தறி கெட்டு ஓடும் பங்குச் சந்தையில் லாபம் பார்க்க மல்டி கேப் ஃபண்டுகள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிக ஏற்ற இறக்கங்கள் இருக்கும் இந்திய பங்குச் சந்தையில் எப்படி நல்ல லாபத்தைப் பார்ப்பது..? இதோ ஒரு அருமையான வழி... மியூச்சுவல் ஃபண்ட். அதிலும் குறிப்பாக மல்டி கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து நல்ல லாபம் பார்க்கலாம். மல்டி கேப் ஃபண்டுகள் அனைத்து ரக (லார், மிட், ஸ்மால்) கேப்களிலும் முதலீடு செய்வதால், வருமானம் பேலன்ஸ்டாகவும், கொஞ்சம் அதிகமாகவும் இருக்கும். சரி, நாம் ஏன் இந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும், தற்போது சந்தையில் அப்படி என்ன ரிஸ்க் இருக்கிறது..?

ஆர்பிஐ வட்டி விகிதங்களைக் குறைக்காதது, ஒபெக் நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக் கொள்ள சம்மதித்து இருப்பதால் கச்சா எண்ணெய் விலை கொஞ்சம் அதிகரித்து இருப்பது போன்ற மேக்ரோ பொருளாதார விஷயங்கள் இன்று சந்தையை கீழே இழுத்து இருக்கின்றன. அதோடு தனி நிறுவனங்கள் மற்றும் பங்குகள் சார் செய்திகளும் குறைவாக இருந்ததால் சந்தை ஏற்றத்தைக் காணவில்லை.

தறி கெட்டு ஓடும் பங்குச் சந்தையில் லாபம் பார்க்க மல்டி கேப் ஃபண்டுகள்..!

 

நாம் ஏற்கனவே சொன்னது போல, சென்செக்ஸ் டே சார்ட் பேட்டனில் 28 நவம்பர் 2019 அன்றைக்கு, ஒரு மிக சரியான ஹேமர் பேட்டன் உருவானதால், இறக்க டிரெண்ட் தொடங்கி இருப்பதாகச் சொல்லி இருந்தோம். அந்த இறக்க டிரெண்டு இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

டெக்னிக்கலாக, சென்செக்ஸின் டே சார்ட்டில், எலியட் வேவ் தியரி படி பார்த்தால் இப்போது இறக்க டிரெண்டு தான் தொடர்கிறது என்றும் முன் கூட்டியே சொல்லி இருந்தோம். எனவே தற்போதைய சூழலில் சந்தை மேலும் இறக்கம் காணத் தொடங்கினால் 40,125 புள்ளிகளை முதல் சப்போட்டாக வைத்துக் கொள்வோம். 40,000 புள்ளிகளை அடுத்த வலுவான சப்போட்டாக வைத்துக் கொள்வோம். ஏதாவது நல்ல செய்தி வந்து ஒரு நல்ல ஏற்றம் காணவில்லை என்றால்... சென்செக்ஸ் 40,000 புள்ளிகளைக் கூட தொடலாம் என முன்பே சொல்லி இருந்ததை, இப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என நேற்றைய பங்குச் சந்தை குளோசிங் செய்தியில் சொல்லி இருந்தோம். அது போலவே நடந்தால் நாம் இன்னும் கூட பங்குச் சந்தைகளில் அதிக இழக்க வேண்டி இருக்கும். எனவே கீழே கொடுத்து இருக்கும் மல்டி கேப் ஃபண்டுகளில் ஏதாவது நல்ல ஃபண்டைத் தேர்வு செய்து நல்ல லாபத்தைப் பாருங்கள். உங்கள் ஃபண்ட் தேர்வுக்கு வாழ்த்துகள்.

கடந்த 5 ஆண்டில் நல்ல வருமானம் கொடுத்த மல்டி கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள்
ஃபண்டுகளின் பெயர்ஃபண்ட் வகைதொடங்கிய தேதிவருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Axis Focused 25 Fund | Invest OnlineEQ-MLCJun-201211.998,800
Motilal Oswal Multicap 35 Fund - Regular Plan | Invest OnlineEQ-MLCApr-201411.4313,513
SBI Focused Equity Fund | Invest OnlineEQ-MLCOct-200411.196,125
Tata Retirement Savings Fund - Progressive Plan - Regular Plan | Invest OnlineEQ-MLCNov-201111.12717
Parag Parikh Long Term Equity Fund - Regular Plan | Invest OnlineEQ-MLCMay-201310.682,480
Kotak Standard Multicap Fund Regular Plan | Invest OnlineEQ-MLCSep-200910.3428,348
IIFL Focused Equity Fund - Regular PlanEQ-MLCOct-201410.24446
SBI Magnum Multicap Fund | Invest OnlineEQ-MLCSep-200510.178,334
Aditya Birla Sun Life Equity Fund | Invest OnlineEQ-MLCAug-19989.6611,594
Quant Active FundEQ-MLCMar-20019.6311
கடந்த 5 ஆண்டில் மோசமான வருமானம் கொடுத்த மல்டி கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள்
ஃபண்டுகளின் பெயர்ஃபண்ட் வகைதொடங்கிய தேதிவருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
LIC MF Multicap Fund | Invest OnlineEQ-MLCApr-19933.56299
Taurus Starshare (Multi Cap) Fund - Regular PlanEQ-MLCJanuary-19943.62218
ICICI Prudential Focused Equity Fund | Invest NowEQ-MLCMay-20093.94669
HDFC Focused 30 Fund | Invest OnlineEQ-MLCSep-20044.37507
Union Multi Cap FundEQ-MLCJun-20114.42308
Nippon India Multi Cap Fund | Invest OnlineEQ-MLCMar-20054.8410,308
Baroda Multi Cap FundEQ-MLCSep-20035.07820
HSBC Multi Cap Equity Fund | Invest OnlineEQ-MLCFeb-20045.83446
HDFC Equity Fund | Invest OnlineEQ-MLCJan-19956.2023,441
IDFC Focused Equity Fund - Regular PlanEQ-MLCMar-20066.321,533

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

good returns giving multi cap equity funds

The Indian share markets are highly volatile now. So the investors can invest in multi cap mutual funds to get more returns.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more