இந்திய பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இந்திய விமானத் துறைக்கு 83 லைட் காம்பேட் போர் விமானத்தை வாங்குவதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உடன் 48,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் மத்திய அரசு செய்துள்ளது.
மத்திய அரசு தற்போது வாங்கும் தேஜஸ் விமானம் சிங்கிள் இன்ஜின் கொண்ட, அதிகச் சக்திவாய்ந்த சூப்பர்சோனிக் பைட்டர் விமானமாகும். இந்த விமானம் கொண்டு அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளில் சிறப்பான பாதுகாப்பை அளிக்க முடியும்.

நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புத் துறை அமைப்பு (Cabinet Committee on Security -CCS), கடந்த மாதம் இந்திய விமானப் படையை வலிமைப்படுத்துவதற்காக 73 தேஜஸ் MK-IA வகை விமானத்தையும், 10 LCA தேஜஸ் MK-I பயிற்சி விமானத்தையும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து வாங்க ஒப்புதல் அளித்தது.

48,000 கோடி ரூபாய் ஒப்பந்தம்
இதைத் தொடர்ந்து தான் தற்போது மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மத்தியிலான 48,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஏரோ இந்தியா 2021 நிகழ்ச்சி
ஏரோ இந்தியா 2021 துவக்க விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின், கையகப்படுத்தும் பிரிவின் தலைவரான விஎல் காந்தா ராவ், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர் மாதவன் அவர்களிடம் இந்த ஒப்பந்தத்தைக் கொடுத்தார்.

ராஜ்நாத் சிங்
இந்த ஏரோ இந்தியா 2021 நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு துவங்கிவைத்து மட்டும் அல்லாமல் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் அமைச்சர் ராஜ்நாத் சிங் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேக் இன் இந்தியா திட்டம்
இந்தியாவின் பாதுகாப்புத் துறையை மேம்படுத்த மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது மறந்திருக்க முடியாது. இந்நிலையில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மத்தியில் நடந்த 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்கும் திட்டம் தான் மேன் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நடந்த மிகப்பெரிய பாதுகாப்புத் துறை ஒப்பந்தமாக விளங்குகிறது.

இந்தியா - சீனா எல்லை பிரச்சனை
இந்தியா - சீனா எல்லை பிரச்சனையை நாளுக்கு நாள் பெரியதாக வெடித்து வரும் நிலையில் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் பாதுகாப்புத் துறைக்குக் கடந்த பட்ஜெட் அறிக்கையை விடவும் 1.4 சதவீதம் அதிகமாகத் தொகையைப் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

4.78 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
இந்நிலையில் கடந்த பட்ஜெட் அறிக்கையில் இந்திய பாதுகாப்புத் துறைக்கு 4.71 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், 2021 மத்திய பட்ஜெட் அறிக்கையில் 4.78 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு இன்றைய சூழ்நிலைக்குப் போதுமா..? என்பதற்கான உங்கள் கருத்தை கமெண்ட் பதிவிடும் இடத்தில் பதிவிடுங்கள்.