மூன்றாவது நாளாக இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்.. இன்னும் குறையுமா.. இனி எப்படி இருக்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து சரிந்து வருகிறது.

எனினும் இது நிரந்தரமல்ல என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொருளாதாரம் இன்னும் சரியலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமையன்று இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது 0.03% குறைந்து, 10 கிராம் தங்கம் 47,930 ரூபாயாக குறைந்துள்ளது. இதே வெள்ளியின் விலையானது 0.3% குறைந்தும் காணப்படுகிறது.

விலை குறைய என்ன காரணம்?
 

விலை குறைய என்ன காரணம்?

கடந்த வாரத்தில் வரலாறு காணாத உச்சமான (10 கிராம்) 48,589 ரூபாயினை தொட்டது. இந்த நிலையில் வரலாற்று உச்சத்திலிருந்து இன்று மூன்றாவது நாளாக தங்கம் விலையானது சரிய ஆரம்பித்துள்ளது. இதற்கு என்ன காரணம், கொரோனாவின் தாக்கம் தான் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தானே செல்கிறது. கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றாலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத்தினை கருத்தில் கொண்டு லாக்டவுனில் தளர்வுகள் அளித்துள்ளன.

முதலீட்டாளர்களின் நம்பிக்கை

முதலீட்டாளர்களின் நம்பிக்கை

இதன் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி காண்பது தடுக்கப்படலாம் என்ற நம்பிக்கையும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதோடு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் மத்திய வங்கிகள் மீண்டும் வட்டி குறைப்பு செய்யலாம். இது தவிர இன்னும் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இருக்கலாம் என்றும் கூறியுள்ளன. இதன் காரணமாக தங்கம் விலையானது சற்று குறைந்து வருகிறது.

தங்கம் புராபிட் புக்கிங்

தங்கம் புராபிட் புக்கிங்

மேலும் முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கிய தங்கத்தினை புராபிட் புக்கிங் செய்து வருவதாலும் சந்தை சரிய ஆரம்பித்துள்ளது. ஆக மாத கடைசி மற்றும் வாராக் கடைசியான இன்றும் சந்தை சரிவுடனே தொடங்கியுள்ளது. ஆக இதுவும் தங்கம் விலை குறைய ஒரு காரணமாக அமைந்துள்ளது.

மீண்டும் அதிகரிக்கவே வாய்ப்பு
 

மீண்டும் அதிகரிக்கவே வாய்ப்பு

எனினும் நீண்டகால நோக்கில் காணும் போது தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது. ஏனெனில் என்ன தான் அரசாங்கம் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும், வட்டி குறைக்கப்பட்டாலும், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரம் என்னவாகுமோ? இதனால் பங்கு சந்தை என்னவாகுமோ? என்ற பயத்திலேயே முதலீட்டாளர்களின் கவனம் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இது தங்கம் விலை ஏற்றம் காரணமாக அமையும்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

இந்த நிலையில் இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது அவுன்ஸுக்கு 0.13% குறைந்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 2.25 டாலர்கள் குறைந்து, 1,768.45 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இதே சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில், மூன்றாவது நாளாக தங்கம் விலையானது சரிய ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் 0.16% வீழ்ச்சி கண்டுள்ளது. இது தற்போது 0.032 டாலர் குறைந்து, 17.863 டாலராக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையினை பொறுத்த வரையிலும் இந்த வாரம் முழுவதில் ஒரு நாள் ஏற்றம் கண்டாலும், அடுத்த நாள் வீழ்ச்சி கண்டு வருகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 106 ரூபாய் குறைந்து, 47,840 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது தொடர்ச்சியான மூன்று நாள் சரிவாகும். அது வரலாற்று உச்சத்திற்கு பின்பு ஏற்பட்ட சரிவாகும்.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையினை போலவே எம்சிஎக்ஸ் சந்தையிலும் வெள்ளியின் விலையானது ஒரு நாள் ஏற்றமெனில், மறுநாள் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் தான் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு 107 ரூபாய் குறைந்து, 48,970 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது 0.24% வீழ்ச்சியாகும்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்னும் மாற்றம் காணவில்லை. எனினும் வியாழக்கிழமையன்று 22 கிராம் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து 4,616 ரூபாயாக விற்பனையாகியுள்ளது. இதே சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து 36,928 ரூபாயாக குறைந்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது இன்னும் மாற்றம் காணவில்லை. கடந்த வியாழக்கிழமையன்று கிராமுக்கு 47.60 ரூபாயாகவும், இதே 850 ரூபாய் குறைந்து கிலோவுக்கு 47,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இது செவ்வாய்கிழமை தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்களாக குறைந்து வரும் வெள்ளியின் விலை இன்று என்ன ஆகுமோ?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices slashed for 3rd day in a row after record high

Gold and silver prices fall today. Hopes of further stimulus from central banks, its also supported gold prices.
Story first published: Friday, June 26, 2020, 11:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more