100 வங்கி, நிதி நிறுவனங்களில் ஹெச்டிஎஃப்சி வங்கி தான் டாப்.. அப்படின்னா எஸ்பிஐ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் சிறந்த 100 வங்கிகள் மற்றும் நிதி சேவை நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் ஹெச்டிஎஃப்சி வங்கி தான் முதலிடத்தில் உள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் வாடிக்கையாளர் சேவை, மேனேஜ்மெண்ட், புதுமையான கண்டுபிடிப்புகள், சலுகைகள் உள்ளிட்ட பலவற்றிலும் ஒப்பிடும்போது, தனியார் கடன் வழங்குனரான HDFC வங்கிதான் முதலிடத்தில் உள்ளது.

விஸிகேயின் BFSI Movers and Shakers 2020 அறிக்கையின் படி, ஹெச்டிஎஃப்சி வங்கியின் summer treats சலுகைகள், நோ காஸ்ட் இஎம்ஐ சலுகைகள், சலுகைகள், கட்டணம் செலுத்துதல் போன்ற பல்வேறு முயற்சிகளில் இவ்வங்கி முதலிடத்தில் உள்ளது.

வழக்கம்போல் ஜியோ தான் டாப்.. போட்டி போடும் ஏர்டெல், வோடபோன்.. செம ப்ரீபெய்டு திட்டம்..!

முதல் 10 இடங்களில் யார்?

முதல் 10 இடங்களில் யார்?

ஹெச்டிஎஃப்சி வங்கியை அடுத்து, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. இதே முதல் 10 இடங்களில் ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, யெஸ் வங்கி, பிஎன்பி, ஹெச்எஸ்பிசி வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, டாய்ஷ் வங்கி, ஐடிபிஐ வங்கி உள்ளிட்டவை டாப் 10 இடங்களில் உள்ளன.

ஆச்சரியபட வைக்கும் யெஸ் வங்கி

ஆச்சரியபட வைக்கும் யெஸ் வங்கி

இதில் ஆச்சர்யபடும் விஷயம் என்னவெனில் யெஸ் வங்கி இந்த லிஸ்டில் 4-வது இடத்தில் உள்ளது தான், என இந்த அறிக்கை கூறியுள்ளது. ஏனெனில் இந்த வங்கி மோசமான செயல்திறனுக்கு பிறகு ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்கு சென்று, மறுசீரமைக்கப்பட்டு பின் செயல்பாட்டுக்கு திரும்பியது. எனினும் இதன் பிறகு இதன் தரத்தினை மேம்படுத்தி, நிர்வாக மறுசீரமைப்புக்கு பிறகு இந்த இடத்தில் வந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியும் லிஸ்டில் உண்டு
 

ஐசிஐசிஐ வங்கியும் லிஸ்டில் உண்டு

ஐசிஐசிஐ வங்கியின் கடன் அவகாசம், இடைக்கால விதிகள், தள்ளுபடிகள், கிரெடிட் கார்டு உள்ளிட்ட பல சலுகைகளினால் விருப்பமான ஒரு தேர்வாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதே விவசாய கடனிலும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. இதனால் இது ஒரு விருப்பமான வங்கியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றது.

யுபிஐ சேவையில் யார் முதல்?

யுபிஐ சேவையில் யார் முதல்?

தற்போது நிதிசேவையில் வளர்ந்து வரும் யுபிஐ ஆப்கள் பல உள்ளன. அவற்றில் கூகுள் பே முதலாவது இடத்தில் உள்ளது. இதனையடுத்து போன் பே, பேடிஎம், அமேசான் பே உள்ளிட்டவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HDFC bank top player among 100 BFSI firms

Top 10 banks update.. HDFC bank top player among 100 BFSI firms
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X