பிபிஓ துறைக்கு ஆறுதல் கிடைக்குமா.. ஜிஎஸ்டி குறித்த முக்கிய முடிவுகள் வெளியாகுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 45வது ஜிஎஸ்டி கூட்டம் இன்று லக்னோவில் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் பல அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளார்.

புதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..!

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருதல் உள்ளிட்ட பல அம்சங்கள் பற்றி விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் இன்று மாலை பத்திரிக்கையாளர்களை சந்திக்கவிருக்கும் நிதியமைச்சர், பல முக்கிய அம்சங்கள் பற்றி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் வரி செலுத்துவது?

யார் வரி செலுத்துவது?

இந்தியாவின் 180 பில்லியன் டாலர் மதிப்பிலான பிபிஓ (BPO) நிறுவனங்களுக்கு சாதகமான அறிவிப்புகள் வருமா? இல்லை வழக்கம்போல இந்த பிபிஓ நிறுவனங்கள், சர்வதேச வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள வரியை செலுத்த வேண்டுமா? இடைதரகர்களாக செயல்படும் பிபிஓ நிறுவனங்கள் 18% வரி செலுத்த வேண்டுமா? என்பது இத்துறையினரின் கேள்வியாக உள்ளது.

வணிக மதிப்பு

வணிக மதிப்பு

பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட சிறிய நாடுகளுடன் இந்தியா பிபிஓ வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. சுமார் 180 பில்லின் டாலர் மதிப்பிலான அவுட்சோர்ஸிங் துறைக்கு, ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த அறிவிப்பானது மிக அவசியமானதாக இருக்கலாம். இந்த நிலையில் தான் இன்று மாலை இது குறித்தான அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன காரணம்
 

என்ன காரணம்

ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒழுங்குபடுத்தும் குழு பிபிஓ நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யவில்லை. அவை வரிக்கு உட்பட்டது அல்ல என்று கூறியதையடுத்து, இது குறித்தான ஆய்வும் மேற்கொள்ளபட்டது. இந்த நிலையில் தான் இது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவினை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிபிஓ நிறுவனங்கள் ஒரு இடைத்தரகரா அல்லது ஏற்றுமதியாளரா என்பதை தீர்மானிக்கலாம் என தெரிகின்றது.

யாருக்கு பாதிப்பு

யாருக்கு பாதிப்பு

இந்த பிரச்சனை 3,50,000க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வரும், 500க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் பிபிஓ நிறுவனங்களுக்கு இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஏனெனில் இந்த பிரச்சனை ஐடி மற்றும் ஐடி துறை சார்ந்த ஜிஎஸ்டி தொடர்பான ஏற்றுமதி சலுகையினை பாதிக்கிறது. ஆக இதற்கு தெளிவான மாற்றம் தேவை என நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்து கடந்த 2019ம் ஆண்டில் அறிக்கை கொடுக்கப்பட்டாலும், இதற்கான தெளிவான முடிவு இன்று வரையில் வரவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gst ஜிஎஸ்டி
English summary

gst council may announce important things to bpo industry

GST latest updates.. gst council may announce important things to bpo industry
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X