நடப்பு ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகளில் ஒன்று, கிரிப்டோகரன்சி மூலம் பெறப்படும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் என்று கூறியது தான்.
அப்படி வரிவிதிகப்பட்டால் கிரிப்டோக்கரன்சி முதலீடுகளை அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்தது.
ரூ.6 லட்சம் கோடி அவுட்.. முதல் நாளே கஷ்ட காலம்.. ஏன்.. என்ன ஆச்சு..?
ஆனால் இதற்கும் ஒரு முட்டுகட்டையை போட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். சமீபத்தில் ஒரு அறிக்கையில் கிரிப்டோகரன்சிகளுக்கு வரி விதித்தால், அது சட்டபூர்வமானதாகிவிடுமா? என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

வரி வருவாய்க்கான சாத்தியக் கூறு
இதுவே அரசு எந்தளவுக்கு கிரிப்டோகரன்சிகள் குறித்து யோசிக்கிறது என்பதை தெளிவாக சுட்டிக் காட்டியது. இதற்கிடையில் இன்று வெளியான அறிக்கை ஒன்றில் கிரிப்டோ சொத்துகள் மூலம் அரசுக்கு வரி வருவாய் ஈட்டுவதற்காக சாத்தியக் கூறு இருப்பதாக கூறியுள்ளார்.

நிச்சயமற்ற நிலை
பட்ஜெட்டில் அரசின் அறிவிப்பினால் கிரிப்டோகரன்சி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 30% வரி செலுத்த வேண்டியிருக்கும். எனினும் அது சட்டபூர்வமானது அல்ல, அதனை தடை செய்யவும் இல்லை என்று கூறப்பட்டது. மேலும் கிரிப்டோகரன்சிகளை முறைப்படுத்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரையில் அப்படி எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாறாக ரிசர்வ் வங்கி மூலம் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

வருமானம் வருவதற்கான வாய்ப்பு
இந்த நிலையில் தான் இந்தியா குளோபல் போரம் கிரிப்டோவின் எதிர்காலத்தினை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, பலர் இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளில் வருமானத்தினை பார்த்திருக்கிறார்கள். அதனால் அதில் அரசுக்கு வருமானம் வருவதற்கான வாய்ப்பினை பார்க்கிறேன் என்று நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

சட்டபூர்வமா?
கிரிப்டோகரன்சிகளை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான கருத்தினை கூறிய நிதியமைச்சர், இது குறித்தான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பேச்சு வார்த்தை முடிந்த பிறகு , சட்ட பூர்வமான ஆலோசனைகளும் ஆலோசிக்கப்படும். அதன் பிறகு அரசு இதனை பற்றிய இறுதி முடிவினை எடுக்கலாம் என கூறியுள்ளார்.