பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சுமார் 30 சதவீத வரி விதிக்கப்பட்டது.
30 சதவீதம் வரி அதிகம் என்றாலும் தடை விதிக்காத காரணத்தால் மனதைத் தேற்றிக்கொண்டனர். இந்த 30 சதவீத வரி ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் ஜூலை 1ஆம் தேதி முதல் கூடுதலான வரியும் நடைமுறைக்கு வருகிறது.
தரமான சம்பவம்.. இதுவரை இல்லாத அளவுக்கு 0 பில்லியன் ஏற்றுமதி.. பிரதமர் மோடி பெருமிதம்!

1 சதவீதம் TDS வரி
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின் படி கிரிப்டோகரன்சி, NFT மற்றும் பிற அனைத்து டிஜிட்டல் சொத்துக்கள் மீது செய்யப்படும் முதலீட்டுக்கு கிடைக்கும் லாபத்தில் 30 சதவீதம் கேபிடல் கெயின்ஸ் வரி விதிக்கப்பட்டும், இதேபோல் ஜூலை 1ஆம் தேதி முதல் ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி முதலீடு செய்யும் போது 1 சதவீதம் TDS வரிப் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

டிராக்கிங்
இந்த ஒரு சதவீத வரிப் பிடித்தம் மூலம் அரசுக்குக் கூடுதல் வருமானம் என்றாலும், கிரிப்டோ முதலீட்டுச் சந்தைக்கு எந்தக் கணக்கில் இருந்து யார் முதலீடு செய்கிறார் என்ற முக்கியமான விபரத்தைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும். இந்த 1 சதவீத TDS வரி வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

கணக்கீடு
உதாரணமாக ஒரு வர்த்தகர் ஒரு நாளைக்கு 10 பரிவர்த்தனைகளைத் தலா 10 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் செய்கிறார் என வைத்துக்கொள்வோம். இப்போது 1 சதவீதம் TDS என்றால் அவர்களுக்கு ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் 10,000 ரூபாய் வீதம் 10 பரிவர்த்தனைக்குச் சுமார் 1 லட்சம் ரூபாயை வரியாகச் செலுத்த வேண்டும்.

புதிய முதலீடுகள்
ஆனால் இந்த வர்த்தகத்தை வர்த்தகப் பிளாட்பார்முக்குள் இருக்கும் கணக்கிற்குள்ளேயே வர்த்தகம் செய்தால் 1 சதவீதம் வரி வசூலிக்கப்படாது. புதிதாக வர்த்தகக் கணக்கிற்குள் கொண்டு வரும் போது மட்டுமே வரி வசூலிக்கப்படும். இது கிட்டத்தட்டப் பணம் அனுப்புதல் அல்லது மற்ற நபருக்கு IMPS செய்யும் போது கட்டணம் வசூலிப்பது போன்றதாகும்.

பெரும் முதலீட்டாளர்கள் பாதிப்பு
இந்த 1 சதவீத டிசிஎஸ் வரி குறிப்பிட்ட தொகையைத் தாண்டி முதலீடு செய்பவர்களுக்குத் தான் என்று மத்திய நிதியமைச்சர் இத்தொகை அளவீட்டைத் தெரிவிக்கவில்லை. மேலும் இந்த வரி விதிப்பு பெரும் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் பாதிப்பு.