும் தங்கத்திற்கு ஆதரவாக உள்ளது. எனினும் குறுகிய கால நோக்கில் விலை குறையலாம் என்பது போல இருப்பதால், இது குறைந்த விலையில் வரும்போது வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall today a day after big jump, good chance to buy?

Gold price update.. Gold prices fall today a day after big jump, good chance to buy?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X