மோடி அரசின் அடுத்த குறி ஆட்டோமொபைல் துறை.. 5 கோடி வேலைவாய்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்றில் இருந்து சரிந்துக் கிடக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்க மத்திய அரசு பல முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

 

குறிப்பாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அரசு சொத்துக்களைப் பணமாக்கும் தேசிய பணமாக்கல் திட்டம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனைகளைப் பெற்று வந்தாலும் மத்திய அரசிடம் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தனது 6 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு திரட்டல் இலக்கில் தொடர்ந்து பயணிக்கப் போகிறது.

இரண்டாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

இந்தச் சூழ்நிலையில் நாட்டின் பல அடிப்படை பிரச்சனைகளை ஆட்டோமொபைல் துறை மூலம் தீர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நித்தின் கட்கரி ஆட்டோமொபைல் துறைக்குப் புதிய இலக்கை நிர்ணயம் செய்துள்ளார்.

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரத்தில் சுமார் 7.1 சதவீத ஜிடிபி-ஐ ஆட்டோமொபைல் துறையை சார்ந்து உள்ளது. இந்த அளவீட்டை 12 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜிடிபி வளர்ச்சி

ஜிடிபி வளர்ச்சி

கிட்டத்தட்ட 5 சதவீதம் ஜிடிபி வளர்ச்சியைக் கூடுதலாக ஆட்டோமொபைல் துறையில் இருந்து பெற வேண்டும் என்றால் பல வளர்ச்சி திட்டங்கள், பல தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் தற்போது இருக்கும் கட்டமைப்பில் இந்த வளர்ச்சியை அடைவது சாத்தியமற்ற ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும் நிலையில், மத்திய அரசு இத்துறைக்கு மிகப்பெரிய ஊக்க திட்டத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோமொபைல் துறை
 

ஆட்டோமொபைல் துறை

இதுமட்டும் அல்லாமல் ஆட்டோமொபைல் துறையில் தற்போது இருக்கும் 37 மில்லியன் வேலைவாய்ப்பு ஆதாரங்களை 50 மில்லியனாக அதாவது 5 கோடியாக உயர்த்தவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நித்தின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நித்தின் கட்கரி - SIAM அமைப்பு

நித்தின் கட்கரி - SIAM அமைப்பு

நித்தின் கட்கரி SIAM அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய போது இந்த அறிவிப்புகளையும், இலக்குகளையும் அறிவித்தார். இதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவுத் திட்டத்தில் ஆட்டோமொபைல் துறை பெரும் பங்கு வகிக்கும் எனவும் நித்தின் கட்கரி பேசியுள்ளார்.

உற்பத்தித் துறை ஜிடிபி

உற்பத்தித் துறை ஜிடிபி

இந்தியாவின் மொத்த ஜிடிபி-யில் 49 சதவீதம் உற்பத்தித் துறையைச் சார்ந்து உள்ளது, இதில் சுமார் 7.1 சதவீத ஜிடிபி ஆட்டோமொபைல் துறையை மட்டுமே சார்ந்து உள்ளது. மேலும் ஆட்டோமொபைல் துறை வருடத்திற்குச் சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தைச் செய்கிறது. இதில் 3.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் ஏற்றுமதி வர்த்தகம் ஆகும் .

இந்தியாவின் உற்பத்தி தளம்

இந்தியாவின் உற்பத்தி தளம்

அடுத்த சில வருடத்தில் இந்தியாவை உலகின் முன்னணி உற்பத்தி தளமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் அரசு பயணிக்கிறது என மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி SIAM வருடாந்திர கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt Big targets on automobile sector: GDP, job creation says Nitin Gadkari

Govt Big targets on automobile sector: GDP, job creation says Nitin Gadkari
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X