தங்கம் கொடுக்கப் போகும் செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. அமெரிக்காவின் முதலீட்டு குரு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தட தடவென புதிய உச்சத்தினை தொட்டு வந்தது. இந்த தங்கம் விலை எப்போது தான் குறையும்? குறையவே குறையாதா? என்ற பல கேள்விகள் எழுந்தன.

இதற்கு எல்லாம் பதிலளிக்கும் விதமாக நடப்பு மாத தொடக்கத்தில் கணிசமாக தங்கம் விலை குறைந்தாலும், மீண்டும் மீண்டும் ஏற்றம் காணவே துடிக்கிறது.

ஏனெனில் தங்கத்திற்கு சாதகமாக பல காரணிகள் உள்ளன. இத்தகைய சூழலில் தங்கம் விலையானது அதிகரிக்காமல் இருக்குமா? உலகமே பாதுகாப்பு புகலிடம் என நினைக்கும் தங்கம்னா சும்மாவா? நிச்சயம் முதலீடுகள் அதிகரிக்கத் தானே செய்யும்.

அமெரிக்காவின் முதலீட்டு குரு
 

அமெரிக்காவின் முதலீட்டு குரு

முன்னதாக பல நிபுணர்கள் தங்கம் விலையானது நிச்சயம் அதிகரிக்கும் என்று தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவின் முதலீட்டு குரு என்று அழைக்கப்படும் ஜிம் ரோஜர்ஸ், மிகப்பெரிய முதலீட்டாளர். நிதி ஆலோசகர், நூலசிரியர் என பல பதவிகளுக்கு உரியவர், அதுமட்டும் அல்ல ரோஜர்ஸ் ஹோல்டிங்ஸ் அண்ட் பீலான்ட் என்ற குழுமத்தின் தலைவரும் இவர் தான்.

யார் இந்த ஜிம் ரோஜர்ஸ்

யார் இந்த ஜிம் ரோஜர்ஸ்

அதோடு ரோஜர்ஸ் இண்டர்நேஷனல் காமாடிட்டீஸ் இன்டெக்ஸ் என்ற நிறுவனத்தினையும் தொடங்கியவர். இது தான் இப்படி எனில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் வால் ஸ்ட்ரீட்டில் பணி புரிய தொடங்கியுள்ளார். அங்கு தான் அவர் பங்கு சந்தை மற்றும் பத்திர சந்தை பற்றிய கற்றுக் கொண்டார். இப்படி அடி மட்டத்தில் இருந்து தொடங்கி, இன்று அமெரிக்காவின் முதலீட்டு குருவாக மாறியுள்ளார்.

இவரின் அனுபவம் என்ன?

இவரின் அனுபவம் என்ன?

1973-களில் சொரேஸ் மற்றும் ரோஜர்ஸ் இருவரும் குவாண்டம் ஃபண்டினை நிறுவினர். இந்த ஃபண்ட் 1970 - 1980 வரையில் போர்ட் போலியோவில் 4200% பங்கினை பெற்றதாகவும் தரவுகள் கூறுகின்றன. அந்த சமயத்தில் அமெரிக்காவின் S&P கூட 47% தான் வளர்ச்சி கண்டதாகவும் கூறப்படுகிறது. இப்படி உலகையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்த ஒரு உலகளாவிய ஃபண்டு தான் குவாண்டம்.

தங்கத்தில் முதலீடு செய்து வருகிறேன்
 

தங்கத்தில் முதலீடு செய்து வருகிறேன்

இப்படி ஒரு பெரும் நிபுணர் தான் தற்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது மீண்டும் அதிகரிக்கும். ஏனெனில் மக்கள் அவற்றை வாங்கி வைத்துக் கொண்டே தான் இருப்பர். இதன் விளைவாக மீண்டும் அவைகள் விரைவில் புதிய உச்சத்தினை தொடும். இந்த மூத்த நிபுணரும் கூட தங்கம் மற்றும் வெள்ளியில் தொடர்ச்சியாக 2019 முதல் முதலீடுகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டும் அல்ல இன்னும் சிறிது காலத்திற்கு தொடர்ந்து முதலீடு செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தங்கம் சிறந்த முதலீடு

தங்கம் சிறந்த முதலீடு

நடப்பு ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளி முதலீடுகளானது மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடும்போது, மிகச் சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது. இன்று வரை சுமார் வெள்ளி 50% ஏற்றத்துடனும், தங்கம் 28% ஏற்றத்துடனும் காணப்படுகிறது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது, மீண்டும் புதிய உச்சத்தினை தொடும் என்றும் ரோஜர் கூறியுள்ளார்.

அடுத்த சில ஆண்டுகள் வரை பிரச்சனை இருக்கும்

அடுத்த சில ஆண்டுகள் வரை பிரச்சனை இருக்கும்

மேலும் உலகம் அடுத்த சில ஆண்டுகளுக்கு பிரச்சனைகளை சந்திக்கும் என்றும் கூறியுள்ளார். சமீபத்திய மாதங்களில் உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட தங்கத்தின் பக்கம் மாறி வருகின்றனர். குறிப்பாக பங்கு சந்தையின் தந்தை என்று அழைகப்படும் வாரன் பஃபெட் கூட சமீபத்திய மாதங்களுக்கு முன்பு தங்கம் சார்ந்த பங்குகளில் 563 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளார்.

பேங்க் ஆஃப் அமெரிக்கா எதிர்பார்ப்பு

பேங்க் ஆஃப் அமெரிக்கா எதிர்பார்ப்பு

2020ம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 3000 டாலர்களை எட்டும் என்றும் பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் எதிர்பார்க்கின்றது. இதே சிட்டி குரூப் மற்றும் நியூயார்க்கினை தளமாகக் கொண்ட சொத்து மேலாண்மை நிறுவனமான எலக்ட்ரம் குழுமத்தின் நிறுவனர் தாமஸ் கபிலன் தங்கம் விலையானது 5,000 டாலரினை தொடலாம் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை அதிகரிக்கும்

தங்கம் விலை அதிகரிக்கும்

கோப்பர்னிக் குளோபல் முதலீட்டாளர்களின் ஆராய்ச்சி இயக்குனர் அலிசா கோர்கரன், தங்கமானது இன்னும் ஏற்றம் காணும். இது டாலரில் அவுன்ஸூக்கு 5000 டாலர் வரை கூட செல்லக்கூடும் என்றும் கணித்திருந்தார். இப்படி பல தரப்பட்ட நிபுணர்களும் கூறும் ஒருமித்த கருத்து, தங்கம் விலை அதிகரிக்கும் என்பது தான்.

சர்வதேச விலை நிலவரம் என்ன?

சர்வதேச விலை நிலவரம் என்ன?

சர்வதேச சந்தையினை பொருத்த வரையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 20 டாலர்கள் குறைந்து 1949.15 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளியின் விலையானது 2% வீழ்ச்சி கண்டு, அவுன்ஸூக்கு 26.925 டாலர்களாகவும் வர்த்தகமாகி வருகிறது.

இந்திய சந்தையில் விலை நிலவரம்

இந்திய சந்தையில் விலை நிலவரம்

இதுவே இந்திய சந்தையில் தங்கம் விலையானது தற்போது 10 கிராமுக்கு 464 ரூபாய் குறைந்து, 51,360 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 1189 ரூபாய் குறைந்து, 67,582 ரூபாயாக வர்த்தகமாகியும் வருகிறது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே அமைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை

இதே ஆபரனத் தங்கத்தின் விலையானது சென்னையில் இன்று கிராமுக்கு 36 ரூபாய் குறைந்து, 4,909 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து, 39,272 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இதே போல் வெள்ளியின் விலையானது கிராமுக்கு 67.80 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 1,200 ரூபாய் குறைந்து, 67,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டும் வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices will soon hit new record high

Gold and silver prices will soon hit new record high, but today falls in sharply
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X