அடடே.. தங்கம் விலை குறையுமா.. எவ்வளவு குறையும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மின்னும் தங்கம் என்றாலே இந்திய பெண்களுக்கு ஒரு ஆசை தான். அதிலும் பெண்களுக்கு புதிய நகை வாங்குவதிலும், அதனை அணிவதிலும் அப்படி ஒரு அலாதி பிரியம்.

அதனால் தானோ என்னவோ? பண்டிகை கால பருவத்தில் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் இன்றைய காலகட்டத்தில் ஆண்களும் கூட தங்க நகைகளை விரும்பி அணிய ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் தங்கத்தின் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர். சரி குறுகிய கால நோக்கில் தங்கம் விலை எப்படி இருக்கும், கடந்த வாரத்தில் எப்படி இருந்தது. வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? நீண்டகால நோக்கில் எப்படி இருக்கும்? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர் வாருங்கள் பார்க்கலாம்.

கடந்த வாரத்தில் தங்கம் விலை நிலவரம்
 

கடந்த வாரத்தில் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் நடப்பு வாரத்தில் பாதி நாட்கள் தொடர்ந்து ஏற்றம் கண்ட நிலையில், பிற்பாதியில் சரிவில் காணப்பட்டது. கடந்த அக்டோபர் 19 அன்று (திங்கட்கிழமை) தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1,903.20 டாலர்களாக தொடங்கிய நிலையில், அக்டோபர் 21 அன்று 1936 டாலர்களாக உச்சத்தினை தொட்டது. கிட்டதட்ட 33 டாலர்கள் மூன்று நாட்களில் ஏற்றம் கண்டது. ஆனால் வியாழக்கிழமையில் இருந்து சரிய தொடங்கிய தங்கம் விலை, வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 1,895.65 டாலர்களாக சரிவடைந்தது. முடிவில் 1904 டாலர்களாகவும் முடிவடைந்தது. ஆக இரண்டே நாளில் உச்சத்தோடு ஒப்பிடும்போது 40 டாலர்களுக்கு மேல் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரத்தில் வெள்ளி விலை நிலவரம்

கடந்த வாரத்தில் வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியினை பொறுத்தவரையில் சர்வதேச சந்தையில் தங்கத்தினை போலவே, நடப்பு வாரத்தில் பாதி நாட்கள் தொடர்ந்து ஏற்றம் கண்ட நிலையில், பிற்பாதியில் சரிவில் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று வெள்ளியின் விலை 24.290 டாலர்களாக தொடங்கிய நிலையில், அக்டோபர் 21 அன்று அதிகபட்சமாக 25.425 டாலர்களை தொட்டது. எனினும் அடுத்த நாளே 24.460 டாலர்களை தொட்டது. ஆக மொத்தத்தில் முதல் பாதி வாரத்தில் ஏற்றம் கண்ட வெள்ளி, இரண்டாவது பாதியில் கிட்டதட்ட அதே அளவு சரிந்து காணப்பட்டது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரண தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது நடப்பு வாரத்தில் பெரியளவில் மாற்றம் ஏற்படவில்லை. திங்கள் முதல் வெள்ளி வரையிலான ஐந்து நாளில், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்தே காணப்பட்டுள்ளது.

நடப்பு வாரத்தில் குறைந்தபட்சமாக சவரனுக்கு 37,360 ரூபாயாகவும், அதிகபட்சமாக 37,760 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஆபரண வெள்ளி விலை நிலவரம்
 

சென்னையில் ஆபரண வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஆபரண வெள்ளியின் விலையானது நடப்பு வாரத்தில் பெரியளவில் மாற்றம் ஏற்படவில்லை. திங்கள் முதல் வெள்ளி வரையிலான ஐந்து நாளில், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 900 ரூபாய் அதிகரித்தே காணப்பட்டுள்ளது.

நடப்பு வாரத்தில் குறைந்தபட்சமாக கிலோவுக்கு 62,000 ரூபாயாகவும், அதிகபட்சமாக 63,500 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் எம்சிஎக்ஸ் தங்கம் ஒரு பார்வை

கடந்த வாரத்தில் எம்சிஎக்ஸ் தங்கம் ஒரு பார்வை

எம்சிஎக்ஸ் தங்கத்தினை பொறுத்தவரையில் கடந்த திங்கட்கிழமையன்று 50865 ரூபாயாக தொடங்கிய 10 கிராம் தங்கத்தின் விலையானது, அதிகபட்சமாக புதன் கிழமையன்று 51,454 ரூபாயாகவும், இதே குறைந்தபட்சமாக வியாழக்கிழமையன்று 50,535 ரூபாயாகவும் வர்த்தகமாகியுள்ளது. எனினும் வெள்ளிக்கிழமையன்று முடிவில் 50,839 ருபாயாகவும் முடிவடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் வார தொடக்கத்தில் ஏற்றம் காண தொடங்கினாலும், பிற்பாதியில் சற்று சரிவினைக் கண்டது.

கடந்த வாரத்தில் எம்சிஎக்ஸ் வெள்ளி

கடந்த வாரத்தில் எம்சிஎக்ஸ் வெள்ளி

எம்சிஎக்ஸ் வெள்ளியினை பொறுத்த வரையில் கடந்த புதன் கிழமையன்று கிலோவுக்கு அதிகபட்சமாக 64,070 ரூபாயினை தொட்டது. ஆனால் அடுத்த நாளே குறைந்தபட்சமாக 64,070 ரூபாயினை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று முடிவில் 62,449 ரூபாயாக முடிவடைந்துள்ளது. கிட்டதட்ட வாரத்தின் முற்பாதியில் ஏற்றம் கண்ட அளவுக்கு, பிற்பாதியில் சரிவினையே கண்டுள்ளது.

தேர்தலுக்கு முன்பு ஏற்றம் காணலாம்

தேர்தலுக்கு முன்பு ஏற்றம் காணலாம்

அதெல்லாம் சரி அடுத்த வாரத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும்? அடுத்த வாரத்தில் மட்டும் அல்ல, அடுத்த சில வாரங்களுக்கு அதாவது, அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வரையில் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் மீண்டும் 1900 டாலர்கள் என்ற லெவலில் ஸ்தம்பித்து நிற்கும் நிலையில், நவம்பர் 3க்கு முன்னர் சற்று ஏற்றத்தினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன காரணங்கள்?

என்னென்ன காரணங்கள்?

வரவிருக்கும் அமெரிக்கா அதிபர் தேர்தல், மற்றும் அமெரிக்காவின் ஊக்கத் தொகை குறித்தான அறிவிப்பு, டாலரின் மதிப்பு இவற்றால் தங்கம் விலை நிர்ணயிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா தேர்தலுக்கு முன்பு ஊக்கத் தொகை எப்படியும் வந்துவிடும், இதனால் டாலரின் மதிப்பு சற்று அதிகரிக்கலாம் என்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது குறுகிய கால நோக்கில் சற்று குறைய வாய்ப்புள்ளது.

தங்கம் விலை குறையுமா?

தங்கம் விலை குறையுமா?

அடுத்த வாரத்தில் ஊக்கத் தொகை குறித்தான பேச்சு வார்த்தை நடக்கலாம். இது அதிகபட்சமாக அவுன்ஸூக்கு 1925 டாலர்களாக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே குறைந்தபட்சமாக அவுன்ஸூக்கு 1,875 மற்றும் 1850 டாலர்கள் வரை செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா தேர்தல் எதிர்பார்ப்பு

அமெரிக்கா தேர்தல் எதிர்பார்ப்பு

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் எதிர்பார்ப்பு மற்றும் ஊக்கத் தொகை குறித்தான அறிவிப்பு, தங்கம் விலைக்கு ஆதரவாக இருக்கலால் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக குறைவான வட்டி விகிதம், சரிவில் இருக்கும் டாலர், தேர்தல் கணிப்புகள் என பலவும் தங்கத்திற்கு ஆதரவாக செயல்படலாம். இவற்றோடு அதிகரித்து வரும் கொரோனா, அதிலும் சில இடங்களில் இரண்டாம் கட்ட பரவல், கொரோனா தடுப்பூசி மருந்து என பல விஷயங்கள், தங்கத்திற்கு ஆதரவாகவே இருந்து வருகின்றன.

அடுத்த வாரத்தில் ஏற்ற இறக்கம் அதிகமாகலாம்

அடுத்த வாரத்தில் ஏற்ற இறக்கம் அதிகமாகலாம்

அடுத்த வாரத்தில் தங்கம் விலையானது தினசரி 10 - 20 டாலர்கள் ஏற்ற இற்க்கத்தில் இருக்கலாம். ஆனால் தேர்தலுக்கு பின்பு, அவுன்ஸூக்கு 2000 டாலர்களை தொடலாம் 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் 2500 டாலர்களை தொடலாம் என்றும் வால்ஷ் டிரேடிங் இணை இயக்குனர் சீன் லஸ்க் கூறியுள்ளார். அதிபர் தேர்தலை பொறுத்தவரையில் யார் ஜெயிப்பார்கள் என்பது பெரிய விஷயம் அல்ல. தேர்தலுக்கு பின் வரவிருக்கும் ஊக்கத்தொகை தான் எதிர்பார்ப்பே.

தேர்தலுக்கு பின்பு தங்கம் விலையை ஆதரிக்கும் காரணிகள்

தேர்தலுக்கு பின்பு தங்கம் விலையை ஆதரிக்கும் காரணிகள்

ஆனால் தற்போது அமெரிக்கா மற்றும், ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் லாக்டவுன் இருக்குமோ என்ற பயமும் எழுந்துள்ளது. இது மேலும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தேர்தலுக்கு பின்பும் தங்கம் விலையை, இவையெல்லாம் ஆதரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சரிவினை சரிசெய்ய சில ஆண்டுகள் ஆகும்

சரிவினை சரிசெய்ய சில ஆண்டுகள் ஆகும்

அதோடு கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார சரிவினை சரிசெய்ய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். ஒரு வேளை அதிபர் தேர்தலில் பிடன் ஜெயித்தால், அது தங்கத்திற்கு எதிர்மறையாக இருக்கும். ஏனெனில் பிடனின் அரசு வரிகளை அதிகரிக்கலாம். அவர் 2021ம் ஆண்டில் வரியினை அதிகரிக்கலாம். இதனால் பங்கு சந்தையில் விற்பனை அதிகரிக்கலாம். இதன் மூலம் தங்களது லாபங்களை தக்க வைக்க முதலீட்டாளர்கள் முயற்சிக்கலாம். அந்த நேரத்தில் தங்கம் விலையானது அழுத்ததினை காணலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கும்

நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கும்

ஒரு வேளை அப்படி நடந்தால் தங்கம் விலையானது வாங்குவதற்கு வாய்ப்பாக அமையும். பிடன் வென்றாலும் சரி, டிரம்ப் வென்றாலும் சரி, ஊக்கத்தொகை தான் பெரிய எதிர்ப்பார்ப்பே. ஆக இது நீண்டகாலத்திற்கு பங்கு சந்தையோ அல்லது தங்கமோ சற்று சாதகமாகவே இருக்கும். மேலும் தங்கத்திற்கு சாதகமாக கொரோனாவும் பரவி வருகின்றது. இதனால் நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

தங்கம் விலை இனி எப்படி இருக்கும்

தங்கம் விலை இனி எப்படி இருக்கும்

அமெரிக்காவின் முதலீட்டு குரு ஜிம் ரோஜெர்ஸ், தாமஸ் கப்லன், முதல் பேங்க் ஆப் அமெரிக்காம், கிரெடிட் சூசி, கோட்டக் செக்யூரிட்டி என பலரும் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் 5000 டாலர்கள் வரை அதிகரிக்கலாம் என்றே கூறி வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தினை வாங்க எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ? அப்போதெல்லாம் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices may down in medium term

Gold prices may down in medium term
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X