ஹைப்ரிட் கலாச்சாரத்தினை விரும்பும் இந்திய ஊழியர்கள்.. 50% ஊழியர்கள் செம பதில்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவுக்கு பின்னர் பல துறைகளிலும் பணிக்கலாச்சாரம் என்பது மாறியுள்ளது. குறிப்பாக டெக் நிறுவனங்களில் பல ஊழியர்களுக்கு ஹைப்ரிட் ஒர்க் மாடல் பணியினை செய்ய கூறி வருகின்றன.

 

கொரோனாவின் காரணமாக கடந்த 19 மாதங்களுக்கு மேலாக வீட்டில் இருந்தே பணிபுரிந்து வந்த ஊழியர்கள், கடந்த சில வாரங்காளாகத் தான் அலுவலகம் திரும்ப தொடங்கியுள்ளனர். அதுவும் கால்வாசி ஊழியர்கள் தான் அலுவலகம் திரும்ப தொடங்கியுள்ளனர்.

வருடத்திற்கு ரூ.2 கோடிக்கு மேல் சம்பளம்.. ஐஐடி கேம்பஸில் தூள் கிளப்பிய இந்திய மாணவர்கள்..!

ஹைப்ரிட் ஒர்க் மாடல்

ஹைப்ரிட் ஒர்க் மாடல்

அவர்களும் ஹைப்ரிட் ஒர்க் மாடலில் தான் அலுவலகம் சென்று வருகின்றனர். சில முன்னணி நிறுவனங்கள் இந்த ஹைப்ரிட் ஒர்க் மாடல் பணியினையே நிரந்தரமாக்கலாம் என்றும் ஆலோசித்து வருகின்றன. எனினும் இதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில் இது சரிபட்டு வருமா? இது குறித்து ஊழியர்களின் கருத்து என்ன? ஊழியர்களின் விருப்பம் என்ன? என பல கேள்வியும் எழுந்துள்ளன.

கார்ட்னர் சர்வே

கார்ட்னர் சர்வே

இது குறித்து சமீபத்திய கார்ட்னர், கார்ட்னர் 2021 டிஜிட்டல் ஒர்கர் எக்ஷஸ்பீரியன்ஸ் சர்வே (Gartner 2021 Digital Worker Experience Survey) என்ற ஆய்வினை நடத்தியது. இதில் பதிலளித்த இந்திய ஊழியர்களில் 10ல் 5 பேர் தொலைதூரத்தில் இருந்து பணிபுரிவது அதிக உற்பத்தி திறனை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டிராபிக் பிரச்சனை இல்லை
 

டிராபிக் பிரச்சனை இல்லை

ஊழியர்கள் தற்போது நெரிசலான டிராபிக் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியதில்லை. இதை மிகப்பெரிய சாதகமான விஷயமாக கூறுகின்றனர். இதே இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நடத்தப்பட்ட சர்வேயில், 40% அதிகமானவர்கள் தங்களின் உற்பத்தி திறன் முன்பு போலவே இருப்பதாகவும், அதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா ஊழியர்களின் கருத்து.

ஆஸ்திரேலியா ஊழியர்களின் கருத்து.

இதே ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் 30% அதிகமான ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதன் மூலம், அதிக உற்பத்தி திறனை கொடுக்க முடிவதாகவும் தெரிவித்துள்ளனர்.

2020ம் ஆண்டில் கொரோனாவின் தாக்கம் தொடங்கியதில் இருந்தே, இந்தியாவில் ஊழியர்கள் தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

இந்திய ஊழியர்கள்

இந்திய ஊழியர்கள்

குறிப்பாக மேம்பட்ட திறமை, ரியல் டைம் மொபைல் மெசேஜிங், விர்சுவல் மீட்டிங் மற்றும் தீர்வு என பலவும் ஊழியர்களுக்கு ஒரு நெகிழ்வு தன்மையை வழங்குவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது ஊழியர்களுக்கு முன்னேற்றத்தினை வழங்குவதாகவும் கார்ட்னர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரியல் டைம் மொபைல் மெசேஜ்

ரியல் டைம் மொபைல் மெசேஜ்

இந்திய டிஜிட்டல் பணியாளர்களில் 83% பேர் பணி நடவடிக்கைகளுக்காக, ரியல் டைம் மொபைல் மெசேஜிங்கினை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இது தொலை தூரத்தில் இருந்து பணிபுரியும் போது மற்ற கம்யூனிகேஷன்களை விட பயனுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதே சர்வதேச அளவில் பணியாளர்களில் 60% பேர், தினசரி மெசேஜ் கருவிகளை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்திய பணியாளர்களின் விருப்பம்

இந்திய பணியாளர்களின் விருப்பம்

இந்திய பணியாளர்கள் நேரில் சந்திப்பதை விட, விர்சுவல் சந்திப்புகளையே அதிகம் விரும்புகின்றனர். கொரோனா காலத்தில் கடந்த அண்டில் விர்சுவல் சந்திப்புகளின் பலனை ஊழியர்கள் பெற்றுள்ளனர். இதற்கிடையில் தான் அதனையே விருப்பமான தேர்வாகவும் கூறியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Half of Indian hybrid workers say they are more productive when working remotely

Half of Indian hybrid workers say they are more productive when working remotely/ ஹைப்ரிட் கலாச்சாரத்தினை விரும்பும் இந்திய ஊழியர்கள்.. 50% ஊழியர்கள் பலே பதில்.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X