மாநில அரசுகளுக்கான GST தொகைக்கு வாய்ப்பு இல்ல போலருக்கே? ஜிடிபி சரிவு சொல்வதென்ன!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில், இன்று காலை பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியே ஜிடிபி சரிவு தான். சமூக வலைதளங்களில் கூட, ஜிடிபி சரிவைப் பற்றி காரசாரமான விவாதங்கள் எல்லாம் போய்க் கொண்டு இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

 

ஜூன் 2020 காலாண்டில், இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி, இதுவரை வரலாறு காணாத அளவுக்கு 23.9 சதவிகிதம் சரிந்து இருக்கிறது.

இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய சரிவு. பல்வேறு தரகு நிறுவனங்கள், இந்த ஜூன் 2020 காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 15 - 26 சதவிகிதம் சரியலாம் எனக் கணித்து இருந்தார்கள்.

கட்டுமானம், உற்பத்தி துறை பின்னடைவு.. மோசமான சரிவுக்கு இதுவும் முக்கிய காரணம்.. !

முதல் காலாண்டு

முதல் காலாண்டு

இந்தியா, கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து, ஒவ்வொரு காலாண்டுக்கும் ஜிடிபி தரவுகளை வெளியிடத் தொடங்கியது. அன்றில் இருந்து இன்று வரை, இந்தியாவின் பொருளாதார ஜிடிபி, எந்த காலாண்டிலும் சரிவைக் கண்டதில்லையாம். முதல் மற்றும் மிகப் பெரிய ஜிடிபி சரிவை, இந்த ஜூன் 2020 காலாண்டு தான் கண்டு இருக்கிறது.

ஜிஎஸ்டி பஞ்சாயத்து

ஜிஎஸ்டி பஞ்சாயத்து

ஏற்கனவே, மத்திய அரசும் மாநில அரசுகளும், சரக்கு மற்றும் சேவை வரி பஞ்சாயத்தில் இருந்து மீளவில்லை. மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி பணம், தங்களிடம் இல்லை எனச் சொல்லி கை விரித்துவிட்டது. ஆனால் மத்திய அரசு கொடுக்க வேண்டிய, ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகைக்கு பதிலாக, 2 கடன் திட்டங்களை அறிவித்தது நினைவு கூறத்தக்கது.

சிக்கலான நிலை
 

சிக்கலான நிலை

ஏற்கனவே வியாபாரம் இல்லை, அதனைத் தொடர்ந்து வேலை வாய்ப்புகள் தொடர்பான பிரச்சனைகளும் அதிகரித்து இருக்கின்றன. அதற்கு மேல், பணவீக்கம் வேறு ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த பிரச்சனைகள், தனி நபர் தொடங்கி அரசு வரை எல்லோரையும் பாதித்து இருக்கிறது. இதற்கு மேல் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை வேறு அதிகரித்துக் கொண்டே போகிறது.

ஜிடிபி சரிவு சொல்வது என்ன

ஜிடிபி சரிவு சொல்வது என்ன

கடந்த மார்ச் 25-ம் தேதி, மத்திய அரசு, நாடு தழுவிய லாக் டவுனை அறிவித்தது. விளைவு ஜிடிபி ஜூன் 2020 காலாண்டில் 23.9 % சரிந்துவிட்டது. இந்த லாக் டவுனால் பொருளாதார செயல்பாடுகள் முடங்கின. பொருளாதார செயல்பாடுகள் அடி வாங்கினால், வியாபாரம் நடக்காது, வியாபாரம் இல்லை என்றால் ஜி எஸ் டி வரி வசூலும் அதிகம் அடி வாங்கத் தானே செய்யும். ஆகையால் தான் மத்திய அரசு, மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுக்க முடியாது என கை விரித்து இருக்கிறது.

சமீபத்தைய உதாரணம்

சமீபத்தைய உதாரணம்

1. 2019 - 20 நிதி ஆண்டில் தோராய ஜிஎஸ்டி வரி வசூல்

  • ஏப்ரல் 2019-ல் 1,13,866 கோடி ரூபாய்
  • மே 2019-ல் 1,00,289 கோடி ரூபாய்
  • ஜூன் 2019-ல் 99,940 கோடி ரூபாய்

2. 2020 - 21 நிதி ஆண்டில் தோராய ஜிஎஸ்டி வரி வசூல்

  • ஏப்ரல் 2020-ல் 32,294 கோடி ரூபாய்
  • மே 2020-ல் 62,009 கோடி ரூபாய்
  • ஜூன் 2020-ல் 90,917 கோடி ரூபாய்.

ஆக ஜிஎஸ்டி வரி வசூல், இந்த லாக் டவுன் காலத்தில் எவ்வளவு அடி வாங்கி இருக்கிறது என இதிலிருந்தே தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

கடன் வாங்கிக் கொடுக்கலாமா

கடன் வாங்கிக் கொடுக்கலாமா

சரி, மத்திய அரசிடம் ஜிஎஸ்டி வரி வருவாய் இல்லை. மத்திய அரசு கடன் வாங்கிக் கொடுக்கலாமே? என்கிற கேள்வி எழுகிறதா. அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஏற்கனவே, மத்திய அரசு, இந்த 2020 - 21 நிதி ஆண்டில் வாங்க வேண்டிய மொத்த கடன் தொகையைத் தாண்டி, 3% கூடுதலாக கடன் வாங்கிவிட்டது. மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை தற்போது 8.21 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறதாம். எனவே மேற்கொண்டு கடன் வாங்குவது, மத்திய அரசின் நிதி நிலையில் சுமையை அதிகரித்துவிடும்.

வேறு வழி இல்லை போலருக்கே

வேறு வழி இல்லை போலருக்கே

ஆக மத்திய அரசிடம் காசு இல்லை என்பதை ஜிடிபி சரிவு தெளிவாகக் காட்டுகிறது. புதிதாக மேற்கொண்டு கடன் வாங்க முடியாத அளவுக்கு ஏற்கனவே கடன் சுமை அதிகமாக இருக்கிறது. எனவே மாநில அரசுகள், இனி மத்திய அரசு, ஜிஎஸ்டி பணம் கொடுக்கும் என காத்திருக்க விரும்பமாட்டார்கள் எனலாம். மாநில அரசுகள், மத்திய அரசு கொடுத்திருக்கும் 2 கடன் திட்டங்களில் ஒன்றைத் தேர்வு செய்வது மட்டுமே ஒரே வழி போலத் தெரிகிறது. என்ன நடக்கிறது என பொருத்திருந்து பார்ப்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GST compensation settlement to states may not happen GDP fall reflects the GST collection fall

The state governments are eagerly waiting to receive the GST compensation even after central government loan announcement. But the GDP contraction reflects the GST collection fall. So GST compensation settlement to states may not happen.
Story first published: Tuesday, September 1, 2020, 22:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X