பணக்காரர்களுக்கு இரட்டை வருமான வரி பிரச்சனை.. கொரோனா செய்த வினை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் அரசுக்குத் தெரியாமல் வெளிநாட்டில் பல நூறு கோடி ரூபாய்க்கு லைப் இன்சூரன்ஸ் திட்டத்தைப் பெற்று வருவது தெரிய வந்தது. இதனால் பல பணக்காரர்களுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

இந்நிலையில் தற்போது இந்தியாவில் இருக்கும் பல NRI, வெளிநாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த இந்திய ஊழியர்கள், மற்றும் பெரும் தனிநபர் பணக்காரர்கள் (HNI) வெளிநாட்டில் வரி செலுத்துவது மட்டும் அல்லாமல் இந்தியாவிலும் வருமான வரி செலுத்த வேண்டி கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளனர்.

9வது நாளாக சரியும் சர்வதேச தங்கம் விலை.. இந்தியாவில் என்ன நிலவரம்.. எவ்வளவு குறைந்திருக்கு..!

இதனால் இப்பிரிவில் இருக்கும் பலர் இரண்டு முறை வருமான வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாக லாக்டவுன் விதிக்கப்பட்டு விமானப் போக்குவரத்தைத் தடை செய்தது. இது மட்டும் அல்லாமல் கொரோன பரவலைத் தடுக்கப் பல நாடுகள் இந்திய விமானங்களுக்கும், இந்தியப் பயணிகளுக்கும் தங்கள் நாட்டில் வருவதற்குத் தடை விதித்து இருந்தது.

பெரும் பணக்காரர்கள்

பெரும் பணக்காரர்கள்

இதனால் பல NRIகள், வெளிநாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த இந்திய ஊழியர்கள், மற்றும் பெரும் தனிநபர் பணக்காரர்கள் (HNI) ஆகியோர் இந்தியாவில் நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகியது. சரி இதுல என்னப்பா பிரச்சனை-ன்னு நீங்கள் கேட்பது புரிகிறது.

182 நாட்கள்
 

182 நாட்கள்

இந்தியாவில் 182 நாட்களுக்கு அதிகமாக எந்தொரு வெளிநாட்டவர் தங்கியிருந்தாலும் வருமான வரிச் செலுத்தியாக வேண்டும் என்பது முக்கியமான சட்டம். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாகவும், பயணத் தடை காரணமாக நீண்ட காலமாகத் தங்கியிருந்த பலர் தற்போது தத்தம் நாடுகளில் வருமான வரி செலுத்தியதைத் தாண்டி இந்தியாவிலும் வரி செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

தளர்வு இல்லை

தளர்வு இல்லை

2021-22ஆம் நிதியாண்டுக்கான புதிய வரி விதிப்பு சட்ட அறிக்கையிலும், இக்கொரோனா காலத்தில் நீண்ட காலம் இந்தியாவில் தங்கியிருந்த NRI, வெளிநாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த இந்திய ஊழியர்கள், மற்றும் பெரும் தனிநபர் பணக்காரர்களுக்கு (HNI) எவ்விதமான தளர்வு அளிக்கவில்லை.

வருமான வரித் துறை

வருமான வரித் துறை

இந்நிலையில் வருமான வரித் துறையிடம் விமானப் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டதால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா செல்ல முடியவில்லை என்றால் காரணம் கூறினால் கட்டாயம் ஏற்காது. இதனால் இந்தியாவில் 182 நாட்களுக்கு அதிகமாகத் தங்கியிருந்த அனைவரும் வரிச் செலுத்தியாக வேண்டும்.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பல தனியார் முதலீட்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இந்தியாவில் இன்னுமும் தங்கியிருக்கின்றனர், கொரோனா காரணமாக இந்தியா மட்டும் அல்லாமல் அனைத்து நாடுகளும் விசா காலத்தைத் தாண்டி தங்கியிருக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இரண்டு முறை வரி

இரண்டு முறை வரி

மேலும் வருமான வரித்துறை இந்தியாவில் 182 நாட்களுக்கு அதிகமாகத் தங்கியிருந்த NRIகள், வெளிநாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த இந்திய ஊழியர்கள், மற்றும் பெரும் தனிநபர் பணக்காரர்கள் (HNI) பிரிவினருக்குக் கூடுதலான வரி விதிக்கத் திட்டமிடும் எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HNI, Expats, NRIs may face tax in India for longer stay amid Covid-19 restrictions

HNI, Expats, NRIs may face tax in India for longer stay amid Covid-19 restrictions
Story first published: Tuesday, July 27, 2021, 15:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X