சூப்பர் சரிவில் தங்கம் விலை.. சாமனியர்களுக்கு இது மிக நல்ல வாய்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது தொடர்ச்சியான கடந்த ஐந்து அமர்வுகளுக்கு பிறகு இன்று இந்திய சந்தையில் சற்று சரிவினைக் கண்டுள்ளது.

 

இது சாமானிய மக்களுக்கு கிடைக்கவுள்ள நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தொடர்ச்சியாக தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், குறைந்த விலையில் கிடைத்தால் அது நல்ல விஷயம் தானே.

சரிவில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிவு..!

சர்வதேச சந்தையிலும் கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து ஏற்றத்தினைக் கண்டு வந்த நிலையில், தற்போது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது.

இந்த மாதத்தில் மட்டும் ரூ.4,000 ஏற்றம்

இந்த மாதத்தில் மட்டும் ரூ.4,000 ஏற்றம்

தங்கம் விலையானது நடப்பு மாதத்தில் இதுவரையில் கிட்டதட்ட 4,000 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கம் விலையானது நடப்பு மாத தொடக்கத்தில் 44,000 ரூபாய் வரை சென்ற நிலையில், அதனையே சப்போர்ட் லெவலாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதே சர்வதேச சந்தையிலும் நிபுணர்கள் கூறியது போல முக்கிய லெவலான 1760 டாலர்களையும் உடைத்துக் காட்டி, தற்போது 1800 டாலர்கள் என்ற லெவலை எட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது குறைந்தாலும், அது எந்தளவுக்கு குறைகிறதோ, அந்தளவுக்கு குறைந்த விலையில் வாங்க முடியும். ஆக இது முதலீட்டாளர்களுக்கு இன்னும் லாபகரமானதாக அமையும்.

இன்று என்னென்ன பார்க்கவிருக்கிறோம்?

இன்று என்னென்ன பார்க்கவிருக்கிறோம்?

இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை எப்படி உள்ளது? இந்திய சந்தையில் எப்படி உள்ளது? இந்த இரு சந்தைகளிலும் வெள்ளி விலை நிலவரம் என்ன? முக்கியமான சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? இன்று வாங்கலாமா? இன்னும் குறையுமா? அடுத்து என்ன செய்யலாம்? வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச தங்கம் விலை நிலவரம்
 

சர்வதேச தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில், கடந்த இரு அமர்வுகளாகவே தங்கம் விலையானது பலத்த ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. இது தற்போது 0.90 டாலர்கள் அதிகரித்து, 1793.85 டாலர்களாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் உச்ச விலையினை உடைத்துக் காட்டியுள்ளது. எனினும் இண்டிராடேவில் சற்று குறைந்து ஏற்றம் காணலாம் என்பது போல் காணப்படுகிறது. ஆக சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்திருந்தாலும், வெள்ளியின் விலை சற்று சரிவிலேயே காணப்படுகிறது. வெள்ளியின் விலையிலும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சற்று குறைந்து, 26.543 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. மீடியம் டெர்மில் வெள்ளி விலையானது குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக குறைந்த விலைக்கு வரும்போது, நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 218 ரூபாய் குறைந்து, 48,010 ரூபாயாக காணப்படுகிறது. தங்கம் விலையானது கடந்த அமர்வில் 48,228 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் அதே 48,252 ரூபாயாக தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது இன்னும் சற்று குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது கிலோ வெள்ளியின் விலையானது 388 ரூபாய் குறைந்து, 69,950 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலை முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாக காணப்பட்டாலும், நீண்டகால் நோக்கில் அதிகரிக்கலாம் என்பது போலத் தான் காணப்படுகிறது.

குறைந்த பத்திர லாபம்

குறைந்த பத்திர லாபம்

அமெரிக்காவில் முக்கிய முதலீடுகளில் ஒன்றான பத்திர லாபமானது 1.6% சரிவினைக் கண்டுள்ளது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க காரணமாக அமைந்துள்ளது. ஏனெனில் குறைந்த விலையில் பத்திரங்களை வாங்க இது சரியான இடமாக பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் பத்திர லாபம் சரிவினால் டாலரின் மதிப்பும் சற்று அழுத்தத்தில் காணப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்படுகிறது.

ஃபெடரல் மத்திய வங்கி கூட்டம்

ஃபெடரல் மத்திய வங்கி கூட்டம்

அமெரிக்காவின் மத்திய வங்கி கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் இதனை கவனித்துக் கொண்டுள்ளனர். ஏனெனில் அதில் அறிவிக்கப்படும் எந்தவொரு முக்கிய அறிவிப்பும், தங்கம் விலையில் எதிரொலிக்கலாம். இதன் காரணமாக இன்னும் சில தினங்களுக்கு, சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் பெரியளவில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம்

இந்திய சந்தையில் தங்கம்

இந்தியாவினை பொறுத்தவரையில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் என்பது மிக மோசமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது. இது தங்கத்தின் விலையை இன்னும் கூடுதலாக்குகின்றது. மேலும் பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என்ற நிலையில், பங்கு சந்தைகளும் சரிவில் காணப்படுகின்றன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடத்தினை நோக்கி செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த முக்கிய லெவல்

அடுத்த முக்கிய லெவல்

தங்கம் விலையானது அதன் முக்கிய லெவலை எல்லாம் உடைத்துக் காட்டியுள்ள நிலையில், அடுத்து அதிகரிக்கும் பட்சத்தில் 48,580 - 48,800 ரூபாய் வரை செல்லலாம். இதே சப்போர்ட் லெவல்கள் 48,000 - 47,770 ரூபாயாகும். இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல் 69,500 - 68,800 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 71,400 - 72,500 ரூபாயாகும்.

இன்று விலை நிலவரம் எப்படி இருக்கும்?

இன்று விலை நிலவரம் எப்படி இருக்கும்?

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று கூறப்படும் நிலையில், தற்போது வெளியாகி வரும் பல காரணிகளும் தங்கத்திற்கு ஆதரவாக உள்ளது. எனினும் குறுகிய கால நோக்கில் சற்று விலை குறையலாம் என்பது போல இருப்பதால், இது குறைந்த விலையில் வரும்போது வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall today after five days big jump, good chance to buy?

Gold price update.. Gold prices fall today after five days big jump, good chance to buy?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X