அதிகரித்துள்ள பணவீக்கம்.. மந்த நிலையின் போது எப்படி உங்களை பாதிக்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டுள்ளது. ஆனால் பல அவசர கவனம் தேவைப்படும் பல சிக்கல்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தொடர்ச்சியாக அதிகரித்து வரும் உயர்ந்த அளவிலான சில்லறை பணவீக்கம்.

 

குறிப்பாக நாடு அதிகாரப்பூர்வமாக இரண்டாவது மந்த நிலைக்குள் நுழைந்துள்ள இந்த நிலையில் இப்பிரச்சனைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபரில் சில்லறை பணவீக்கம் 7.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் மிக உயர்ந்ததாகும். இதுவே செப்டம்பரில் 7.27 சதவீதமாக இருந்தது. இதே முந்தைய ஆண்டின் அக்டோபரில் 4.62 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் பணவீக்கம்

அதிகரிக்கும் பணவீக்கம்

இது அக்டோபர் மாதத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக பணவீக்கம் 7 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. குறிப்பாக சில்லறை பணவீக்கம் ஏழு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் இலக்கினை விட அதிகமாக உள்ளது என்பது கவனிக்கதக்க விஷயமாகும். ராய்ட்டர்ஸின் கணிப்பு படி, இது நவம்பர் மாதத்திலும் 7 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களின் வாங்கும் திறனைக் குறைக்கும்

மக்களின் வாங்கும் திறனைக் குறைக்கும்

உயர்ந்த பணவீக்கம் என்பது உயர் பொருளாதார நடவடிக்கைகளின் அறிகுறியாக இருந்தாலும், இது மக்களின் வாங்கும் திறனைக் குறைக்கும். சில்லறை பணவீக்கம், நுகர்வோர் விலை குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது. இது வீடுகளால் தினசரி அடிப்படையில் வாங்கும் பொருட்கள், சேவைகளின் அடிப்படையில் ஏற்படும் மாற்றங்களைக் காண்கிறது.

பொருட்களின் விலை அதிகரிக்கலாம்
 

பொருட்களின் விலை அதிகரிக்கலாம்

இன்னும் இதனை எளிமையாக சொல்லவேண்டுமானால், சில்லறை பணவீக்கம் என்பது உணவு, எரிபொருள், ஆடை மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அன்றாட பொருட்களுக்கு குடும்பங்கள் செலுத்தும் தொகையாகும். இந்த சில்லறை பணவீக்கம் வரவிருக்கும் மாதங்களில் குறையும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கும் நிலையில், பழங்கள், காய்கறிகள், இறைச்சிகள் மற்றும் பிற உணவு பொருட்கள் விலை சற்று அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எரிபொருள் விலைகள் மற்றும் மின்சாரம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளன.

மிகப்பெரிய கவலை

மிகப்பெரிய கவலை

நகர்புறம் மற்றும் கிராமப்புற உணவு பணவீக்கம் இணைந்து 11.07 சதவீதமாக அதிகரித்துள்ளது. உண்மையில் உணவு பணவீக்கம் என்பது ஏழை குடும்பங்களுக்கு மிகபெரிய கவலையாக உள்ளது. ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் தொற்று நோய்களின் போது வருமான இழப்பை எதிர்கொண்டனர்.

அதிகம் செலவிட வேண்டியிருக்கும்

அதிகம் செலவிட வேண்டியிருக்கும்

குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் காய்கறி விலை 20 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்த பின்னர், அக்டோபரில் 22.5 சதவீதமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. பருப்பு வகைகள், மீன் மற்றும் இறைச்சியின் விலையும் 18 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதன் பொருள் நுகர்வோர் இப்போது உணவுப் பொருட்களுக்கு அதிக பணம் செலுத்துகிறார்கள். இதே அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பிற முக்கிய நுகர்வான எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம் இரண்டு சதவீதத்திற்கும் மேலாக ஏற்றம் கண்டுள்ளது. அதே நேரரத்தில் ஹெல்த்கேர் செலவுகள் ஐந்து சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

சேமிப்புகள் குறையும்

சேமிப்புகள் குறையும்

சேமிப்புகள் குறையும்

வேலைவாய்ப்பும் அதிகரிக்கவில்லை

வேலைவாய்ப்பும் அதிகரிக்கவில்லை

CMIE தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக வேலைவாய்ப்பு சுருங்குவதையே சுட்டிக் காட்டுகிறது. லாக்டவுனின் போது இருந்த வீழ்ச்சியில் இருந்து, பிறகு வேலைவாய்ப்பு மீட்பு என்பது ஆரம்பத்தில் சற்று சாதகமாக இருந்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாகவே குறைந்து வருவது கவனிக்கதக்கது. வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ளதால், சேவை துறையை சேர்ந்தவர்கள் பலர் குறைவான வருமானத்தில் வாழ்கிறார்கள்.

தேவையை குறைக்கும்

தேவையை குறைக்கும்

இதன் காரணமாக உணவு, எரிசக்தி பொருட்கள், பிற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அதிக செலவினங்கள் நீண்டகால பெரும் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக மாறும். இதோடு குறைந்த சேமிப்பு என்பது உணவு அல்லாத பொருட்களுக்கான தேவையை குறைக்க கூடும். இதன் விளைவாக ரியல் எஸ்டேட் மற்றும் நுர்வோர் பொருட்கள் போன்ற முக்கிய துறைகளில் வர்த்தகம் குறையலாம்.

பெரியளவில் ஊக்கத்தொகை வேண்டும்

பெரியளவில் ஊக்கத்தொகை வேண்டும்

பல நாடுகளை போலவே இந்தியாவும் ஒரு நெருக்கடியான பொருளாதார சிக்கலை எதிர்கொள்கிறது. ரிசர்வ் வங்கியால் முக்கிய வட்டி விகிதங்களை அதிகரிக்கவோ? குறைக்கவோ முடியவில்லை. ஆக நிலைமை என்னவெனில் இந்த மந்த நிலையை சமாளிக்கும் பொறுப்பில் அரசாங்கம் உள்ளது. ஏற்கனவே பொருளாதாரத்தினை மீட்டெடுக்கும் விதமாக ஊக்கத் தொகையை அறிவித்து வந்தாலும், இன்னும் பெரியளவில் ஊக்கத் தொகை இருக்க வேண்டும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் நம்புகின்றனர்.

நுகர்வினை பாதிக்கும்

நுகர்வினை பாதிக்கும்

பணவீக்க இலக்கினை அதிகரிப்பது ஏழைகளை கடுமையாக பாதிக்கும். இது அவர்களின் நுகர்வுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும். நிபுணர்கள் ஒரு நாடு வளர்ச்சியை ஒரு கட்டமைப்பு முறையில் உயர்த்துவதற்கான வழிகளை வகுக்க வேண்டும், ஆனால் எளிதான கடன் மற்றும் பணப்புழக்கம் போன்ற நடவடிக்கைகளால் அல்ல. அதே சமயம் மந்தநிலை மற்றும் உயரும் பணவீக்கம் ஆகிய இரண்டையும் அதிகாரிகள் சமாளிக்க வேண்டியிருக்கும். ஆக இந்தியா ஒரு நெருக்கடியான கட்டத்தினை கடந்து வர வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும்

வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும்

மேலும் நிலைமையை சமாளிக்க அரசு, உடனடியாக தேவைப்படாத திட்டங்களுக்கு செலவினங்களைக் குறைக்க வேண்டும். ஏனெனில் அந்த பணத்தினை பொருளாதார மீட்சிக்கு திருப்பிவிட முடியும். அதோடு இந்த கடினமான சூழ்நிலையை சமாளிக்க தேவையான முக்கிய நடவடிக்கையே வேலைவாய்ப்பினை உருவாக்குவதாகும். ஏனெனில் இது ஏழ்மையான குடும்பங்களுக்கு வருமான அளவை அதிகரிக்க உதவும்.

இந்த மந்த நிலையிலும் பொருளாதாரம் விரைவாக மீண்டு வந்து கொண்டுள்ளது. ஆனால் அதிகரித்து வரும் பணவீக்கம் மீண்டும் அதனை கட்டுப்படுத்தக்கூடும். ஆக இந்த வளர்ச்சியினைத் தக்க வைத்து கொள்வது கடினம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How does high inflation rate impact you on during this recession period?

Inflation impact.. How does high inflation impact you on during this recession period?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X