கிரிப்டோகரன்சிகளுக்கு 28% வரியா? ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கப்போகும் முக்கிய முடிவு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிப்டோகரன்சிகள் மற்றும் அதன் தொடர்புடைய சேவைகளுக்கு 28 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தகவல்களின்படி, லாட்டரி, சூதாட்ட விடுதிகள், பந்தயங்கள், ரேஸ் கோர்ஸ்கள் உள்ளிட்ட சிலவற்றிற்கும் இணையாக, கிரிப்டோகரன்சிகளையும் வைத்திருக்க அரசு திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் இது குறித்து முழுமையான ஒப்புதல்கள் பெறப்படவில்லை என்றும், ஆக வரவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்காக ஒப்புதல் பெறப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தை விற்கும் போது செலுத்த வேண்டிய 'நீண்ட கால மூலதன ஆதாய வரி’-க்கு விலக்கு பெறுவது எப்படி?

 ஒழுங்குபடுத்த நடவடிக்கை

ஒழுங்குபடுத்த நடவடிக்கை

இந்தியாவில் கிரிப்டோகரன்சி குறித்து தெளிவில்லாத நிலையே இருந்து வருகின்றது. ஆரம்பத்தில் கிரிப்டோகரன்சிகள் தடை செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அப்படி ஏதும் செய்யப்படவில்லை. மாறாக கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்த அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது.

பட்ஜெட்டில் என்ன அறிவிப்பு?

பட்ஜெட்டில் என்ன அறிவிப்பு?

கடந்த 2022-2023ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பில் கிரிப்டோகரன்சியை ஒழுங்குப்படுத்தும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அந்த அறிவிப்பில் மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு 30% வரி விதிக்கப்படும் என கூறியிருந்தார். மேலும் மெய்நிகர் சொத்துகள் பரிமாற்றத்திற்கு 1% வரி பிடித்தம் மேற்கொள்ளப்படும் எனவும் கூறியிருந்தார்.

புகார்களை தீர்க்க குழு
 

புகார்களை தீர்க்க குழு

இந்த நிலையில் தான் கிரிப்டோகரன்சிகள் மற்றும் அதன் தொடர்புடைய சேவைகளுக்கு 28% வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நுகர்வோரின் புகார்களைத் தீர்ப்பதற்கு ஒருங்கிணைப்பாளர் கொண்ட குழுவை அமைப்பது கட்டாயமாக்கப்படும் எனவும் தெரிகிறது.

 வரி வசூல் அதிகரிக்கலாம்

வரி வசூல் அதிகரிக்கலாம்

இதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில் நடத்தும் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. எனினும் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இதையும் கருத்தில் கொள்ளுங்க

இதையும் கருத்தில் கொள்ளுங்க

கிரிப்டோகரன்சிகளுக்கு வரி விதிக்கும் இந்த முயற்சிகளுக்கு மத்தியில், நீண்ட நாட்களாக பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டி-யின் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகின்றது. இது பற்றியும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்ற நிபுணர்கள் கூறியுள்ளனர். சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலைக்கு மத்தியில், விலையினை கட்டுக்குள் கொண்டு வர இது உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அரசு இதனையும் கருத்தில் எடுத்துக் கொள்ளுமா? எரிபொருள் விலை குறையுமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gst ஜிஎஸ்டி
English summary

GST council may consider slapping highest 28% tax on cryptocurrency

GST council may consider slapping highest 28% tax on cryptocurrency/கிரிப்டோகரன்சிகளுக்கு 28% வரியா? ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கப்போகும் முக்கிய முடிவு என்ன?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X