தங்கம் வாங்க இது செம சான்ஸ்.. 3% வீழ்ச்சிக்கு பிறகு தொடங்கிய ஏற்றம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஞாயிற்றுகிழமையன்று தான் தங்கம் விலையானது 50,000 ரூபாயினை தொடலாம். இது முதலீட்டாளர்களுக்கு வாங்குவதற்கு நல்ல சான்ஸ் என்று கூறியிருந்தோம்.

அதனை போலவே முந்தைய அமர்வில். 10 கிராம் தங்கம் விலையானது 51,650 ரூபாயாக தொடங்கி, அதிகபட்சமான 49,815 ரூபாய் வரை சரிந்தது. எனினும் முடிவில் 50,471 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.

சரி இன்றைய விலை நிலவரம் என்ன? இன்னும் தங்கம் விலை குறையுமா? இப்போது வாங்கி வைக்கலாமா? வாருங்கள் பார்க்கலாம்.

என்ன சொல்லியிருந்தோம்?
 

என்ன சொல்லியிருந்தோம்?

கடந்த ஞாயிற்று கிழமையன்று வெளியான https://tamil.goodreturns.in/news/gold-prices-first-correct-rs-50-000-then-it-will-touch-to-rs-56-000-in-next-2-3-month-020637.html கட்டுரையில், நிபுணர்கள் தங்கம் விலையானது 50,000 ரூபாய் வரையில் கூட குறையக்கூடும். ஆனால் இது முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த இடமாக இருக்கும். இங்கு தங்கத்தினை வாங்கி வைக்கலாம். இது அடுத்த மூன்று மாதங்களுக்குள் 56,000 ரூபாய் என்ற இலக்கினை தொடலாம் என்றும் கூறியிருந்தோம். உண்மையில் முதலீட்டாளர்களுக்கு நீண்டகால நோக்கில் முதலீடு செய்பவர்களுக்கு இது சிறந்த சான்ஸ் தான்.

ஏஞ்சல் புரோக்கிங் என்ன சொன்னது?

ஏஞ்சல் புரோக்கிங் என்ன சொன்னது?

இதே ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனமும், ஃபெடரல் வங்கி வங்கி விகிதத்தினை அப்படியே வைத்துள்ளது. அதே நேரம் அமெரிக்காவின் பொருளாதாரம் கொரோனாவின் காரணமாக தள்ளாடி வருகின்றது. அதோடு அமெரிக்காவின் தேர்தலும் நெருங்கி வரும் இந்த நேரத்தில், அதுவும் தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம் என்று எதிர்பார்க்கிறது. ஆக 10 கிராம் தங்கத்தின் விலையானது 50,500 ரூபாய் என்ற லெவலை தொடலாம். ஆக இந்த இடத்தில் முதலீட்டாளர்கள் வாங்க தொடங்கலாம். இது 55,000 ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளதாகவும் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சர்வதேச விலை நிலவரம்

இன்றைய சர்வதேச விலை நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது பலமான சரிவிற்கு பிறகு, தற்போது அவுன்ஸூக்கு 9.75 டாலர்கள் அதிகரித்து, 1920.45 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. சர்வதேச சந்தையில் முந்தைய அமர்வில் ஆரம்பத்திலேயே அவுன்ஸூக்கு 1957.30 டாலர்களாக தொடங்கிய விலையானது, குறைந்தபட்சமாக 1885.40 டாலர்கள் வரை சென்று, முடிவில் 1910.60 டாலர்களாகவும் முடிவடைந்தது. எனினும் இன்று காலை தொடக்கத்தில் 1922.05 டாலர்களாகவும் தொடங்கியுள்ளது.

இன்றைய சர்வதேச வெள்ளி விலை நிலவரம்
 

இன்றைய சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

கடந்த சில மாதங்களாகவே தங்கத்தினை போன்றே வெள்ளியின் விலையும் வர்த்தகமாகி வருகின்றது. இந்த நிலையில் தற்போது வெள்ளியின் விலையானது அவுன்ஸூக்கு 1.95% அதிகரித்து, 24.860 டாலர்களாகவும் வர்த்தகமாகி வருகின்றது. கிட்டதட்ட அதன் இரண்டு மாத குறைந்தபட்ச விலையை வெள்ளியின் விலையானது நேற்று உடைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய வர்த்தகத்தில் தங்கம் விலை

இந்திய வர்த்தகத்தில் தங்கம் விலை

திங்கட்கிழமையன்று பலத்த சரிவினைக் கண்டிருந்த தங்கம் விலையானது, சர்வதேச சந்தையின் எதிரொலியாக இன்று தொடக்கத்திலேயே 10 கிராம் தங்கத்தின் விலை 89 ரூபாய் அதிகரித்து தான் தொடங்கியது. எனினும் இது தற்போது 167 ரூபாய் அதிகரித்து, 50,615 ரூபாயாக வர்த்தகமாகியும் வருகிறது. நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இது வாங்க சிறந்த இடமாகவும் பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் எதிரொலியாகவும், புராபிட் புக்கிங் காரணமாகவும் வெள்ளியின் விலையானது நேற்றைய சந்தையில் பலத்த சரிவினைக் கண்டது. எனினும் இன்று தொடக்கத்திலேயே 553 ரூபாய் அதிகரித்து தான் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது கிலோ வெள்ளியின் விலையானது முந்தைய முடிவு விலையில் இருந்து 416 ரூபாய் அதிகரித்து, 61732 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

என்ன தான் காரணம்?

என்ன தான் காரணம்?

அமெரிக்கா டாலரின் மதிப்பு மற்ற நாணயங்களோடு ஒப்பிடும்போது, சற்று வலுவடைந்திருந்த நிலையில், தங்கம் விலையானது பலமான சரிவினைக் கண்டது. அதோடு தங்கம் விலையானது சரிய ஆரம்பித்த நிலையில், முதலீட்டாளர்கள் தங்களது ஆர்டர்களை புராபிட் செய்த காரணத்தினாலும் தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டது.

இன்று ஏன் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது?

இன்று ஏன் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது?

தங்கம் விலையானது 3% சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளதே ஏன்? ஐரோப்பிய மற்றும் இங்கிலாந்தில் இரண்டாம் சுற்று கொரோனா பரவல் தொடங்கியுள்ளதாக அச்சம் நிலவி வருகின்றது. இதனையடுத்து அந்த நாடுகள் மீண்டும் லாக்டவுன் விதிமுறைகளை சற்று கடுமையாக்க தொடங்கியுள்ளது. ஒரு முறை பரவலுக்கே பொருளாதாரம் நினைக்க முடியாத அளவு பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக பரவினால் என்ன ஆகுமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம், இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

ஜெரோம் பவல் என்ன கூறினார்?

ஜெரோம் பவல் என்ன கூறினார்?

கடந்த திங்கட்கிழமையன்று அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், அமெரிக்கா பொருளாதாரம் சற்று மேம்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். எனினும் கொரோனாவிலிருந்து முழுமையாக வளர்ச்சிக்கு இன்னும் நீண்ட காலம் செல்ல வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். முதலீட்டாளர் தங்களது முதலீடுகளை செய்யும் முன்னர் பவலின் பேச்சுகளையும் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் இவரின் கருத்து சற்று ஊக்கமளிப்பதாக இருந்த நிலையில் தங்கம் விலை நேற்று சரிவினைக் கண்டது.

தேர்தலுக்கு முன்பு ஊக்கத் தொகை அளிக்கப்படலாம்

தேர்தலுக்கு முன்பு ஊக்கத் தொகை அளிக்கப்படலாம்

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நவம்பர் மாத தொடக்கத்தில் வரவிருக்கும் நிலையில், பொருளாதாரத்தினை மீட்டெடுக்கவும், மக்களுக்கு உதவும் வகையிலும், நிதி ஊக்கம் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இவ்வாறு அறிவிக்கப்படும்போது விரைவில் பொருளாதாரம் மீண்டு வரும். டாலரின் மதிப்பும் வலுவலையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிர வைக்கும் ரகசிய ஆவணங்கள்

அதிர வைக்கும் ரகசிய ஆவணங்கள்

ஆனால் இதற்கிடையில் அமெரிக்க அரசின் அதிகாரிகளுக்கு சர்வதேச அளவில் செயல்படும் மிகப்பெரிய வங்கிகள் 2000வது ஆண்டில் இருந்து 2017வது ஆண்டு வரை அனுப்பிய ஆவணங்களில் 2500க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கசிந்துள்ளன. தற்போது ஊடங்களுக்கு கசிந்துள்ள 2,657 ஆவணங்களும் ஃபின்சென் (FinCEN) ஃபைல்ஸ் எனப்படுகின்றன. இவற்றில் சுமார் 2,100 சந்தகத்துக்குரிய பரிமாற்றங்கள் குறித்த அறிக்கைகள். ஆக இதுவும் டாலரின் மதிப்பில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices start to trade high after 3% down in early trade, its a super chance to buy

Gold and silver prices start to trade high after 3% down in early trade, its a super chance to buy in long term investors
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X