1.63 லட்ச ஜிஎஸ்டி பதிவுகள் ரத்து.. போலி நிறுவனங்களை களையெடுக்கும் அரசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வரி ஏய்ப்பு அதிகளவில் நடக்கும் காரணமாக மத்திய அரசு போலி நிறுவனங்களை முடக்க வேண்டும் எனத் திட்டமிட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கையின் மூலம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் மட்டும் சுமார் 1.63 லட்சம் போலி நிறுவனங்களின் பதிவுகளை ரத்து செய்துள்ளது.

மேலும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள ஜிஎஸ்டி ரிஜிஸ்ட்ரேஷன்கள் கடந்த 6 மாதத்தில் ஒரு முறை கூட ஜிஎஸ்டி ரிட்டனஸ் பதிவு செய்யவில்லை என வருவாய் துறை தெரிவித்துள்ளது.

மோசடியில் ஈடுபட்ட 132 பேர் கைது
 

மோசடியில் ஈடுபட்ட 132 பேர் கைது

நவம்பர் மாதத்தின் 2வது வாரத்தில் போலி ஜிஎஸ்டி பில் (Invoice) மோசடிக்கு எதிராக மத்திய ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் பிரிவு மற்றும் CGST கமிஷனர்ஸ் ஆகிய அமைப்பு இணைந்து எடுத்த நடவடிக்கையில் இதுவரை 4 பட்டய கணக்காளர்கள் மற்றும் போலி பில்களை ஒப்புதல் அளிக்கும் ஒரு பெண் உட்படச் சுமார் 132 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

1,430 வழக்குகள்

1,430 வழக்குகள்

இதுமட்டும் அல்லாமல் 1,430 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, நாடு முழுவதும் சுமார் 4,586 போல் GSTIN கண்டறியப்பட்டு உள்ளது. இது நாடு முழுவதும் பெரிய அளவில் நடக்கும் மோசடியாகவும் பார்க்கப்படும் காரணத்தால் மத்திய கடந்த 2 மாதமாகக் கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.

அக்ஷய் ஜெயின்

அக்ஷய் ஜெயின்

சமீபத்தில் 4வதாகக் கைது செய்யப்பட்ட அக்ஷய் ஜெயின் என்ற ஒரு சார்ட்டட் அக்கவுண்டண்ட் 14 போலி நிறுவனங்களை வைத்துக்கொண்டு சுமார் 20.97 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போலி பில்களைக் கொடுத்து மோசடி செய்துள்ளார்.

GSTR-3B அறிக்கை
 

GSTR-3B அறிக்கை

தற்போது மத்திய அரசு 6 மாதம் GSTR-3B அறிக்கை சமர்ப்பிக்காத GSTIN அமைப்பிற்கு முதல் ரத்துச் செய்யப்படும் நோட்டீஸ் அனுப்படுகிறது. இதன் பின்பு எவ்விதமான முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என வருவாய்த் துறை தெரிவித்துள்ளனர்.

GST கணக்காளர்கள்

GST கணக்காளர்கள்

இந்தியாவில் தற்போது செய்யப்பட்ட ஆய்வில் சுமார் 28,635 GST கணக்காளர்கள் GSTR-3B அறிக்கை சமர்ப்பிக்காமல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஜிஎஸ்டி கமிஷ்னரேட்ஸ் அமைப்பு அனைத்து கணக்குகளையும் ரத்து செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

போலிக் கணக்குகள்

போலிக் கணக்குகள்

இதில் அகமதாபாத் பகுதியில் இருந்து மட்டும் சுமார் 11,048 ஜிஎஸ்டி பதிவுகளையும், சென்னை பகுதியில் 19,586 ஜிஎஸ்டி பதிவுகளையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது என வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt cancelled 1.63 lakh GST registrations: biggest crackdowns on fake firms

Govt cancelled 1.63 lakh GST registrations: biggest crackdowns on fake firms.
Story first published: Saturday, December 12, 2020, 13:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X