பசுமை வரி.. பழைய வாகன உரிமையாளர்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டியிருக்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பழைய வாகனங்களுக்கான வாகன விதிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மாறவுள்ளது. எட்டு வருடங்கள் பழமையான போக்குவரத்து வாகனங்களின் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படுகையில், சாலை வரியில் 10 முதல் 25 சதவீதம், பசுமை வரியாகப் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

 

இதே தனியார் வாகனங்கள் 15 வருடங்களுக்குப் பிறகு பதிவு சான்றிதழை புதுப்பிக்கும்போது இந்த பசுமை வரி விதிக்கப்படும்.

அதோடு 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவை ரத்து செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு குறிப்பாக அதிகம் மாசடைந்த நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அதிகப்படியான பசுமை வரி (சாலை வரியில் 50%) விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் 8 ஆண்டுகளுக்கு மேலாக வைத்துள்ளீர்களா?

நீங்கள் 8 ஆண்டுகளுக்கு மேலாக வைத்துள்ளீர்களா?

நீங்கள் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வாகனத்தினை வைத்துள்ளீர்களா? அப்படி எனில் நீங்கள் விரைவில் பசுமை வரி செலுத்த வேண்டியிருக்கும். அதெல்லாம் சரி. வருடத்திற்கு எவ்வளவு வரி செலுத்த வேண்டும் வாருங்கள் பார்க்கலாம். அதிலும் உங்கள் வாகனங்கள் டெல்லி போன்ற அதிகம் மாசு நிறைந்த நகரங்களில் இருந்தால், உங்கள் வாகனங்களுக்கு சாலை வரியில் 50% பசுமை வரியாக விதிகப்படும் என்பதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இவர்களுக்கு சலுகை உண்டு

இவர்களுக்கு சலுகை உண்டு

எனினும் இதில் ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவெனில், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மட்டுமே இந்த பசுமை வரி விதிகக்ப்படும். இதில் விவசாய வாகனங்கள், எல்பிஜி, சிஎன்ஜி, மின்சார வாகனங்களுக்கு இந்த பசுமை வரி கிடையாது. சரி எந்த வாகனங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படலாம் வாருங்கள் பார்க்கலாம்.

கார்களுக்கு எவ்வளவு பசுமை வரி?
 

கார்களுக்கு எவ்வளவு பசுமை வரி?

வர்த்தக ரீதியான கார்களுக்கு 8 வருடத்திற்கு மேல் ஆகிவிடும் பட்சத்தில் வருட சாலை கட்டணமாக 1600 - 3600 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதில் 10 - 25% பசுமை வரியாக வருடத்திற்கு 160 - 900 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

இதே CV goods 2T வகையான வாகனங்களுக்கு 8 வருடத்திற்கு மேல் சாலை வரியாக 1730 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில் 10 -25% பசுமை வரியாக 173 - 433 ரூபாய் வரையில் வசூலிக்கப்படலாம்.

வர்த்தக வாகனங்களுக்கு எவ்வளவு வரி

வர்த்தக வாகனங்களுக்கு எவ்வளவு வரி

  • CV goods 7.5T வகையான வாகனங்களுக்கு 8 வருடத்திற்கு மேல் சாலை வரியாக 4180 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில் பசுமை வரியாய்க 10 -25% எனில் 418 - 1045 ரூபாய் வரையில் பசுமை வரியாக வசூலிக்கப்படலாம்.
  • CV goods 16T வகையான வாகனங்களுக்கு 8 வருடத்திற்கு மேல் சாலை வரியாக 8510 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில் பசுமை வரியாய்க 10 -25% எனில் 851 - 2128 ரூபாய் வரையில் பசுமை வரியாக வசூலிக்கப்படலாம்.
  • இதே CV goods 25T வகையான வாகனங்களுக்கு 8 வருடத்திற்கு மேல் சாலை வரியாக 15,260 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில் பசுமை வரியாய்க 10 -25% எனில், 1526 - 3815 ரூபாய் வரையில் பசுமை வரியாக வசூலிக்கப்படலாம்.
  • இந்த வரி விகிதம் மகாராஷ்டிரா வரி விகிதத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இது IIFL அறிக்கையினை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Green tax: old vehicle owners may have to pay up to Rs.3815 per year

Green tax updates.. Old vehicle owners may have to pay up to Rs.3815 per year
Story first published: Thursday, January 28, 2021, 12:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X