இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கி நிறுவனமான ஹெச்டிஎப்சி வங்கி டிசம்பர் காலாண்டில் சுமார் 18.1 சதவீத அதிக லாபத்தைப் பெற்று முதலீட்டாளர்களை மகிழ்வித்துள்ளது. இதன் மூலம் டிசம்பர் மாத காலாண்டில் இவ்வங்கியின் மொத்த லாப அளவீடு 8,758.3 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேவேளையில் இவ்வங்கியின் மொத்த வட்டி வருமானம் 15.1 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து 16,317.6 கோடி ரூபாயை வட்டி வருமானமாகப் பெற்றுள்ளது. சந்தை கணிப்புகளை விடவும் இவ்வங்கியின் லாபம் மற்றும் வட்டி வருமானம் அதிகமாக இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை அளித்துள்ளது.
மேலும் ஹெச்டிஎப்சி வங்கியின் வாராக் கடன் விகிதம் 0.8 சதவீதமாக உள்ளது. இது ஐசிஐசிஐ வங்கியில் 0.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் செப்டம்பர் காலாண்டில் வாராக் கடன் சொத்து மதிப்பு அளவு 0.17 சதவீதமாக இருந்த நிலையில் டிசம்பர் காலாண்டில் 0.09 சதவீதமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் உத்தரவைக் கருத்தில் கொள்ளவில்லை எனில் ஹெச்டிஎப்சி வங்கியின் மொத்த வாராக் கடன் அளவு டிசம்பர் காலாண்டு முடிவில் 1.38 சதவீதமாக உள்ளது.
இக்காலாண்டில் ஹெச்டிஎப்சி வங்கியில் வைப்பு நிதியின் அளவீடு கடந்த வருடத்தை விடவும் 19 சதவீதம் அதிகரித்து 12.7 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது இவ்வங்கியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும், இவ்வங்கியின் வர்த்தக விரிவாக்கம் செய்யக்கூடிய அளவீட்டையும் கணிக்க முடிகிறது.