இந்திய வங்கிகளுக்கு தலைவலியாக மாறும் கூகுள்.. 6.85% வட்டியில் வைப்பு நிதி சேவை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வங்கிகள் ஏற்கனவே வாராக் கடன் மூலம் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், தனியார் வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகள் மத்தியில் வர்த்தகத்தை ஈர்க்க அதிகளவிலான போட்டி உருவாகியுள்ளது.

 

இந்தச் சூழ்நிலையில் அமெரிக்காவின் முன்னணி டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான கூகுள் அறிவித்துள்ள புதிய சேவை இந்திய வங்கிகளுக்குப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

இப்படி என்ன சேவையைக் கூகுள் அறிமுகம் செய்துள்ளது..?! ஏன் காலம் காலமாக இருக்கும் இந்திய வங்கிகளுக்குக் கூகுள் நிறுவனத்தின் புதிய சேவை அப்படி என்ன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது..?!

இந்திய ஐடி நிறுவனங்களுக்கு இது பொற்காலம் தான்.. ஊழியர்களுக்கும் ஜாக்பாட் தான்..!

ஆன்லைன் நிதியியல் சேவைகள்

ஆன்லைன் நிதியியல் சேவைகள்

இந்தியாவில் தற்போது ஆன்லைன் நிதியியல் சேவைகள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக ஆன்லைன் பேமெண்ட் சேவையில் இந்தியாவின் முன்னணி பேமெண்ட் நிறுவனமாக இருக்கும் 2 முக்கிய நிறுவனங்களில் ஒன்று கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே சேவை.

கூகுள் பே தளம்

கூகுள் பே தளம்

கூகுள் பே தளம் கடந்த சில வருடங்களாகவே பேமெண்ட் சேவையைத் தாண்டி பல இணை சேவைகளை அளித்து வருகிறது. உதாரணமாகக் கிரெடிட் கார்டு சேவைகள், கடன் சேவைகள், ஷாப்பிங் தளத்தில் சேவை ஆஃபர் எனப் பல தரப்பட்ட சேவைகளை அளித்து வருகிறது. இது பெரிய அளவில் வர்த்தகத்தை உருவாக்காவிட்டாலும், தற்போது அறிவித்துள்ள சேவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வருட வைப்பு நிதி சேவை
 

ஒரு வருட வைப்பு நிதி சேவை

கூகுள் பே சேவை தளத்தில் தற்போது புதிதாக ஒரு வருடம் வைப்பு நிதி சேவையை ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி உடன் இணைந்து அளிக்கிறது. இதில் என்ன ஸ்பெஷல் என நீங்கள் கேட்கலாம். இந்திய சந்தையில் கிடைக்கும் ஒரு வருட வைப்பு நிதி திட்டத்திற்கு அளிக்கப்படும் வட்டி விகிதத்தை விடவும் அதிக வட்டி வருமானத்தைக் கூகுள் பே வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அளிக்கிறது.

6.85 சதவீத வட்டி வருமானம்

6.85 சதவீத வட்டி வருமானம்

இந்தியாவில் டாப் முன்னணி வங்கிகளில் ஒரு வருட வைப்பு நிதிக்கு அதிகப்படியாக 5.75 சதவீத வட்டியில் வைப்பு நிதி அளிக்கப்படும் நிலையில் தற்போது கூகுள் பே - ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி இணைந்து ஒரு வருட வைப்பு நிதிக்கு 6.85 சதவீத வட்டி வருமானத்தை அளிக்கிறது. இது மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் அதிகமான வட்டி வருமானம் அளிக்கப்படுகிறது.

டிஜிட்டல் மற்றும் பின்டெக் நிறுவனங்கள்

டிஜிட்டல் மற்றும் பின்டெக் நிறுவனங்கள்

இந்தியாவில் காலம் காலமாக இருக்கும் வங்கிகளை விடவும் டிஜிட்டல் மற்றும் பின்டெக் நிறுவனங்கள் அதிக வட்டி வருமானத்தைக் கொடுக்கும் காரணத்தால் பெரும் பகுதி மக்கள் குறிப்பாக 20 முதல் 40 வயதுடைய மக்கள் இந்த ஆன்லைன் சேவை தளத்திற்கு மாற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

இந்திய வங்கிகளின் பிக்சட் டெப்பாசிட்

இந்திய வங்கிகளின் பிக்சட் டெப்பாசிட்

இது இந்திய வங்கிகளின் அடிப்படை வர்த்தகமான பிக்சட் டெப்பாசிட் திட்டத்தைப் பாதிக்கும் காரணத்தால் வங்கிகள் தற்போது செய்வது அறியாமல் நிற்கிறது. பின்டெக் நிறுவனங்களுக்குப் போட்டியாக வட்டியை உயர்த்தினால் வங்கிகள் அதிகளவிலான வருமானத்தை இழக்க நேரிடும். இந்தச் சூழ்நிலையில் வங்கிகள் செய்வது அறியாமல் நிற்கிறது.

சீனாவின் ஆதிக்கம்

சீனாவின் ஆதிக்கம்

சீனாவில் கிட்டதட்ட இதேபோன்ற நிலை உருவாகியுள்ளது, சீனாவில் டெக் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மக்களின் தினசரி வர்த்தகத்தில் அதாவது பேமெண்ட் முதல் ஷாப்பிங் முதல் அனைத்திலும் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்திய நிலையில், அடிப்படை கடன் மற்றும் வைப்பு நிதி சேவைக்கு மக்கள் வங்கிகளை நாடாமல் பின்டெக் நிறுவனங்களை நம்பி அதிகம் இருக்கின்றனர். இதேபோன்ற நிலை தான் தற்போது இந்தியாவில் உருவாகத் துவங்கியுள்ளது.

வைப்பு நிதி ஆதிக்கம்

வைப்பு நிதி ஆதிக்கம்

இந்தியா போன்று நடுத்தர மக்கள் வாழும் நாட்டில் மக்கள் அதிகம் நம்பும் மிக முக்கியமான முதலீட்டுத் திட்டம் இந்த வைப்பு நிதி தான். இந்நிலையில் சில சதவீதம் கூடுதலாக வட்டி கிடைக்கும் பட்சத்திலும், கூகுள் அமேசான் போன்ற நிறுவனங்களின் கூடுதலான பாதுகாப்பு இருக்கும் காரணத்தால் மக்கள் பின்டெக் சேவைகளை அதிகம் பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

கூகுள் பே Vs இந்திய வங்கிகள்

கூகுள் பே Vs இந்திய வங்கிகள்

கூகுள் பே தளத்தில் ஒரு வருட வைப்பு நிதிக்கு 6.85 சதவீதம் வட்டி மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.35 சதவீதம் வட்டி வருமானத்தை அளிக்கும் நிலையில் நாட்டின் பிற முக்கிய வங்கிகளில் வட்டி நிலவரம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

பாரத ஸ்டேட் வங்கி - 2.90% முதல் 5.40% வரை

ஐசிஐசிஐ வங்கி - 2.50% முதல் 4.40% வரை

HDFC வங்கி - 2.50% முதல் 5.50% வரை

பஞ்சாப் நேஷனல் வங்கி - 2.90% முதல் 5.25% வரை

கனரா வங்கி - 2.90% முதல் 5.25% வரை

ஆக்சிஸ் வங்கி - 2.50% முதல் 5.75% வரை

பேங்க் ஆஃ பரோடா - 2.80% முதல் 5.25% வரை

IDFC வங்கி - 2.75% முதல் 5.75% வரை

இந்திய வங்கி - 2.85% முதல் 5.05% வரை

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி - 3.00% முதல் 5.30% வரை

யெஸ் வங்கி - 3.25% முதல் 6.50% வரை

இண்டஸ்இண்ட் வங்கி - 2.50% முதல் 6.00% வரை

UCO வங்கி - 2.75% முதல் 5.00% வரை

யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா (இப்போது பஞ்சாப் நேஷனல் வங்கி) - 2.90% முதல் 5.25% வரை

அலகாபாத் வங்கி (இப்போது இந்தியன் வங்கி) - 2.90% முதல் 5.15% வரை

மத்திய வங்கி - 2.75% முதல் 5.00% வரை

இந்தியன் வங்கி - 2.90% முதல் 5.15% வரை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 3.40% முதல் 5.25% வரை

பந்தன் வங்கி - 3.00% முதல் 5.00% வரை

டிபிஎஸ் வங்கி - 2.75% முதல் 5.50% வரை

ஆந்திரா வங்கி (இப்போது யூனியன் வங்கி) - 3.00% முதல் 5.60% வரை

எச்எஸ்பிசி வங்கி - 2.25% முதல் 4.00% வரை

சிண்டிகேட் வங்கி (இப்போது கனரா வங்கி) - 2.90% முதல் 5.25% வரை

டூயட்ஷே வங்கி - 1.80% முதல் 6.25% வரை

எஸ்பிஎம் வங்கி - 2.50% முதல் 6.00% வரை

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி - 3.00% முதல் 5.30% வரை

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google pay gives more interest rate for one year Fixed deposit than Traditional banks

Google pay gives more interest rate for one year Fixed deposit than Traditional banks
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X