பலத்த சரிவுக்கு பிறகு தடுமாறும் தங்கம் விலை.. இன்றும் குறையுமா.. நிலவரம் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தங்கம் என்றாலே ஒரு கவர்ச்சிகரமான முதலீடாக பார்க்கப்படுகிறது, இன்று வெறும் ஆபரணமாக மட்டுமல்லாமல் முதலீடுகளிலும் முக்கியத்துவம் கொண்டுள்ள உணர்வுபூர்வ முதலீடாக மாறியுள்ளது.

 

தங்கம் விலையானது கடந்த அமர்வில் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. எனினும் மீண்டும் சற்று குறையலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இது கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க பத்திர சந்தையானது மீண்டும் ஏற்றம் கண்ட நிலையில், இது மேற்கொண்டு தங்கத்திற்கு எதிராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வார இறுதியில் கண்ட பலத்த சரிவு.. இந்த வாரமும் தங்கம் விலை குறையலாம்.. நிபுணர்கள் பளிச் கணிப்பு..!

பத்திர சந்தை ஏற்றம்

பத்திர சந்தை ஏற்றம்

கடந்த வாரத்தில் வெளியான செப்டம்பர் மாத சில்லறை விற்பனை குறித்தான சாதகமான குறியீடானது, அமெரிக்க பத்திரங்களின் ஏற்றத்திற்கு வழிவகுத்தது. இந்த நிலையில் அதன் தாக்கம் வரவிருக்கும் அமர்வுகளிலும் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலையானது தற்போது சற்று அதிகரித்திருந்தாலும், மீடியம் டெர்மில் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் குறித்த அச்சம்

பணவீக்கம் குறித்த அச்சம்

தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திர சந்தையானது, டாலரின் மதிப்பு மீண்டும் ஏற்ற காண வழி வகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கத்தின் விலையானது, மேற்கொண்டு நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை
 

தொடர்ந்து அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை

தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையானது தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகின்றது. இது மேற்கொண்டு சர்வதேச அளவிலான பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்று நிலையே இருந்து வருகிறது. இதற்கிடையில் சீனாவின் பொருளாதாரம் குறித்த குறியீடும் மூன்றாவது காலாண்டில் மிக மெதுவான வளர்ச்சியையே சுட்டிக்காட்டுகின்றது. இது சந்தைக்கு எதிரான விஷயமாக பார்க்கப்படும் நிலையில், இது மேற்கொண்டு தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்க காரணமாக அமையலாம்.

பாதுகாப்பு புகலிடமான தங்கம்

பாதுகாப்பு புகலிடமான தங்கம்

சீனாவில் தற்போது நிலவிவரும் நிலக்கரி பற்றாக்குறையால் கடுமையான மின்வெட்டு நிலவி வருகின்றது. இதனால் உற்பத்தியானது பாதிப்படைந்துள்ள நிலையில், இது வரவிருக்கும் காலங்களிலும் மெதுவான வளர்ச்சியைக் காண வழி வகுக்கலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலைக்கு, நீண்டகால நோக்கில் சாதகமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய டேட்டாக்கள்

முக்கிய டேட்டாக்கள்

வரவிருக்கும் வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி தலைவர் ஜெரோம் பவல் கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்று, தங்கம் வர்த்தகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதனால் தங்கம் விலையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றோடு வீடு விற்பனை குறித்தான குறியீடு, வேலையின்மை நலன் குறித்தான குறியீடு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் வெளியாகவிருக்கும் நிலையில், இதுவும் தங்கத்தின் விலையில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடத்தில் வாங்கலாமா

இந்த இடத்தில் வாங்கலாமா

நீண்ட கால நோக்கில் தங்கத்தினை பொறுத்திருந்து வாங்கலாம், இது நீண்ட கால நோக்கில் வாங்க சரியான இடமல்ல, இது இன்னும் தங்கம் விலை குறையும்போது வாங்கலாம், மீடியம் டெர்மில் தங்கம் விலை குறையலாம் என்ற கணிப்புக்கு மத்தியிலேயே நிபுணர்கள் இப்படி கூறுகின்றனர். ஆக தங்கம் விலை குறையும் போது வாங்கினால், நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

கவனத்தில் கொள்ள வேண்டியவை

தொடர்ந்து அமெரிக்க பத்திரிகை சந்தையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், அது பங்குச்சந்தை, தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடுகளை குறைக்க வழி வகுத்துள்ளது .மேலும் எண்ணெய் பற்றாக்குறை, சீனாவின் ரியல் எஸ்டேட் சந்தை, அமெரிக்காவின் உள்கட்டமைப்பு துறை மற்றும் கடன் பிரச்சனை உள்ளிட்ட பல காரணிகளும் வரும் இந்த வாரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களாக உள்ளது. இதுவும் தங்கத்தின் விலையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1768 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வில் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 23.367 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 107 ரூபாய் குறைந்து, 47,320 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 47,213 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 47,220 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக இது மீடியம் டெர்மில் குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 247 ரூபாய் அதிகரித்து, 63,518 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 63,271 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 63,518 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 4,462 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 35,696 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 4,868 ரூபாயாகவும், சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 38,944 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 48,680 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, 67.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 675 ரூபாயாகவும், கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 67,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கம் மற்றும் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் & இன்ட்ராடே வர்த்தகர்கர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். அப்படி பொறுத்திருந்து வாங்கும்போது லாபம் அதிகரிக்கும். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம் என்பதால், வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on October 18th 2021: Gold price today remain weak after heavy fall in weekend

Gold price latest updates.. Gold prices on October 18th 2021: Gold price today remain weak after heavy fall in weekend
Story first published: Monday, October 18, 2021, 12:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X