அமெரிக்காவில் 12,000 பேருக்கு வேலை.. ஹெச்சிஎல் அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் கொண்டாட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தை அமெரிக்காவில் இருந்து பெற்று வரும் நிலையில், தொடர்ந்து அமெரிக்க அலுவலகம் மற்றும் ஊழியர்களையும் அதிகரித்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் அமெரிக்காவில் அவ்வப்போது விசா பிரச்சனை இருக்கும் காரணத்தால் கனடா போன்ற அண்டை நாடுகளிலும் அலுவலகம் மற்றும் ஊழியர்களையும் அதிகரித்து வருகிறது.

 

இந்தக் கொரோனா காலத்தில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ள வேளையில், தற்போது ஹெச்சிஎல் இனி வரும் காலகட்டத்திலும் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய முடிவை எடுத்துள்ளது.

இந்த ஐடி நிறுவனத்தின் பங்கினை வாங்கி வைக்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் கணிப்பு..!

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் அமெரிக்கச் சந்தையில் மட்டும் அடுத்த 5 வருடத்தில் சுமார் 12,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடிவு செய்து அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருடத்திற்குச் சராசரியாக 2400 பேரை பணியில் நியமிக்க ஹெச்சிஎல் முடிவு செய்துள்ளது.

கல்லூரி மாணவர்கள்

கல்லூரி மாணவர்கள்

இதில் முக்கியமாக அடுத்த 36 மாதத்தில் 2000த்திற்கும் அதிகமான பட்டம் பெற்ற கல்லூரி மாணவர்களைப் பணியில் சேர்க்க ஹெச்சிஎல் முடிவு செய்துள்ளது. மேலும் கல்லூரி மாணவர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும் என்பதற்காக US Early Career and Training என்ற திட்டத்தையும் உருவாக்கியுள்ளது.

குளோபல் வியூ விஸ்டாஸ் திட்டம்
 

குளோபல் வியூ விஸ்டாஸ் திட்டம்

சமீபத்தில் ஹெச்சிஎல் நிறுவனம் குளோபல் வியூ விஸ்டாஸ் என்ற புதிய திட்டத்தை உருவாக்கியது. இத்திட்டம் மூலம் உலகம் முழுவதும் வேகமாக வளர்ச்சி அடையும் நகரங்களில் இன்னோவேஷன் மற்றும் டெலிவரி சென்டரை அமைக்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

வேலை மற்றும் கல்வி

வேலை மற்றும் கல்வி

இதேவேளையில் அமெரிக்காவில் HCL Apprenticeship என்ற திட்டத்தையும் ஹெச்சிஎல் டெக் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ஓரே நேரத்தில் முழு நேர டெக் வேலைவாய்ப்பையும், கட்டணமில்லா கல்லூரி படிப்பையும் அளிக்க உள்ளது.

பெரும் போட்டி

பெரும் போட்டி

அமெரிக்காவில் வர்த்தகத்தை அனைத்து பிரிவுகளிலும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பெரிய திட்டத்தைத் தீட்டியுள்ளது. இதனால் சந்தையில் பெரும் போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐடி நிறுவனங்கள் போதுமான ஊழியர்கள் இல்லாமல் தவித்து வரும் நிலையில் ஹெச்சிஎல்-ன் இந்தப் புதிய திட்டங்கள் பல நிறுவனங்களுக்கு வியப்பாக உள்ளது.

விரிவாக்கம்

விரிவாக்கம்

ஹெச்சிஎல் அமெரிக்கச் சந்தையில் வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஏற்கனவே வட கரோலினா, டெக்சாஸ், கலிபோர்னியா, மிச்சிகன், பென்சில்வேனியா, மின்னசோட்டா ஆகிய பகுதிகளில் ஊழியர்களைத் தேர்வு செய்து வந்த நிலையில், தற்போது ஹார்ட்போர்டு மற்றும் கனெக்டிகட் பகுதிகளில் புதிதாகக் குளோபல் டெலிவரி சென்டரை உருவாக்கியுள்ளது.

இந்திய ஐடி ஊழியர்கள்

இந்திய ஐடி ஊழியர்கள்

ஹெச்சிஎல் நிறுவனத்தின் இந்தத் திட்டம் மூலம் நிர்ணயம் செய்துள்ள 12000 ஊழியர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் தான் அமெரிக்க ஊழியர்களுக்கு அளிக்கப்படும், மீதமுள்ள வேலைவாய்ப்புகள் அனைத்தும் இந்திய ஐடி ஊழியர்களுக்குத் தான் கிடைக்கும். இந்தச் சூழ்நிலையில் ஹெச்சிஎல் நிறுவனத்தில் இருக்கும் ஐடி ஊழியர்களுக்கு அமெரிக்கா செல்ல அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: hcl ஹெச்சிஎல்
English summary

HCL Technologies to create 12,000 new jobs in the US over 5 years

HCL Technologies to create 12,000 new jobs in the US over 5 years அமெரிக்காவில் 12,000 பேருக்கு வேலை.. ஹெச்சிஎல் அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் கொண்டாட்டம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X