பட்ஜெட்டால் பலன் அடைந்த துறைகள்.. இனி இந்த துறை பங்குகள் தூள் கிளப்பலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்ஜெட் 2022ல் சாமானிய மக்களுக்கு பெரியளவிலான அறிவிப்புகள் இல்லை என்றாலும், உள்கட்டமைப்பு துறைக்கு அதிக முதலீடுகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் உள்கட்டமைப்பு துறை சார்ந்த பங்குகள் உச்சம் தொடத் தொடங்கியுள்ளன.

 

பட்ஜெட் 2022ல் மூலதன செலவினங்களை அரசு கடந்த ஆண்டினை காட்டிலும் 35% அதிகரித்து 7.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில் தான் உள்கட்டமைப்பு நிறுவனங்களின் பங்குகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன.

பட்ஜெட் 2022ல் யாருக்கெல்லாம் வெற்றி.. யாருக்கெல்லாம் தோல்வி..!

மூலதன செலவினங்கள் அதிகரிக்கலாம்

மூலதன செலவினங்கள் அதிகரிக்கலாம்

இது குறித்த ஆய்வில் அதிகப்படியான செலவினங்கள், மூலதன பொருட்கள், கட்டிட வேலை, கட்டிட வேலை செய்ய தேவையான மூலப் பொருட்கள் மற்றும் வணிக வாகனங்களின் தேவை அதிகரிக்கும். இதற்கு நிறுவனங்கள் அதிக செலவினங்களை செய்யலாம். இதன் காரணமாக இத்துறை சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிக்கும். இதன் காரணமாக இது சார்ந்த பங்குகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவனிக்க வேண்டிய பங்குகள்

கவனிக்க வேண்டிய பங்குகள்

குறிப்பாக எல்& டி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், சிமென்ட்ஸ், பிஎன்சி இன்ப்ராடெக் உள்ளிட்ட பல பங்குகள் டாப் லிஸ்டில் உள்ளன. மொத்த மூலதனச் செலவில் 15- 20% அதிகரிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்திருந்தனர்.

யாருக்கு பலன்
 

யாருக்கு பலன்

மொத்தத்தில் பட்ஜெட்டில் சப்ளையின் பக்கம் உள்ள பிரச்சனையில் கவனம் செலுத்துகின்றது. மேலும் பொருளாதாரத்தினை ஊக்குவிக்க மூலதன செலவினங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மானியங்கள் உட்பட மூலதன செலவினங்கள் 10.68 லட்சம் கோடி ரூபாயை தொடலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக இந்த மூலதன செலவினங்கள் மூலம் நேரடியாக இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் பலன் அடைகின்றன.

ஏற்றத்தில் பங்குகள்

ஏற்றத்தில் பங்குகள்

எல் & டி, பிஎன்சி அன்ட் கன்ஸ்ட்ரஷன் மற்றும் கட்டுமான பொருட்கள் சார்ந்த நிறுவனங்கள், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், அல்ட்ரா டெக், டால்மியா பாரத் உள்ளிட்ட பலவும் அரசின் இந்த அறிவிப்பால் பலன் பெறுகின்றன. இதற்கிடையில் தான் பட்ஜெட் தாக்கலை அடுத்து பெரும்பாலான பங்குகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

நெடுஞ்சாலை துறைக்கு ஒதுக்கீடு

நெடுஞ்சாலை துறைக்கு ஒதுக்கீடு

தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு 25,000 கோடி ரூபாய் நிதி மத்திய பட்ஜெட்டில் 2022ல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கதி சக்தி திட்டத்தின் கீழ் போக்குவரத்து கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும், நகர்ப்புற மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் வகையில் திறன் அமைக்க 280 கோடி ரூபாய் நிதியினையும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு 48,000 கோடி ரூபாய் திட்டத்தினையும் ஒதுக்கீடு செய்துள்ளது. அதே போல கதி சக்தி திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மின்சார வாகனங்கள்

மின்சார வாகனங்கள்

மூலதன செலவினங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக வணிக வாகனங்கள், மின்சார வாகன துறைக்கும் மூலதன செலவினங்கள் கைகொடுக்கும். குறிப்பாக மீடியம் டெர்ம் மற்றும் கனரக வாகன பெரும் பலன் அடையலாம் மொத்தத்தில் இத்துறை சார்ந்த பங்குகள் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

high capex spend may support infra and capital goods

high capex spend may support infra and capital goods/பட்ஜெட்டால் பலன் அடைந்த துறைகள்.. இனி இந்த துறை பங்குகள் தூள் கிளப்பலாம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X