அதிரடி காட்டும் ஹெச்சிஎல்.. 2 மெகா டீல்.. பட்டையை கிளப்பிய பங்கு விலை.. இது மாஸ் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி நிறுவனங்களுக்கான தேவை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து பல புதிய ஒப்பந்தங்களை பெற்று வருகின்றன. நிபுணர்களும் இந்த போக்கு இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடரும் என கணித்து வருகின்றனர்.

 

இதனை நிரூபிக்கும் விதமாக நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜி, இரண்டு மிகப்பெரிய ஒப்பந்தங்களை வென்றுள்ளது.

இது இன்னும் இந்த நிறுவனத்தின் வருவாயினை அதிகரிக்க உதவும் என்பதோடு, பணியமர்த்தலையும் அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதெல்லாம் சரி என்னென்ன ஒப்பந்தங்களை பெற்றுள்ளது? இதற்கிடையில் ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனத்தின் பங்கு விலை என்ன வாருங்கள் பார்க்கலாம்.

அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்

அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்

ஹெச்சிஎல் நிறுவனம், அமெரிக்காவினை அடிப்படையாக கொண்ட எம்கேஎஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (MKS Instruments) நிறுவனத்துடன் 5 வருட டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் ஒப்பந்தத்தினை வென்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஹெச்சிஎல் AI/ML தலைமையிலான ஆட்டோமேஷன் மூலம், எம்கேஎஸ் நிறுவனத்தில் டிஜிட்டல் மற்றும் கிளவுட் சேவையை வழங்கும் என தெரிவித்துள்ளது.

எனினும் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

லெண்டிகோவுடன் ஒப்பந்தம்

லெண்டிகோவுடன் ஒப்பந்தம்

இதே போல ING ஜெர்மனியின் (ING Germany) பிராண்டான லெண்டிகோவிடம் (Lendico) இருந்து, பல வருட ஒப்பந்தத்தினை வென்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரு டிஜிட்டல் தளத்தினை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வசதியாக வணிக வங்கியினை உருவாக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியில் ஆய்வகம்
 

ஜெர்மனியில் ஆய்வகம்

மேற்கண்ட ஒப்பந்தத்திற்கு மத்தியில் ஹெச்சிஎல் நிறுவனம், ஜெர்மனியின் முக்கிய நகரமான பெர்லினில் ஒரு தொழில்நுட்ப ஆய்வகத்தினை நிறுவ உள்ளதாக தெரிவித்துள்ளது. இது நிதித்துறையுடன் இணைந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

இதில் கடன் முடிவு மற்றும் கடன் வசூல், கேஓய்சி உள்ளிட்ட செயல்முறைகளுக்கு புதுமையான அணுகுமுறையை கொண்டு வரும். இதனை முதலாவதாக லெண்டிகோ பயன்படுத்தும் என்று ஹெச்.சி.எல் தெரிவித்துள்ளது.

இன்றைய பங்கு விலை

இன்றைய பங்கு விலை

மேற்கண்ட அறிவிப்புகளுக்கு மத்தியில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் பங்கு விலையானது 1.83% அதிகரித்து 1,299.50 ரூபாயாக என்.எஸ்.இயில் முடிவடைந்துள்ளது. எனினும் இன்றைய உச்ச விலை 1315 ரூபாயாகும். இதே குறைந்தபட்ச விலை 1277 ரூபாயாகும். இந்த நிறுவனத்தின் 52 வார உச்ச விலையும் 1315 ரூபாயாகும்.

இதே போல பி.எஸ்.இயில் 1.85% அதிகரித்து, 1299 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது.

நிபுணர்கள் எதிர்பார்ப்பு

நிபுணர்கள் எதிர்பார்ப்பு

தொடர்ந்து ஒப்பந்தங்களை போட்டு வரும் ஹெச்.சி.எல் இந்த ஆண்டிலும் நல்ல வளர்ச்சியினை காணலாம். கடந்த ஒரு மாதத்தில் இந்த பங்கின் விலையானது 13% மேலாக வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலக்கட்டத்தில் சென்செக்ஸ் 6% மட்டுமே ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் இதன் பங்கு விலையானது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணியமர்த்தல் அதிகரிக்கலாம்

பணியமர்த்தல் அதிகரிக்கலாம்

நடப்பு ஆண்டில் இந்த நிறுவனம் 20,000 - 22,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் கூறியிருந்தது. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 50% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் அட்ரிசன் விகிதம் முந்தைய காலாண்டினை காட்டிலும், ஜூன் காலாண்டில் 11.8% ஆக அதிகரித்துள்ளது. இது முன்பு 9.9% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவற்றோடு சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ் என இந்தாண்டும் களை கட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் நடப்பு ஆண்டிலும் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் தான் போங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: hcl technologies
English summary

HCL tech wins 2 mega deals, one from lendico, another one MKS Instruments

HCL latest updates.. HCL tech wins 2 mega deals, one from lendico, another one MKS Instruments. HCL Tech shares were end Rs.1,299.50 in NSE, The shares touched an intra-day low of Rs.1,277 and a high of Rs.1,315.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X