இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி மிகப்பெரிய ஐபிஓ-வை வெளியிட நீண்ட காலமாகத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. இந்த ஐபிஓ-விற்காக ரீடைல் முதலீட்டாளர்கள் வரையில் நிறுவன முதலீட்டாளர்கள் வரையில் அனைவரும் காத்திருக்கும் நிலையில் எல்ஐசி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எல்ஐசி ஐபிஓ-வில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டு வரும் நிலையில், நீண்ட கால முதலீட்டுக்கும் இது சாதகமாக இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் இந்த ஐபிஓ-விற்கு மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
கொச்சி விமான நிலைய பங்குகளைப் பெறும் டாடா.. ஏர் இந்தியா மூலம் கிடைத்த ஜாக்பாட்..!

எல்ஐசி ஐபிஓ
எல்ஐசி நிறுவனத்தின் மாபெரும் ஐபிஓ திட்டத்தில் 10 சதவீத பங்குகள் தங்களது பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்ய உள்ளதாகத் திட்டமிட்டு உள்ளது. இதற்கான அனுமதியை மத்திய அரசு தனது நிதியியல் கொள்கை 2022ல் உரிய மாற்றங்களைச் செய்துள்ளது.

நிர்மலா சீதாராமன்
இதேபோல் எல்ஐசி ஐபிஓ 2021-22ஆம் நிதியாண்டில் கட்டாயம் வெளியாகும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலில் தெரிவித்தார். மத்திய அரசிடம் தற்போது பல முக்கியத் தனியார்மயமாக்கல் திட்டம் கையில் இருக்கும் காரணத்தால் எப்போது ஐபிஓ வெளியாகும் என்பது உறுதி செய்யவில்லை.

எல்ஐசி பாலிசிதாரர்கள்
இந்நிலையில் எல்ஐசி ஐபிஓ-வில் பாலிசிதாரர்கள் பிரிவில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் டிமேட் கணக்கு மட்டும் இருந்தால் போதாது, பாலிசிதாரர்கள் கட்டாயம் தங்களது பான் எண்-ஐ இணைக்கப்பட வேண்டும் என எல்ஐசி பொது அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பாலிசிதாரர்கள் பாலிசி உடன் பான் எண்-ஐ எப்படி இணைப்பது எனக் குழப்பத்தில் உள்ளனர்.
இதை எப்படி இணைப்பது என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

தேவையான ஆவணங்கள்
1. முதலில் டீமேட் கணக்குக் கட்டாயம் வேண்டும்.
2. பான் கார்டு மற்றும் உங்களிடம் இருக்கும் எல்ஐசி பாலிசிகள்
3. பான், ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்
4. நீங்கள் கொடுக்கப்படும் மொபைல் எண்ணிற்கு OTP வரும் என்பதும் கையுடன் வைத்திருக்க வேண்டியது அவசியம்

பான் கார்டு அப்டேட்
உங்கள் பான் கார்டு எல்ஐசி டேட்டாபேஸ்-ல் இல்லையெனில் முதலில் அதை அப்டேட் செய்ய வேண்டும்.
1. https://licindia.in/ என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும்.
2. 'Online PAN Registration' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
3. இதன் பின்பு 'Proceed' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
4. இந்தப் பக்கத்தில் மின்னஞ்சல், பான் எண், மொபைல் எண், எல்ஐடி பாலிசி எண் ஆகிய தரவுகள் பதிவிட வேண்டும்.
5. கீழே கொடுக்கப்பட்டு உள்ள Captcha-வை சரியாகப் பதிவிட வேண்டும்
6. நீங்கள் பதிவிட்ட மொபைல் எண்-க்கு OTP பெற வேண்டும்.
7. மொபைல் எண்ணில் பெற்ற OTP-ஐ பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும்
8. சமர்பித்த உடன் வெற்றிகரமாக எல்ஐசி டேட்டாபேஸ்-ல் உங்கள் பான் எண்-ஐ இணைக்கப்பட்டது குறித்து மெசேஜ் வரும்

பான் எண் - எல்ஐசி பாலிசி இணைப்பு
1. இது தான் முக்கியமான கட்டம் நேரடியாகக் கீழ் கொடுக்கப்பட்ட இணையப் பக்கத்திற்குச் செல்லுங்கள்
https://linkpan.licindia.in/UIDSeedingWebApp/getPolicyPANStatus
2. இந்தப் பக்கத்தில் உங்கள் பாலிசி எண், பிறந்த நாள், பான் எண் ஆகியவற்றைப் பதிவு செய்து, captcha-வை கொடுத்துச் சமர்ப்பித்தால் போதுமானது.