ஹீரோ மோட்டோகார்ப் அதிரடி முடிவு.. சவால்களையும் தாண்டி 1500 விற்பனையகங்களை திறக்க திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் கார்ப் லிமிடெட் நிறுவனம், ஞாயிற்றுகிழமையன்று ஷோரூம்கள் மற்றும் சேவை மையங்கள் உட்பட நாடு முழுவதும் 1500 சில்லறை விற்பனையகங்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

 

இந்த விற்பனை நிலையங்களோடு சேர்த்து, சர்வீஸ் நிலையங்களையும் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் அதிரடி முடிவு.. சவால்களையும் தாண்டி 1500 விற்பனையகங்களை திறக்க திட்டம்..!

மொத்த உள்நாட்டு சில்லறை விற்பனையில் சுமார் 30 சதவீதம் பங்கு வகிக்கிறது இந்த நிறுவனம், தற்போது கடந்த வாரம் ஹரியானா மற்றும் உத்தரகாண்டில் அமைந்துள்ள தொழில்சாலைகளில் உற்பத்தி நடவடிக்கைகளைத் மீண்டும் தொடங்கவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஹீரோ மோட்டோ கார்ப் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த நிறுவனம் தொடங்கிய பின்னர் 10,000 யூனிட்களை விற்றதாக அறிவித்துள்ளது.

பசுமை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களாக அடையாளம் காணப்பட்ட நாட்டின் சில பகுதிகளில், லாக்டவுனை தளர்த்துவதன் மூலம், பொருளாதார நடவடிக்கைகளை படிப்படியாக மீண்டும் தொடங்க மத்திய அரசு அனுமதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை நெருங்கி வருகிறது.

இதே மற்ற முன்னணி வாகன உற்பத்தியாளர்களான மாருதி சுசூகி இந்தியா மற்றும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் ஆகியவையும், தங்களது டீலர்ஷிப்புகளை திறந்து, மீண்டும் விற்பனையை தொடங்க திட்டமிட்டுள்ளன.

கொரோனா லாக்டவுன் காரணமாக வாகன உற்பத்தி ஆலைகள் மற்றும் டீலர்ஷிப்கள் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக விற்பனை முற்றிலும் முடங்கியிருந்தது. இந்த நிலையில் தற்போது தொடங்க உள்ள நிலையில் இனி படிப்படியாக உற்பத்தி அதிகரிக்க இது வழிவகுக்கும். அதோடு விற்பனையும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாட்டில் வாகனத் துறையை மீட்டெடுக்க ஜிஎஸ்டி உட்பட பல சலுகைகள் அளிக்கப்பட வேண்டும். அதோடு ஆட்டோமொபைல் துறையில் முக்கிய கோரிக்கையாக இருந்து வந்த ஸ்கிராப்பேஜ் பாலிசியை அமல்படுத்தவும், தற்போது மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக இந்தியாவில் தற்போது வாகனங்களின் தேவையானது மலிவாக உள்ள நிலையில், இது மீண்டு வர இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டில் பொருளாதார மந்த நிலை காரணமாக பலத்த அடி வாங்கினாலும், இரு சக்கர வாகன துறையானது பெரிதும் பாதிக்கப்படவில்லை எனலாம். ஆக மற்ற வாகன நிறுவனங்களை விட, கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், விரைவில் மீண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hero Motocorp reopens 1,500 retail outlets across the country including service centre

Hero Motocorp reopens 1,500 retail outlets across the country; also it’s decided to start manufacturing operations in factories located in Haryana and Uttrakhand.
Story first published: Sunday, May 10, 2020, 18:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X