மாஸ் காட்டி வரும் தங்கம் விலை.. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக ஏற்றம்.. இனி என்னவாகும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் கொரோனா தாக்கத்தின் மத்தியிலும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக நடந்து வரும் ஒரு விஷயம் தங்கம் விலை ஏற்றம் தான்.

தற்போது இருக்கும் விலையில் தங்கத்தினை ஆபரணமாக வாங்குவது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் இதன் மூலம் தினசரி லாபம் பார்க்க முடியுமே?

குறைந்த விலையில் விலையில் வாங்கி, அதிக விலையில் விற்று லாபம் பார்க்க முடியும். விற்று வாங்கியும் லாபம் பார்க்க முடியும். ஆனால் தற்போதைய நியல்வரப்படி தங்கம் விலையானது ஒட்டுமொத்தமாக ஏறுமுகமாக இருப்பதால், செல்லிங் செய்வது அவ்வளவு நல்லதல்ல? ஆக எப்போது எல்லாம் குறைகிறதோ? அப்போதெல்லாம் வாங்கி வைக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

தங்கம் விலை அதிகரிக்கும்
 

தங்கம் விலை அதிகரிக்கும்

ஏனெனில் இந்திய நிபுணர்கள் முதல் சர்வதேச நிபுணர்கள் வரை கூறும் ஒரே விஷயம் தங்கம் விலை அதிகரிக்கும் என்பது தான். ஏனெனில் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தில் தங்களது முதலீடுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம நாளுக்கு நாள் வேகமெடுத்து வரும் நிலையில், அதனால் பொருளாதாரம் என்னவாகுமோ? என்ற பயம் எழுந்துள்ளது.

பாதுகாப்பு புகலிடம்

பாதுகாப்பு புகலிடம்

ஒரு நாட்டின் பொருளாதாரம் சரியும் பட்சத்தில், அந்த நாட்டின் பங்கு சந்தைகளும் சரியும். இதன் காரணமாக பங்கு சந்தைக்கு மாற்றாக, முதலீட்டாளார்கள் தங்கத்தினை தேர்வு செய்கின்றனர். ஆக இதன் காரணமாக தங்கம் விலையானது இன்று மீண்டும் தொடர்ந்து உச்சம் தொட்டு வர்த்தகமாகி வருகிறது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில், இன்று 11.5 லட்சமாக அதிகரித்துள்ளது. உலகளவில் தற்போது கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கிட்டதட்ட 28,000 பேரினை பலிகொண்டுள்ள கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கன் இன்னும் எத்தனை பேரினை பலி கொள்ள காத்திருக்கிறதோ தெரியவில்லை.

இதுவும் ஒரு காரணம்
 

இதுவும் ஒரு காரணம்

ஆக இவ்வாறு மிக மோசமாக அதிகரித்து வரும் கொரோனா தாக்கதினால், நாட்டில் பல கட்டுப்பாடுகள் விதிகப்பட்டு வருகின்றன. இதனால் இந்திய தொழில் துறையானது பெருத்த அடி வாங்கியுள்ளது எனலாம். இந்த நிலையிலும் சர்வதேச சந்தையின் எதிரொலியும், இந்திய பொருளாதாரமும், தங்கம் விலையேற காரணமாக அமைந்துள்ளது.

பணவீக்கத்திற்கு எதிராக ஹெட்ஜ்

பணவீக்கத்திற்கு எதிராக ஹெட்ஜ்

எல்லாவற்றையும் விட தங்கமானது பணவீக்கத்திற்கு எதிராக சிறந்த ஹெட்ஜ் ஆக பயன்படுத்தப்படுவதால், நாட்டில் நிலவி வரும் நெருக்கடிக்கும் மத்தியிலும், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடுகளை செய்து வருகின்றனர். இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்கா சீனா பிரச்சனையானது நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவும் தங்கம் விலை உயரலாம் என்று கூறப்படுகிறது.

நல்ல விஷயம் எதுவுமே இல்லையா?

நல்ல விஷயம் எதுவுமே இல்லையா?

நல்ல விஷயம் எதுவுமே இல்லையா? நிச்சயம் உண்டு. தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. ஆக இதற்கான சரியான அங்கீகாரம், பலன் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் கொரோனாவினை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இது ஒரு புது நம்பிக்கையை மக்களிடம் கொண்டு வந்துள்ளது. எனினும் இது அதிகாரப்பூர்வமாக தடுப்பூசியாக செயல்பாட்டுக்கு வரும் வரை தங்கத்தின் நிலை இது தான் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலையானது அதிகரித்து வருகின்றது. இது தற்போது 0.20% ஏற்றம் கண்டுள்ளது. தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3.75 டாலர்கள் அதிகரித்து 1821.20 டாலர்களாக அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஜூலை 8ம் தேதியன்று தங்கம் விலை 1829.80 டாலரினை தொட்டு இருந்த நிலையில், அந்த உச்ச விலையினை உடைத்து சென்றால் இன்னும் வேகமாக தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

வெள்ளியின் விலையினை பொறுத்த வரையில் சர்வதேச சந்தையில் மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளது. தற்போது 2.82% வெள்ளியின் விலையானது ஏற்றம் கண்டுள்ளது. தற்போது 0.581 டாலர் அதிகரித்து 20.773 டாலராக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையானது, இன்று அதிகபட்சமாக 20.848 டாலர்கள் வரை சென்ற நிலையில் தற்போது சற்று குறைந்து காணப்படுகிறது.

வெள்ளியின் அடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல்

வெள்ளியின் அடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல்

வெள்ளியின் அடுத்த ரெசிஸ்டன்ஸ் லெவல் 21.095 டாலர்கள் எனவும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இது கடைசியாக ஜூலை 1, 2016 அன்று இந்த உச்சவிலையினை தொட்டு இருந்த நிலையில் அதன் பிறகு இந்த விலையினை தொடவே இல்லை. ஆனால் தற்போதுள்ள நிலையில், விரைவில் அந்த உச்ச விலையினை முறியடிக்கலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலையானது மூன்றாவது நாளாக ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 114 ரூபாய் அதிகரித்து, 49,141 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது சுமார் 0.23% ஏற்றமாகும். இன்றைய புதிய உச்சம் 49,169 ரூபாயாகும்.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் வெள்ளியின் விலையானது கிடு கிடுவென ஏற்றம் கண்டு வருகிறது. வெள்ளியின் விலையும் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக ஏற்றம் கண்டு வரும் நிலையில், தற்போது 2.27% ஏற்றம் கண்டுள்ளது. தற்போது கிலோ வெள்ளியின் விலையானது 1,245 ரூபாய் ஏற்றம் கண்டு, 55,230 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

ஆபரண தங்கத்தின் விலை

ஆபரண தங்கத்தின் விலை

ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று இன்னும் மாற்றம் காணவில்லை. நேற்றைய விலையிலேயே காணப்படுகிறது. சென்னையில் தற்போது கிராமுக்கு 4,695 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 37,560 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திங்கட்கிழமையன்று தங்கம் விலையானது சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து இருந்த நிலையில், இன்று இன்னும் மாற்றம் காணவில்லை.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

தங்கம் விலையினை போலவே வெள்ளியின் விலையும் இன்னும் மாற்றம் காணவில்லை. இது தற்போது கிராமுக்கு 53.15 ரூபாயாகாவும், இதே 10 கிராமுக்கு 53,150 ரூபாயாகவும், கிலோவுக்கு 53,150 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திங்கட்கிழமையன்று கிலோவுக்கு வெள்ளியின் விலையானது 240 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices rises third day in a row in MCX

Gold price update.. Gold prices rises third day in a row in MCX
Story first published: Tuesday, July 21, 2020, 11:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X