பேஸ்புக்-கிற்குப் போட்டியாகக் கூகிள்.. வோடபோன் ஐடியாவில் முதலீடு செய்யக் கூகிள் திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையனஸ் ஜியோ நிறுவனத்தில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பேஸ்புக் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இதேபோல் அமெரிக்காவில் பேஸ்புக் உடன் டிஜிட்டல் விளம்பர வர்த்தகத்தில் போட்டி போடும் கூகிள் வோடபோன் ஐடியா நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு வருகிறது.

 

ஜியோ அறிமுகத்தாலும் அதன் அதிரடி வளர்ச்சியாலும் அதிகளவில் பாதிக்கப்பட்ட ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள், வர்த்தகத்தையும் நிறுவனத்தையும் காப்பாற்றிக்கொள்ள ஒன்றிணைந்தனர். ஆயினும் வோடபோன் ஐடியா கூட்டணி தற்போது மிகப்பெரிய கடன் சுமையில் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா-வின் இந்த மோசமான காலத்தில் தான் கூகிள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கூகிள்

கூகிள்

பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன பங்குகளில் முதலீடு செய்த நிலையில், கூகிள்-ம் இந்திய டெலிகாம் நிறுவனங்களில் முதலீடு செய்ய முடிவு செய்தது.

ஜியோ வந்த பின்பு 8க்கும் அதிகமாக இருந்த டெலிகாம் நிறுவனங்கள் தற்போது வெறும் 3 ஆக மாறியுள்ள நிலையில் கூகிள் நிறுவனத்திற்கு 2 வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. ஒன்று ஏர்டெல் மற்றொன்று வோடபோன் ஐடியா. எந்தக் காரணத்திற்காகக் கூகிள், வோடபோன் ஐடியா நிறுவனத்தைத் தேர்வு செய்தது எனத் தெரியவில்லை.

ஆனால் வோடபோன் ஐடியா நிறுவனத்தில் சுமார் 5 சதவீத பங்குகளைக் கைப்பற்றக் கூகிள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியா

கூகிள்-இன் இந்த முடிவு மோசமான வர்த்தக நிலையில் இருக்கும் வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு ஒரு ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும். வோடபோன் ஐடியா கூட்டணி நிறுவனத்தில் பிரிட்டன் டெலிகாம் நிறுவனமான வோடபோன் 45 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளது.

ஆனால் இந்நிறுவனம் தற்போது மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை மட்டும் 58,000 கோடி ரூபாயாக உள்ளது. இது இந்நிறுவனத்தின் மதிப்பை பல மாதங்களாகச் சீர்குலைத்து வருகிறது.

குமார் மங்களம் பிர்லா
 

குமார் மங்களம் பிர்லா

டிசம்பர் மாதம் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தில் மத்திய அரசு சலுகை கொடுக்கவில்லை என்றால் நிறுவனத்தை மூடுவது தவிர வேறு வழி இல்லை எனத் தெரிவித்தார்.

இத்தகைய மோசமான சூழ்நிலையில் இருக்கும் வோடபோன் ஐடியா நிறுவனத்தில் கூகிள் முதலீடு செய்ய வருகிறது.

ஜியோ

ஜியோ

கொரோனா பாதிப்பால் சர்வதேச சந்தை மிகவும் மோசமான நிலையில் இகுக்கும் இந்த லாக்டவுன் காலத்திலேயே ஜியோ வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் 10 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்து அசத்தி வருகிறது.

ஆனால் பல ஆண்டுகளாக இந்தியாவில் கொடிகட்டிப் பறந்த வரும் வோடபோன் ஐடியா, ஏர்டெல் மிகவும் மோசமான வர்த்தகத்தையும் வருவாயும் பெற்று வருகிறது.

முக்கியச் செய்தி

அம்பானி திட்டமே வேற.. இனி டார்கெட் இந்தியா இல்லை..!

இந்தியாவை விட 40% அதிக வருமானம் தரும் ஆப்பிரிக்கா.. 1 பில்லியன் டாலரை நோக்கி ஏர்டெல்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google eyes stake in Vodafone Idea: Report

Tech titan Google is said to be exploring taking a minority stake in British telecom group Vodafone's struggling India business.Alphabet Inc's Google is looking to buy about 5 per cent stake in Vodafone Idea Ltd. The investment in Vodafone Idea will pit google against Facebook which has picked up a stake in Jio Platforms
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X