விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் எம்&எம்.. கொரோனா காலத்தில் சூப்பர் அறிவிப்பு.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலுக்கு மத்தியில் மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனம், புதிய டிராக்டர் வாடிக்கையாளார்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக ஒரு சூப்பர் அறிவிப்பினை அறிவித்துள்ளது.

 

அந்த வகையில் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான அவசர நிதி உதவி திட்டத்தினையும் அறிவித்துள்ளது.

டாக்டர் ரெட்டி ஊழியர்களுக்கு ரஷ்ய ஸ்புட்னிக்-வி தடுப்பூசி.. 15 நாட்களுக்குள் 5 கோடி வேக்சின் இறக்குமதி..!

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் M-Protect COVID திட்டத்தின் மூலம் இந்த உதவிகளை செய்யவிருப்பதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிராக்டர் வாடிக்கையாளார்களுக்கு இன்சூரன்ஸ்

டிராக்டர் வாடிக்கையாளார்களுக்கு இன்சூரன்ஸ்

இந்த நிறுவனத்தின் M-Protect COVID திட்டத்தின் மூலம் புதிய டிராக்டர் வாடிக்கையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், கோவிட்-19 பாதிப்பிலிருந்து நிதி ரீதியிலாக பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அல்லது அவரது குடும்பத்தினர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், அதனை ஈடுகட்ட இன்சூரன்ஸ் மூலம் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தினை எம்&எம் அறிவித்துள்ளது.

கடன் உதவி

கடன் உதவி

கோவிட்-19 சிகிச்சையின் போது ஏற்படும் மருத்துவ செலவினங்களை ஆதரிக்க, கடன் உதவியையும் மஹிந்திரா செய்யும். இதே வாடிக்கையாளர் துரதிஷ்டவசமாக கொரோனாவின் காரணமாக இறந்துவிட்டால், அவர்களது டிராக்டர் கடனுக்கும் இன்சூரன்ஸ் மூலம் ஈடுகட்டும். இது மஹிந்திரா லோன் சுரக்சா என்ற ஆப்சன் மூலம் செய்வதாக தெரிவித்துள்ளது.

யார் யாருக்கு பொருந்தும்?
 

யார் யாருக்கு பொருந்தும்?

இது மே 2021ல் வாங்கிய அனைத்து எம்&எம் நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளார்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது.

இது குறித்து எம்&எம் நிறுவனத்தின் தலைவர் ஹேமந்த் சிக்கா, M-Protect Covid Plan என்ற திட்டம், விவசாயிகளைக் இலக்காகக் கொண்ட ஒரு புதிய முயற்சி. இந்த கடினமான காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம்.

ஆரோக்கியமான நிலை

ஆரோக்கியமான நிலை

கொரோனா நெருக்கடி காலத்தில் M-Protect Covid Plan திட்டம் மூலம் நாங்கள் விவசாயிகளுக்கு, ஆதரவளிப்பதும், அவர்களுக்கு சேவை செய்வதையும் நாங்கள் பாக்கியமாக நினைக்கிறோம். இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள், பயன் பெறுவார்கள் என்று நம்புகிறோம் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Good news! M&M announces Rs.1 lakh health insurance for new tractor customers

M&M latest updates.. Good news! M&M announces Rs.1 lakh health insurance for new tractor customers
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X