தடுமாறும் தங்கம் விலை.. ஏற்றம் காணும் வாய்ப்பு குறைவு.. நிபுணர்கள் செம கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது தற்போது அவுன்ஸூக்கு 1770 டாலர்களுக்கு அருகிலேயே காணப்படுகிறது. இது அதிக அளவில் ஏற்றம் காண வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஏன்? என்ன காரணம்? இனி விலை எப்படி இருக்கும்?

 

இன்றைய விலை நிலவரம் என்ன? சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் விலை நிலவரம் என்ன? ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன? முக்கிய சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? அடுத்த முக்கிய லெவல்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்

தொடர்ந்து பத்திர சந்தை ஏற்றம் கண்டு வரும் நிலையில் டாலரின் மதிப்பும் ஏற்றத்தில் காணப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலையானது பெரிய அளவில் ஏற்றம் காண வாய்ப்பு இல்லை. அதாவது ஏற்றம் அதிகளவில் இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்துக்கள் நிலவி வருகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பலத்த சரிவுக்கு பிறகு தடுமாறும் தங்கம் விலை.. இன்றும் குறையுமா.. நிலவரம் என்ன..!

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

தொடர்ந்து சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், பாதுகாக்க புகலிடமான தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது தங்கத்தின் விலையில் அதிக ஏற்றத்தினை தடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் தங்கம் விலை அதிக அளவில் ஏற்றம் காண வாய்ப்பு இல்லை என்ற நிலையில் இருந்து வருகிறது.

தொடர்ந்து உச்சம் தொடும் பங்குச்சந்தைகள்

தொடர்ந்து உச்சம் தொடும் பங்குச்சந்தைகள்

சர்வதேச அளவில் தொடர்ந்து பல நாடுகளின் பங்கு சந்தைகள் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றன. இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழி வகுத்துள்ளது. தங்கம் விலை தற்போது சற்று ஏற்றத்தில் இருந்தாலும், மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி
 

பொருளாதார வளர்ச்சி

சர்வதேச அளவில் பல நாடுகளும் கொரோனாவின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. எனினும் அமெரிக்காவின் தொழில்துறை குறித்தான குறியீடும். சீனாவின் தொழில்துறை உற்பத்தி குறித்த குறியீடும் மெதுவான வளர்ச்சியை காட்டுகின்றன. இது இன்னும் நீண்ட காலத்திற்கு வட்டி வீதத்தினை அப்படியே வைத்திருக்க வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, பத்திர சந்தை, டாலரின் மதிப்பு தொடர் ஏற்றம் உள்ளிட்ட பல முக்கிய காரணிகளும் சந்தைக்கு எதிராக உள்ள நிலையில், இது பணவீக்கத்திற்கு காரணமாக அமையலாம். இது மேற்கொண்டு பணவீக்கத்தை தூண்டலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. இந்த நிலையில் நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

தங்கம் விலையானது தற்போது 1770 என்ற நிலையில் உள்ள நிலையில், அடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 1800 டாலராக பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்ற நிலையில் அடுத்த முக்கிய சப்போர்ட் அவுன்ஸூக்கு 1760 டாலர்களாகவும், இதனையடுத்து 1750 டாலர்களாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய டேட்டாக்கள்

முக்கிய டேட்டாக்கள்

வரவிருக்கும் வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி தலைவர் ஜெரோம் பவல் கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தங்கம் வர்த்தகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதனால் தங்கம் விலையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றோடு இந்த வாரத்தில் வீடு விற்பனை குறித்தான குறியீடு, வேலையின்மை நலன் குறித்தான குறியீடு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் வெளியாகவிருக்கும் நிலையில், இதுவும் தங்கத்தின் விலையில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 12.45 டாலர்கள் அதிகரித்து, 1778.15 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தொடங்கியிருந்தாலும், கடந்த அமர்வின் உச்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் அதிகரித்தே காணப்படுகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வில் சற்று சரிவினைக் கண்ட நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 1.48% அதிகரித்து, 23.608 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 79 ரூபாய் அதிகரித்து, 47,370 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 47,291 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 47,410 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக இது மீடியம் டெர்மில் குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 471 ரூபாய் அதிகரித்து, 63,737 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 63,266 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 63,618 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. ஆக வெள்ளியின் விலையும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து, 4,465 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்து, 35,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து, 4,871 ரூபாயாகவும், சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்து, 38,968 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 48,710 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 67.80 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 678 ரூபாயாகவும், கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 67,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் & இன்ட்ராடே வர்த்தகர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். அப்படி பொறுத்திருந்து வாங்கும்போது லாபம் அதிகரிக்கும். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices on October 19th 2021: Gold price move above $1,770, but upside potential seems limited

Gold price latest updates.. Gold prices on October 19th 2021: Gold price move above $1,770, but upside potential seems limited
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X