தங்கம் விலையானது இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தொடர்ச்சியாக, இம்மாத தொடக்கத்தில் இருந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
இது தங்கத்தினை வாங்க நினைப்பவர்களுக்கும், முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கும் இது சரியான வாய்ப்பு எனலாம்.
இன்று சர்வதேச சந்தையானது விடுமுறை. அதே நேரம் இந்திய எம்சிஎக்ஸ் சந்தையும் விடுமுறையாகும். எனினும் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்றும் சரிவினைக் கண்டுள்ளது.
ஒரு மாத சரிவில் தங்கம் விலை.. இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது..!

ஆபரணத் தங்கம் விலையில் என்ன மாற்றம்
ஆபரணத் தங்கத்தின் விலையினை பொறுத்த வரையில் இம்மாத தொடக்கத்தில் ஒரு நாள் தவிர மற்ற அனைத்து நாட்களும் சரிவினைக் கண்டு வருகின்றது. அந்த ஒரு நாளும் கூட விலையில் மாற்றம் காணவில்லை எனலாம். இதே வெள்ளியின் விலையும் பலமான சரிவினைக் கண்டு வருகின்றது.

முந்தைய அமர்வில் தங்கம் விலை?
கடந்த அமர்வில் தங்கம் விலையானது யாரும் எதிர்பாராத வகையில் 2.51% அதாவது 45.40 டாலர்கள் குறைந்து 1763.40 டாலர்களாக முடிவுற்றுள்ளது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் கடந்த அமர்வில் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. சந்தை முடிவில் 950 ரூபாய்க்கும் மேலாக சரிவினைக் கண்டு 46,651 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையும் பெரும் சரிவினைக் கண்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தினை பொறுத்த வரையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து இன்று வரையிலும் சரிவினைக் கண்டு வருகின்றது. இன்று கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, 4,440 ரூபாயாகவும், சவரனுக்கு 35,520 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இன்றோடு தொடர்ச்சியாக தங்கம் விலையானது ஏழு நாட்கள் சரிவில் காணப்படுகிறது. இது தங்கம் வாங்க சாமனியர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

சென்னையில் தூய தங்கத்தின் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சரிவில் காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 66 ரூபாய் குறைந்து, 4844 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 38,752 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 48,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுவும் தொடர்ச்சியாக ஏழு நாட்களாக சரிவிலேயே காணப்படுகிறது.

சென்னையில் ஆபரண வெள்ளி விலை
தங்கம் விலையானது பெரியளவில் சரிவினைக் கண்டுள்ள நிலையில், வெள்ளியின் விலையும் இன்று சரிவினைக் கண்டுள்ளது. இன்று கிராமுக்கு 1.50 ரூபாய் குறைந்து, 70.20 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு, 1,500 ரூபாய் குறைந்து, 70,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெள்ளியின் விலையானது கடந்த 7 நாட்களில் 4 நாட்கள் சரிவிலும், 2 நாட்கள் ஏற்றத்திலும், 1 நாள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

தேவை எப்படியிருக்கும்?
தங்கத்தின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. எனினும் மூன்றாவது அலை குறித்தான அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இதனால் அத்தியாவசியம் தவிர மற்றவற்றிற்கு செலவிட மக்கள் யோசித்து வருகின்றனர். எப்படியிருப்பினும் இந்த குறைந்த விலையானது தங்கம் விலையை ஆதரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற முக்கிய நகரங்களில் விலை நிலவரம்
சென்னை
தங்க ஆபரணத்தின் விலை சவரனுக்கு - ரூ.35,520
தூய தங்கத்தின் விலை 10 கிராமுக்கு - ரூ.48,440
வெள்ளியின் விலை கிலோவுக்கு - ரூ.70,200
மும்பை
தங்க ஆபரணத்தின் விலை சவரனுக்கு - ரூ.36,560
தூய தங்கத்தின் விலை 10 கிராமுக்கு - ரூ.46,700
வெள்ளியின் விலை கிலோவுக்கு - ரூ.65,000

Array
டெல்லி
தங்க ஆபரணத்தின் விலை சவரனுக்கு - ரூ.36,800
தூய தங்கத்தின் விலை 10 கிராமுக்கு - ரூ.50,180
வெள்ளியின் விலை கிலோவுக்கு - ரூ.65,000
கொல்கத்தா
தங்க ஆபரணத்தின் விலை சவரனுக்கு - ரூ.35,080
தூய தங்கத்தின் விலை 10 கிராமுக்கு - ரூ.47,840
வெள்ளியின் விலை கிலோவுக்கு - ரூ.70,200

Array
பெங்களூர்
தங்க ஆபரணத்தின் விலை சவரனுக்கு - ரூ.35,080
தூய தங்கத்தின் விலை 10 கிராமுக்கு - ரூ.47,840
வெள்ளியின் விலை கிலோவுக்கு - ரூ.65,000
கேரளா
தங்க ஆபரணத்தின் விலை சவரனுக்கு - ரூ.35,080
தூய தங்கத்தின் விலை 10 கிராமுக்கு - ரூ.47,840
வெள்ளியின் விலை கிலோவுக்கு - ரூ.70,200

Array
ஹைத்ராபாத்
தங்க ஆபரணத்தின் விலை சவரனுக்கு - ரூ.35,080
தூய தங்கத்தின் விலை 10 கிராமுக்கு - ரூ.47,840
வெள்ளியின் விலை கிலோவுக்கு - ரூ.70,200
மதுரை
தங்க ஆபரணத்தின் விலை சவரனுக்கு - ரூ.35,520
தூய தங்கத்தின் விலை 10 கிராமுக்கு - ரூ.48,440
வெள்ளியின் விலை கிலோவுக்கு - ரூ.70,200