ஹீரோ-வின் புதிய நிறுவனம்.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்.. அதுவும் புதிய துறையில்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஆட்டோமொபைல் துறையில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோ குழுமம், ஹீரோ வயர்டு என்ற புதிய கல்வி துறை சார்ந்த நிறுவனத்தை துவங்கியுள்ளது.

 

இந்த எடெக் (EduTech) நிறுவனம் ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியை வழங்குகிறது. ஹீரோ வயர்டு ஊழியர்களுடன் திறமையை வலுப்படுத்தி, தொழில்முறை சமூகத்தை மேம்படுத்துவதையும் மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கொரோனா எதிரொலி.. மக்கள் கைகளில் அதீத பணம்.. அப்போ டிஜிட்டல் எக்னாமி நிலை என்ன பாஸ்..?!

இந்த திட்டங்கள் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) மற்றும் சிங்குலரிட்டி பல்கலைக்கழகம் (Singularity University) மற்றும் கோடெகாடமியுடன் இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹீரோவின் கருத்து

ஹீரோவின் கருத்து

ஹீரோ குழுமம், ஹீரோ வயர்டு எங்கள் அனுபவத்திலிருந்து பிறந்தது, தொழில்துறையில் இன்று திறன்மிக்கவர்களுக்கு அதிக தேவையுண்டு. ஆனால் இன்றும் தேவைகள் நிரப்படப்படவில்லை. ஆக எங்கள் நோக்கம், இளம் தொழிலாளர்களின் எதிர்கால வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது. ஹீரோ வயர்டு மூலம் என்களால் அவர்களுக்கு சரியான வழிகாட்ட முடியும் ஹீரோ தனது அறிக்கையில் கூறியுள்ளது.

என்னென்ன சிறப்பம்சங்கள்

என்னென்ன சிறப்பம்சங்கள்

ஹீரோ வயர்டு கேம் டிசைனிங் (game design), integrated programs in data science, மெஷின் லேர்னிங் (machine learning), செயற்கை நுண்ணறிவு (artificial intelligence), entrepreneurial thinking and innovation; and full-stack development உள்ளிட்ட பலவற்றை பற்றியும் முழு நேரம் அல்லது பகுதி நேரமாகவும் கற்றுக் கொள்ளலாம்.

தேவை அதிகம்
 

தேவை அதிகம்

இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களில் பலர் வேலை தேடி வருகின்றனர். பலர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். ஆனால் நம்மிடம் ஏராளமான தொழில் வளங்கள் உள்ளன. ஆனால் எப்படி இதனை அணுகுவது என்பது தெரிவதில்லை. ஆக இந்த பிரச்சனையை எதிர்கொள்ள இளைஞர்களுக்கு இந்த எடெக் உதவும். ஹீரோ வயர்டு மூலம் இப்பிரச்சனையை தீர்க்கலாம் என்றும் ஹீரோ வயர்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் முஞ்சல் கூறியுள்ளார்.

எவ்வளவு முதலீடு

எவ்வளவு முதலீடு

இந்த புதிய முயற்சியில் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளதாகவும், இது தரத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், இது நெகிழ்வுதன்மையை வழங்கும் என்றும் முஞ்சல் சமீபத்திய அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் ஹீரோ வயர்டு மூன்று பிரிவு மாணவர்களை குறி வைத்துள்ளது.

டார்கெட் இவர்கள் தான்

டார்கெட் இவர்கள் தான்

ஒன்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் நல்ல தரமான கல்வியை நாடுபவர்கள், சரியானதொரு வேலையை பெற முடியாத பட்டதாரிகள், 0 -10 வருடம் அனுபவமுள்ள தொழில் வல்லுனர்கள். யார் தங்களது தொழில் வளர்ச்சியினை மேம்படுத்த நினைக்கிறார்களோ அவர்கள் என பட்டியலிட்டுள்ளது.

கல்வி & இண்டர்ஷிப்

கல்வி & இண்டர்ஷிப்

இந்த எடெக் ஸ்டார்டப் நிறுவனமானது இரண்டு திட்டங்களை வழங்கும். அதில் முதலில் ஆறு மாத முழு நேர திட்டம், அதனை தொடர்ந்து 3 - 4 மாத இண்டர்ஷிப், 11 மாதங்களுக்கு மேலாக வார இறுதி நாட்களில் வகுப்புகள் என இருக்கும். இதற்கு கட்டணமாக 2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் வரை கட்டணம் இருக்கும் என்றும் முஞ்சல் கூறியுள்ளார்.

எப்போது தொடக்கம்

எப்போது தொடக்கம்

இந்த திட்டத்திற்கான முதல் அமர்வு இந்த ஆண்டு ஜூலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவை படிப்படியாக சேர்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு திட்டத்திற்கு ஒரு தொகுதிக்கு 100 மாணவர்க்ளை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக முஞ்சல் தனது அறிக்கையில் கூறியுள்ளார். ஆரம்பத்தில் ஆன்லைனில் இந்த திட்டங்கள் வழங்கப்படும். கொரோனாவுக்கு பின்பு, பல விருப்பங்களும் உண்டு என கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hero group launched education technology venture hero vired: check details here

Hero group updates.. Hero group launched education technology venture hero vired: check details here
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X