இன்றைய தங்கம் விலை என்ன.. கூடிருக்கா.. குறைஞ்சிருக்கா.. ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா முழுவதும் கொரோனா அலை வீசிக் கொண்டுள்ள நிலையில், இன்றளவிலும் நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டத்தினை பார்த்தால், இன்னும் எத்தனை கொரோனா போன்ற தொற்று நோய்கள் வந்தாலும், தங்கத்தின் மீதான ஈர்ப்பு மட்டும் குறையாது எனலாம்.

 

ரியல் எஸ்டேட்-ல் குறி.. 600 ஏக்கர் நிலத்தை வெறும் ரூ.391 கோடிக்கு வாங்கி அசத்தும் பேஸ்புக் மார்க்.!

அந்தளவுக்கு மாஸ்க் போட்டுக் கொண்டு, கடைகளில் மக்கள் கூட்டம் உள்ளது. அதிலும் இன்று சர்வதேச சந்தை மற்றும் இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகிறது. ஆனால் அதே நேரம் ஆபரண தங்கத்தின் விலையானது அதிகரித்து காணப்படுகிறது.

சர்வதேச சந்தையின் விலையினை பொறுத்தே, ஆபரண தங்கத்தின் விலை இருக்கும். ஆனால் அங்கு குறைந்துள்ள போதிலும், இங்கு விலை அதிகரித்துள்ளதே? என்ன காரணம்? தற்போது தங்கம் மற்றும் வெள்ளின் விலை நிலவரம் என்ன? முக்கிய காரணிகள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது நேற்றும் பலமான ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 6.30 டாலர்கள் குறைந்து, 1785.50 டாலர்களாக காணப்படுகிறது. எனினும் தங்கம் விலையானது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக தற்போது சற்று குறைந்திருந்தாலும், பின்னர் அதிகரிக்கலாம் என்ற நிலையே காணப்படுகிறது. இது குறுகிய கால வர்த்தகர்கள் தங்கள் லாபத்தினை புராபிட் புக்கிங் செய்வதால் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கம் விலையினை போலவே வெள்ளி விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.16% குறைந்து, 26.920 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் காணப்படுகிறது. ஆக தற்போது குறைந்தாலும் மீண்டும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை
 

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 193 ரூபாய் குறைந்து, 47,126 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், நீண்டகால் நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையினை போலவே பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. மே காண்டிராக்ட் நாளை எக்ஸ்பெய்ரி ஆக உள்ள நிலையில், ஜூலை காண்டிராக்டில் வர்த்தகத்தினை செய்யலாம். ஜூலை காண்டிராக்டில் தற்போது கிலோவுக்கு 180 ரூபாய் குறைந்து, 70,720 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக வெள்ளியின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்றும் தங்கம் ஆபரணத்தின் விலையானது அதிகரித்துள்ளது. இன்று கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து, 4,452 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 35,616 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த இரண்டு தினங்களாக தங்கம் விலையானது, ஒன்பது நாட்களுக்கு பிறகு மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் தூய ( 24 கேரட்) தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு 33 ரூபாய் அதிகரித்து, 4,857 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 264 ரூபாய் அதிகரித்து, 38,856 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக ஒன்பது தினங்களாக சரிவினைக் கண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 1.80 ரூபாய் அதிகரித்து, 75.30 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே கிலோவுக்கு இன்று 1,800 ரூபாய் அதிகரித்து, 75,300 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகிறது. இது தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக ஏற்றத்தினை கண்டு வருகின்றது.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவலாக 46,900 ரூபாயும், ஒரு வேளை ஏற்றம் கண்டால் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலாக 47,800 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இது டாலரின் மதிப்பு வலுவிழந்தால் இந்த லெவலை விரைவில் தொடலாம் என்ற நிலையே இருந்து வருவதாகவும் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்

விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்

அமெரிக்கா போன்ற நாடுகள் வட்டி விகிதத்தினை இன்னும் குறைவாகவே வைத்துள்ளன. இதனால் தங்கம் விலையானது ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக பங்கு சந்தைகளும் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. ஆக இதுவும் முதலீட்டாளார்களை தங்கத்தின் பக்கம் திருப்பலாம். ஆக தங்கத்தின் விலையானது அதிகரிக்கவே சற்று வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கத்தினை பொறுத்த வரையில் தற்போதைக்கு குறைந்தாலும், நீண்ட கால நோக்கில் வாங்கி வைக்கலாம். அதோடு பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாகவே உள்ளன. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் தற்போது குறைந்தாலும், மீண்டும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices struggle today: is it right time to buy?

Gold price update.. Gold prices struggle today: is it right time to buy?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X