கூகுள் எனக்கு வேண்டாம்.. பதவி விலகிய மூத்த அதிகாரி.. காரணத்தை கேட்டா அசந்து போவீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூகுள் எனக்கு வேண்டாம்.. பதவி விலகிய மூத்த அதிகாரி.. காரணம் இது தான்..!

 

சான்பிரான்சிஸ்கோ: பல ஆயிரம் பேருக்கு வாழ்வு அளிக்கும் கூகுள் நிறுவனம். இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வில் பெரும் அங்கம் வகிக்கும் ஒரு நிறுவனம் என்றே கூறலாம்.

ஏனெனில் அந்தளவுக்கு கூகுள் நிறுவனம் நம் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தையே வேண்டாம் என கூகுளின் அதிகாரி ஒருவர் வேலையிலிருந்து விலகியுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் மனிதவளத் துறை அதிகாரியான எலீன் நோட்டன் அந்த பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சுந்தர் பிச்சை நன்றி

சுந்தர் பிச்சை நன்றி

இது குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறுகையில், எலீன் செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் கூகுளில் அவரின் அடுத்த அத்தியாயத்தை எதிர்நோக்குகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். எலீன் மனிதவள அதிகாரியாக இருக்கும் போது சுமார் 70,000 ஊழியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

வளர்ச்சியில் பங்களிப்பு

வளர்ச்சியில் பங்களிப்பு

மேலும் எலீன் நோட்டன் மனிதவளத் தலைவராக இருந்த காலத்தில், நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக வளர்ந்தது. மேலும் எலீன் நிறுவனத்தில் சேர்ந்ததிலிருந்து, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் விற்பனை மற்றும் செயல்பாடுகளை வழி நடத்துவதற்கும், குறிப்பிடத்தக்க காலகட்டத்தில், எங்கள் வளர்ச்சியில் பங்கெடுத்து, பணியாளர்கள் செயல்பாட்டுக் குழுவை வழிநடத்துவதற்கும் எலீன் ஏராளமான பங்களிப்புகளைச் செய்துள்ளார் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

குடும்பத்துடன் இருக்க ஆசை
 

குடும்பத்துடன் இருக்க ஆசை

இதே இந்த பதவி விலகல் குறித்து எலீன் கூறுகையில், நியூயார்க் நகரில் உள்ள தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்க மனிதவள தலைமைப் பொறுப்பிலிருந்து தற்போது விலகுவதாக கூறியுள்ளார். மேலும் நானும் என் கணவரும் ஆறு வருடங்களுக்கு பிறகு குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கவே இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளோம். இதனால் நான் நியூயார்க் திரும்ப வேண்டும் என்றும் எலீன் கூறியுள்ளார்.

பெரும் சர்ச்சை

பெரும் சர்ச்சை

நியாயமற்ற நடைமுறைகளுக்கு எதிராக பேசிய பணியாளர்களை வேலையிலிருந்து தூக்கியதாகக் கூறப்படும் கூகுள், அப்பிரச்னையால் கடந்த ஆண்டில் பல விமர்சனங்களை எதிர்கொண்டது. மேலும் தரவு பாதுகாப்பு கொள்கைகளை மீறியதன் அடிப்படையில் கூகுள் நிறுவனம், கடந்த நவம்பரில் நான்கு ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இது பின்னர் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google’s Chief HR step down as company faces worker activism

Google has confirmed that head of human resources Eileen naughton was step down away from her job. Sundar pichai said google added 70,000 employees during naughton’s period as head HR.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X