இனி SMS-ல் பிராட்பேண்ட் & லேண்ட்லைனுக்கு விண்ணப்பிக்கலாம்.. பிஎஸ்என்எல் செம.. தமிழகத்தில் உண்டா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பொதுத்துறையை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், தொடர்ந்து தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க பற்பல அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது.

 

தடாலடியாக சரிந்த பிட்காயின்.. 30,000 டாலருக்கு கீழ் சரிவு..!

தனியார் நிறுவனங்கள் கூட 4ஜில் இருந்து 5ஜியில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் மிக பின் தங்கியுள்ளது. எனினும் தனது பிராட்பேண்ட் மற்றும் லேண்ட்லைன் சேவையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது.

கவர்ச்சிகரமான அறிவிப்பு

கவர்ச்சிகரமான அறிவிப்பு

தற்போது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது.

அந்த வகையில் தற்போது பயனர்கள் தங்களது சேவைகளை எளிதில் அடையும் வகையில், எஸ் எம் எஸ் மூலமாகவே விண்ணப்பிக்க வழிவகை செய்துள்ளது.

எஸ்.எம்.எஸ் மூலமாக சேவை

எஸ்.எம்.எஸ் மூலமாக சேவை

ஆக இப்போது வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் மூலமாக ஒரு எஸ் எம் எஸ் மூலம், புதிய பிராட்பேண்ட் & லேண்ட்லைன் கனக்ஷனுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த பிஎஸ்என்எல்லின் இந்த எஸ் எம் எஸ் சலுகையானது கர்நாடகாவில் இருந்து வந்தது. Now BSNL on Your Doorstep என்ற விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல்-லின் பயனுள்ள சேவை
 

பி.எஸ்.என்.எல்-லின் பயனுள்ள சேவை

பிஎஸ்என்எல்-லின் இந்த சேவையானது புதிய வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் எந்த வகையான சேவை வேண்டும் என்பதை எஸ்.எம்.எஸ்-க்கு அனுப்பலாம். அதன் மூலம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே, பி.எஸ்.என்.எல்லின் சேவைகளை பெற முடியும்.

பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள்

பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள்

அவ்வாறு அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ் ஆனது LL *STDCODE- னை 54141 என்ற எண்ணுக்கு உங்களது பி.எஸ்.என்.எல் மொபைல் எண்ணில் இருந்து அனுப்பலாம். இதே பிராட்பேண்ய் கனெக்சனுக்கு BB *STDCODE என்று அனுப்ப வேண்டும். இந்த இரு சேவைகளும் வேண்டுமெனில் வாடிக்கையாளர்கள் LL+BB*STDCODE என்ற கோடினை 54141 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.

மற்ற வாடிக்கையாளர்கள்

மற்ற வாடிக்கையாளர்கள்

உங்களிடம் பி.எஸ்.என்.எல் சிம் இல்லையெனில் மற்ற மொபைல் எண்ணில் இருந்து 940005414 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் பி.எஸ்.என்.எல் ஆன்லைனில் பில் கட்டண சேவையை தொடங்கியது. அதோடு வாடிக்கையாளர்கள் தங்களது யுபிஐ ஐடி மூலமாக டெபிட் கார்டு, கிரெடிட் கார்டினை அல்லது மற்ற பில் கட்டணங்களையும் செலுத்திக் கொள்ளலாம் என அறிவித்தது.

பி.எஸ்.என்.எல்-லின் இந்த சலுகையானது தற்போதைக்கு கர்நாடகாவில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் இது குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How can apply BSNL new broadband and landline connections via SMS request; check details

BSNL latest updates.. How can apply BSNL new broadband and landline connections via SMS request
Story first published: Tuesday, July 20, 2021, 19:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X