GST Meeting: புதிய வரி ஜூலை 18 முதல் அமல்.. மக்களை நேரடியாக பாதிக்கும் விஷயங்கள் இதுதான்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இரண்டு நாள் ஜிஎஸ்டி கூட்டம் முடிந்த நிலையில் பல பொருட்களுக்கும், சேவைகளுக்கும் வரி உயர்த்தப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வரித் தளர்வுகள் நீக்கப்பட்டது.

இந்தப் புதிய வரி மாற்றங்கள் அனைத்தும் ஜூலை 18ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளதாக ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஜிஎஸ்டி விகிதங்களை உயர்த்துவது மதிப்புச் சங்கிலியில் உள்ள "திறமையின்மையை" ஈடுசெய்யும் நோக்கம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இந்த வரி உயர்வால் மக்கள் தற்போது இருக்கும் விலைவாசி உயர்வை தாண்டி கூடுதலான பணத்தைச் செலுத்த வேண்டும், இதனால் சாமானிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட உள்ளனர்.

முதலில் இதை செய்யுங்க.. நிர்மலா சீதாராமன் போட்ட திடீர் உத்தரவு..! முதலில் இதை செய்யுங்க.. நிர்மலா சீதாராமன் போட்ட திடீர் உத்தரவு..!

 நிர்மலா சீதாராமன் - மாநில அரசு

நிர்மலா சீதாராமன் - மாநில அரசு

ஜூன் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நடந்த இரண்டு நாள் கூட்டத்தில் வரி உயர்வு செய்யப்பட்ட முடிவுகளுக்கு எந்த மாநிலமும் மறுப்பு தெரிவிக்கவில்லை, வரி மாற்றம் மூலம் பணவீக்கத்தில் ஏற்படும் மாற்றங்களை பற்றி மாநில அரசுகளுக்கு நன்றாகத் தெரியும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மதுரை

மதுரை

இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில்-ன் அடுத்தக் கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அழைப்பை ஏற்று அடுத்த இரு நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முக.ஸ்டாலின்

முக.ஸ்டாலின்

நிர்மலா சீதாராமன் ஒப்புதலை அடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் ‛‛அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. கோவில் நகரமான மதுரை மற்றும் அங்குள்ள மக்கள் சார்பில் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகளை நாங்கள் வரவேற்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி மாற்றம்..!

ஜிஎஸ்டி வரி மாற்றம்..!

கீழே உள்ள பொருட்களில் முதலில் இருப்பது பழைய வரி, 2வதாக இருப்பது புதிய வரி விகிதம்

  • தைக்கப்பட்ட ஜவுளிகள் - 5% - 12%
  • மின் கழிவு (E-Waste) - 5% - 18%
  • பிரிண்டிங், எழுதுதல் அல்லது வரைதல் மை - 12% - 18%
  • கத்திகள், ஸ்பூன், முட்கரண்டிகள் போன்றவை - 12% - 18%
  • பவர்-ல் இயக்கப்படும் பம்புகள் போன்றவை - 12% - 18%
  • தானியங்களுக்கான இயந்திரங்கள்/சக்கி - 5% - 18%
  • முட்டை/பழம்/பாலுக்கான இயந்திரங்கள் - 12% - 18%
  • LED விளக்குகள்/சுற்றுகள் போன்றவை - 12% - 18%
  • சோலார் வாட்டர் ஹீட்டர் - 5% - 12%
  • வரைதல்/மார்கிங் கருவிகள் - 12% - 18%
  • தயாரிக்கப்பட்ட/முடிக்கப்பட்ட தோல் - 5% - 12%
  • தோல்/களிமண் வேலைகள் - 5% - 12%
  • சாலைகள்/ரயில் போன்றவற்றுக்கான ஒப்பந்தங்கள் - 12% - 18%
  • ஆஸ்டோமி/ஆர்த்தோ உபகரணங்கள் - 12% - 5%
  • டெட்ரா பேக் - 12% - 18%
  • கட் மற்றும் பாலிஷ் வைரங்கள் - 0.25% - 1.50%
  • ரோப்வே (Ropeway) மூலம் போக்குவரத்து - 18% - 5% இன்புட் டாக்ஸ் உடன்
  • லாரிகளை வாடகைக்கு எடுத்தல் - 18% - 12%
  • வரித் தள்ளுபடிகள் நீக்கம்
  • காசோலை - NIL - 18%
  • மேப் மற்றும் சார்ட் - NIL - 12%
  • பெட்ரோலியம் / நிலக்கரி மீதேன் - 5% - 12%
  • சயின்ஸ் & டெக் கருவிகள் - 5% - அப்லைய்டு ரேட்
  • மின் கழிவு (E-Waste) - 5% - 18%

 

வரித் தளர்வுகள் நீக்கம்

வரித் தளர்வுகள் நீக்கம்

ஹோட்டல் - ஒரு நாளுக்கு 1000 ரூபாய் வரையிலான வாடகை கொண்டு உள்ள அறைகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி

மருத்துவமனை ரூம் வாடகை - ICU அல்லாத 5000 ரூபாய்க்கு மேல் கட்டணம் கொண்ட அறைகளுக்கு ஜஎஸ்டி வரி பொருந்தும்

 

விளக்கம்

விளக்கம்

எலக்ட்ரிக் வாகனங்கள் பேட்டரி உடனும், பேட்டரி இல்லாமல் விற்பனை செய்யப்பட்டாலும் அதற்கு 5 சதவீத வரிக் கட்டாயம்

ART மற்றும் IVF சேவைகளுக்கு வரி இல்லை

கழிவு நீர்-ஐ சுத்திகரிக்கும் பணிகளுக்கு ஜிஎஸ்டி இல்லை

அனைத்து ஐஸ்க்ரீம் பார்லர்களுக்கும் நிலையாக 18 சதவீத ஜிஎஸ்டி

மாங்காய் அல்லது மாம்பழம் மீது ஜிஎஸ்டி வரி இல்லை, ஆனால் பழமாக அல்லாமல் பிற வழியில் கொடுக்கப்படும் அனைத்து மாம்பழங்களுக்கும் 12 சதவீத ஜிஎஸ்டி வரி உண்டு

 

தீர்வு காணப்படவில்லை

தீர்வு காணப்படவில்லை

ஆன்லைன் கேமிங், குதிரை பந்தயம், கசினோ ஆகியவற்றுக்கு 28 சதவீதம் வரி விதிக்கும் பரிந்துரைக்கு முடிவு எடுக்கப்படவில்லை

கிரிப்டோகரன்சி மீதான ஜிஎஸ்டி வரிப் பலகையில் மாற்றம் இல்லை

ஜிஎஸ்ட் ட்ரிப்யூனல் அமைக்கும் திட்டத்திற்கு முடிவு எடுக்கப்படவில்லை..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chnages in GST Rate On Host Of Items To Be Applicable From 18 July. Check Complete List

GST: rate changes effect from July 18; What are the things affect common people directly GST MEET: வரி மாற்றங்கள் ஜூலை 18 முதல் அமல்.. மக்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயங்கள் இதுதான்..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X