தங்கத்திற்குப் பதில் 'இதுல' முதலீடு செய்யலாம்..! ஆனா ஒன்னு..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை மதியம் 2.30 மணிக்கு 0.28 சதவீதம் வரையில் அதிகரித்து 56,707 ரூபாயாக உள்ளது.

இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.71 சதவீதம் வரையில் உயர்ந்து 68,845.00 ரூபாயாக உள்ளது.

இதேபோல் உள்நாட்டு ஸ்பாட் மார்கெட்டில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 56,777.00 ரூபாயாக உள்ளது, இதே போல் 1 கிலோ வெள்ளி விலை 68,352.00 ரூபாயாக உள்ளது. சர்வதேச ஸ்பார்ட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1936 டாலர் வரையில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தங்கத்திற்கு இணையாக முதலீடு எது..?

வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.. என்ன காரணம்..?

ரெசிஷன்

ரெசிஷன்


இன்று தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையிலும், இந்திய பொருளாதாரம் ரெசிஷன் தொடர்ந்து துரத்தி வரும் நிலையிலும், தங்கக் கடனுக்கான டிமாண்ட் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

தங்க கடன்

தங்க கடன்

இதேபோல் இது தங்க கடன் அளிக்கும் நிறுவனங்களின் பங்குகளில் பாசிடிவ் ஆன தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பங்குச் சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்வதைக் காட்டிலும் தங்கம் மற்றும் தங்க கடன் சார்ந்த பங்குகளில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும்.

பயன்
 

பயன்

தங்கக் கடனைக் கையாளும் வங்கிகள் இந்தத் தங்கத்தின் விலை உயர்வால் பயனடையும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர். ஏனெனில் கடன் வாங்க திட்டமிடுவோருக்குத் தற்போது வங்கியில் அதிகப்படியான வட்டியில் கடன் அளிக்கும் காரணத்தால் தங்க நகை வைத்து கடன் வாங்கும் போது குறைவான வட்டியில் கடன் பெற முடியும்.

தங்கக் கடன் ஆர்டர் புத்தகம்

தங்கக் கடன் ஆர்டர் புத்தகம்

மஞ்சள் உலோகமான தங்கம் விலை உயர்வு காரணமாக, வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தங்கக் கடன் ஆர்டர் புத்தகம் பெரிய அளவில் உயர உள்ளது. இதனால் நிதி நிறுவனங்களின் மார்ஜின் அளவுகளில் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

2 நிதி நிறுவனங்கள்

2 நிதி நிறுவனங்கள்

இந்த நிலையில் பங்குச் சந்தை வல்லுநர்கள் கூறுகையில் இந்தியாவில் தங்கக் கடனை மொத்த மற்றும் முக்கியமான வணிகமாகக் கொண்டு இயங்கும் நிதி நிறுவனங்கள் மிகவும் குறைவு என்றாலும், 2 நிதி நிறுவனங்கள் உள்ளது.

முத்தூட் மற்றும் மணப்புரம் ஃபைனான்ஸ்

முத்தூட் மற்றும் மணப்புரம் ஃபைனான்ஸ்

முத்தூட் ஃபைனான்ஸ் மற்றும் மணப்புரம் ஃபைனான்ஸ் ஆகியவை தங்கக் கடன் வழங்குவதில் பெரும் பங்கீட்டை இந்தியா முழுவதும் வைத்துள்ளது. தங்கத்தின் விலை நடுத்தர முதல் நீண்ட காலத்திற்கு ஏற்றம் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், முத்தூட் ஃபைனான்ஸ் மற்றும் மணப்புரம் ஃபைனான்ஸ் பங்குகளை வாங்குவதற்குச் சிறந்த வாய்ப்பாகச் சந்தை வல்லுனர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

உங்கள் முடிவு உங்கள் கையில்

உங்கள் முடிவு உங்கள் கையில்


இந்த நிலையில் தங்கத்தை நேரடியாக வாங்குவதை விட முத்தூட் ஃபைனான்ஸ் மற்றும் மணப்புரம் ஃபைனான்ஸ் பங்குகளை வாங்குவது சரியா என்பதை வாசகர்களாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.சரியான முடிவை நீங்களே சந்தை நிலவரத்தை ஆய்வு செய்து சொந்த ரிஸ்க்-ல் முதலீடு செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold rates today hits new high; Investor can invest in these 2 gold related stocks

gold rates today hits new high; Investor can invest in these 2 gold related stocks
Story first published: Friday, January 20, 2023, 15:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X