மத்திய மாநில அரசுக்கு இடையே வெற்றிடம்.. தகுதியற்ற முறையில் நிரப்பும் ஜிஎஸ்டி கவுன்சில்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒன்றிய அரசு - மாநிலத்திற்கு இடையேயான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜிஎஸ்டி மன்றம் ஒரு வெற்றிடத்தை தகுதியற்ற முறையில் நிரப்பியுள்ளது. இதற்கு மாறாக இந்த வெற்றிடத்தை, ஏனைய, சிறந்த தகவல் தொடர்பு வழிகள் மற்றும் அமைப்புகளாலும் நிரப்பப்பட வேண்டும்.

 

மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை என்பதை நினைவில் கொள்வது சிறப்பு. ஒன்றிய அரசு எப்படி ஒரு ஒருங்கிணைந்த அரசாக இருக்கிறதோ (ஒரு தேசத்தை ஒன்றிணைப்பதில்), அதே போல் ஒரு வழித்தோன்றலாகவும் இருக்கிறது

மத்திய மாநில அரசுக்கு இடையே வெற்றிடம்.. தகுதியற்ற முறையில் நிரப்பும் ஜிஎஸ்டி கவுன்சில்..!

(குடிமக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கூட, ஒவ்வொருவரும் ஒரு மாநிலத்திலிருந்து வந்தவர்களே). ஒன்றிய அரசுக்கென தனியான வாக்காளர்கள் இல்லை. மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் உட்பட இந்த அறையில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் ஒரு மாநிலத்தின் வாக்காளர்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே ஆவர். ஒன்றிய ஆட்சிப்பணி என்று ஒன்றும் இல்லை.

இந்த அறையில் உள்ள ஒவ்வொரு இந்திய ஆட்சிப்பணியாளர்களும் ஏதேனும் ஒரு மாநிலத்திலிருந்து வந்துள்ளனர். மனக்கசப்புடனும், வேண்டா வெறுப்புடனும் "நன்கொடையாளராக" ஒன்றிய அரசு ஒருபோதும் செயல்பட முடியாது, செயல்படவும் கூடாது. இவ்வாறு செய்வது, அதன் அடித்தளமாக உள்ள மாநிலங்களுக்கு எதிராக செயல்படுவது போல் ஆகும்.

ஒன்றிய அரசு ஒரு முக்கிய நிதிப் பங்கைக் கொண்டுள்ளது - அது அச்சுறுத்தும் வரி வசூலிப்பவராகவோ அல்லது அறக்கட்டளை நிதியத்தின் குறுகிய நோக்கம் கொண்ட நிர்வாகியாக இருப்பதை விட மிக முக்கியமானது. முழு தேசத்தின் நாணய மதிப்பு, பணப் பட்டுவாடா, வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறை மற்றும் நம்பகத்தன்மை (முகவரமைப்புகளிடமிருந்து பெறப்படும் மதிப்பீடுகள்) ஆகியவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிர்வகிக்கும் உரிய அதிகார அமைப்பாகும். இது இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து ஈவுத்தொகையைப் பெறுவதற்கான உரிமையைக் கொண்டுள்ளது (இதற்கு ஆதாரமாக இந்த வாரம் பெறப்பட்ட 99,122 கோடி ரூபாய்) மற்றும் தேவைப்படும் போது பற்றாக்குறையை சரிசெய்யும் அதிகாரத்தையும் பெற்றுள்ளது. குறிப்பாக பேரழிவுகள் மற்றும் இடர்களின் போது, மாநிலங்களுக்கு ஆதரவு, நிவாரணம் மற்றும் தங்குமிடம் வழங்க இதுபோன்ற அதிகாரங்களை அது பயன்படுத்த வேண்டும்.

 

இறுதியாக, தலைவர் அம்மையார் அவர்களே, இந்த முக்கியமான தருணத்தில், சரக்கு மற்றும் சேவை வரியை ஆழமாக மாற்றியமைப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பதை நான் தெரிவிக்கின்றேன். இப்போது அத்தகைய முயற்சியை மேற்கொள்ளாவிடில் எதிர்காலத்தில் பெரும் இழப்பை நாம் சந்திக்க நேரிடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GST council is not enough to solve issues between Central Govt - State Govts

GST council is not enough to solve issues between Central Govt - State Govts
Story first published: Saturday, May 29, 2021, 12:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X