“என் மருமகனுக்கு ஒட்டகப் பால் வேணுங்க.. ப்ளீஸ்” உதவியால் நெகிழச் செய்த அரசு அதிகாரிகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் லாக் டவுனால் மக்கள் இயல்பாக தங்களுக்குத் தேவையான உணவுகளைக் கூட வாங்கிச் சாப்பிட முடியவில்லை.

 

உதாரணத்துக்கு சிக்கன் சாப்பிட்டால் உடம்புக்கு ஒப்புக் கொள்ளாது என்பார்கள், எனவே அவர்கள் மட்டன் அல்லது மீன் சாப்பிட்டுக் கொள்வார்கள்.

ஆனால் சாதாரணமாக இந்த பிராண்ட் நூடுல்ஸ் செட் ஆகாது, அந்த பிராண்ட் பருப்பு சாப்பிட்டால் வாந்தி வரும், இந்த கடையில் வாங்கும் அரிசி தான் ஒத்து வரும்... என நம் வீட்டிலேயே பார்த்து பார்த்து மளிகை சாமான்களை வாங்குவதை நாம் பார்த்து இருப்போம்.

அது என்ன மணி மார்க்கெட் ஃபண்ட்? என்ன வருமானம் கொடுக்குது?

ஒட்டகப் பால்

ஒட்டகப் பால்

அப்படி ஒரு பிரச்சனைக்கு தான் அரசு இயந்திரம், உதவி செய்து இருக்கிறது. சந்தன் குமார் ஆச்சார்யா என்பவரின் மருமகனுக்கு சுமார் 3.5 வயது இருக்கும். இந்த குழந்தை ஆட்டிஸாத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை. அந்த குழந்தைக்கு ஒட்டகப் பால் மற்றும் பருப்பு வகைகள் மட்டும் தான் உணவு.

நோ டெலிவரி

நோ டெலிவரி

இவர்கள் ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் பெர்ஹம்பூரில் வாழ்கிறார்கள். இந்த கொரோனா லாக் டவுன் பிரச்சனையால் ஒட்டகப் பால் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. வழக்கமாக ஒட்டகப் பால் கொடுக்கும் வியாபாரிகளால் ஒட்டகப் பாலைக் கொண்டு வந்து கொடுக்க முடியவில்லை.

உதவி கேட்டு ட்விட்
 

உதவி கேட்டு ட்விட்

எனவே ட்விட்டர் பக்கத்தில், ஒட்டகப் பால் கேட்டு ட்விட் செய்கிறார். கஞ்சம் மாவட்ட நிர்வாகம் + மாவட்ட எஸ்பி + ஒடிஸா மாநில மின்சார வாரியத்தின் CEO-வாக இருக்கும் அருண் பொத்ரா அதிகாரி போன்றவர்களுக்கு, தன் டிவிட்டில் டேக் செய்து இருக்கிறார்.

சொந்த மாநிலம்

சொந்த மாநிலம்

அருன் பொத்ரா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் ஏற்கனவே மும்பையில் ஒரு பெண்ணின் குழந்தைக்கு ஒட்டகப் பால் தேவை என்ற போது, அவருக்கு ஒட்டகப் பால் கிடைக்கச் செய்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. நம் சந்தன் குமாரின் ட்விட்டுக்கு உடனடியாக பதில் கொடுத்து இருக்கிறார் அருண் பொத்ரா. அதோடு IRTS SETU-க்கு விவரங்களை அனுப்பி இருக்கிறார்.

IRTS SETU

IRTS SETU

இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை, தானாக முன் வந்து தொடங்கிய ஒரு திட்டம் இது. இதில் சுமார் 30 அதிகாரிகள் பணி புரிந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் நோக்கமே, கொரோனா லாக் டவுன் காலத்திலும், இந்தியாவின் எந்த ரயில் நிலையத்தில் இருந்து எந்த ரயில் நிலையத்துக்கு வேண்டுமானாலும், சரக்கு ரயில்கள் வழியாக, தேவையான சரக்குகளை அனுப்பி வைப்பது தான்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

IRTS SETU அமைப்பினர், ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் ஃபல்னா (Falna) என்கிற ஊரின் ரயில் நிலையத்தில் இருந்து 10 லிட்டர் ஒட்டகப் பால் மற்றும் 1 கிலோ பால் பவுடரை, சரக்கு ரயிலில் ஏப்ரல் 21 அன்று பார்சல் போட்டு அனுப்பி இருக்கிறார்கள். ஏப்ரல் 23 அன்று சந்தன் குமார் கையில் அவர் கேட்ட ஒட்டகப் பால் இருக்கிறது.

நன்றி

நன்றி

கொரோனா லாக்டவுனால் என்னால் வெளியே வர முடியாது. ரயில்வேஸ், அருன் பொத்ரா அதிகாரி மற்றும் காவலர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் தான் இன்று எனக்கு ஒட்டகப் பால் கிடைத்து இருக்கிறது என மகிழ்ச்சியாகச் சொல்லி இருக்கிறார் சந்தன் குமார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt officials helped a guy in odisha to get camel milk from rajasthan

The Government officials helped a guy in odisha to get camel milk from Rajasthan, this guy's nephew is an autistic kid who takes only camel milk and pulses as his food.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X